லாரன்ஸ் பிஷ்னோய்

பஞ்சாப் நிழலுலக தலைவர்

லாரன்ஸ் பிஷ்னோய் (Lawrence Bishnoi, பிறப்பு: சத்விந்தர் சிங், 12 பிப்ரவரி 1993) என்பவர் ஒரு இந்திய நிழலுலகத் தலைவராவார்.[4] இவர் மீது கொலை, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட இரண்டு டசன் குற்றவியல் வழக்குகள் உள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளை இவர் மறுத்துள்ளார்.[5][6] இவரது கும்பலில் 700 க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுநர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.[7]

லாரன்ஸ் பிஷ்னோய்
பிறப்புசத்விந்தர் சிங்[1]
12 பெப்ரவரி 1993 (1993-02-12) (அகவை 31)[2]
பெரோஸ்பூர், பஞ்சாப், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர் (இளங்கலைச் சட்டம்)
செயற்பாட்டுக்
காலம்
2010–தற்போது
அறியப்படுவதுகனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களை குறிவைத்து கொல்லுதல்
சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்
சித்து மூஸ் வாலா கொலையை திட்டமிட்டது[3]
சுக்தேவ் சிங் கோகமேடி கொலை
Criminal statusசபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

துவக்ககால வாழ்க்கை

தொகு

லாரன்ஸ் பிஷ்னோய் 1993, பிப்ரவரி, 12 அன்று பஞ்சாப்பின், பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் பிறந்தார்.[2][8] இவரது பெற்றோர் சத்விந்தர் சிங் என்று பெயரிட்டனர். குழந்தை பருவத்தில் மிகவும் அழகாக இருந்ததால், குடும்பத்தினர் இவரை செல்லமாக ‘லாரன்ஸ்’ என்று அழைக்கத் தொடங்கினர். இவரது தந்தை அரியானா காவல் துறையில் ஒரு காவலராக இருந்தார். 1997 இல் காவல் துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று விவசாயியானார். பிஷ்னோய் 12 ஆம் வகுப்பு வரை அபோஹரில் படித்தார். 2010 இல் இவர் சண்டிகரில் உள்ள டி.ஏ.வி கல்லூரியில் சேர்ந்தார். அங்கு 2011 இல் பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர் பேரவையில் சேர்ந்தார். அங்கு இவர் குற்றவியல் கும்பலைச் சேர்ந்த கோல்டி பிரார் என்னும் சத்தீந்தர் சிங்கின் நண்பரானார். இவர்கள் பல்கலைக்கழக அரசியலில் ஈடுபட்டு குற்றங்களைச் செய்யத் தொடங்கினர்.[2] இவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் தனது சட்டப் படிப்பை நிறைவு செய்தார்.[8]

குற்றச் செயல்கள்

தொகு

பிஷ்னோய் சண்டிகரில் குற்றச் செயல்களைத் தொடங்கினார். கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களுக்காக 2010 மற்றும் 2012 இக்கு இடையில் இவருக்கு எதிராக பல முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் மாணவர் பேரவை அரசியலில் இவர் ஈடுபட்டபோது செய்தவை தொடர்பானவை. சண்டிகரில் இவர் மீது பதிவு செய்யப்பட்ட ஏழு முதல் தகவர் அறிக்கைளில், நான்கு வழக்குகளில் இருந்து இவர் விடுவிக்கப்பட்டார். மற்ற மூன்று வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

சிறையில் இருந்த காலத்தில், பிஷ்னோய் சக கைதிகளுடன் நட்பைப் பெற்றார். விடுதலையான பின்னர் ஆயுத கடத்தல்காரர்கள் மற்றும் பிற உள்ளூர் குற்றவாளிகளை சந்தித்தார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இவர் இருந்த காலம் முழுவதும் இவரது கும்பலின் அளவு அதிகரித்தது.[9]

2013 இல் பட்டம் பெற்ற பிறகு, முக்த்சரில் நடந்த அரசு கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளரையும், லூதியானா மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரையும் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

பிஷ்னோய் அடிக்கடி தலைமறைவாக வேண்டியிருந்தது. 2013 இக்குப் பிறகு, இவர் மதுபானக் கடத்தலில் இறங்கினார். தனது கும்பலில் கொலைகாரர்களுக்கும் அடைக்கலம் கொடுத்தார். 2014 ஆம் ஆண்டில், இவர் இராசத்தான் காவல்துறையினருடன் ஆயுத மோதலில் ஈடுபட்டார், பின்னர் கைது செய்யபட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். பிஷ்னேய் மீது சிறையில் முக்கிய சாட்சியை கொலை செய்த வழக்கு பதிவானது.[9]

இவர் அரசியல்வாதியாக இருந்து குற்றக் கும்பல் தலைவனாக மாறிய ஜஸ்விந்தர் சிங் என்ற "ராக்கி."யுடன் நட்பு கொண்டார். ராக்கியின் கீழ், இராசத்தானின் பரத்பூரில் தீவிரமாக செயல்பட்டார். ராக்கி 2016 ஆம் ஆண்டில் ஜெய்பால் புல்லரால் என்பவரால் படுகொலை செய்யப்பட்டார், அவர் 2020 இல் சுட்டுக் கொல்லப்பட்டார்.[4]

பிஷ்னோய் பரத்பூர் சிறையில் இருந்தபோது, ​​சிறை ஊழியர்களின் உதவியைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. 2021 இல் இவர் மகாராட்டிர ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் கட்டுப்பாடு சட்டத்தின் (MCOCA) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தில்லியில் உள்ள திகார் சிறைக்கு மாற்றப்பட்டார். அதிகாரிகளின் கூற்றுப்படி, சிறைக்கு வெளியே உள்ள தனது கூட்டாளிகளுடன் தொடர்பு கொள்ள பிஷ்னோய் இணையவழி ஒலி பரிமாற்ற அழைப்புகளைப் பயன்படுத்துகிறார்.[9]

2023 ஆகத்தில், போதைப்பொருள் கடத்தல் வழக்கைக் காரணம் காட்டி, குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை பிஷ்னோயை காவலில் எடுத்தது. மேலும் இவர் சபர்மதி சிறையில் உள்ள உயர் பாதுகாப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார்.[10]

தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) அறிக்கை பிஷ்னோய் மற்றும் இவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோருக்கு காலிஸ்தான் சார்பு அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக காட்டியுள்ளது.[11]

பிஷ்னோய் கும்பல் இந்தியாவில் 5 மாநிலங்களில் 700 உறுப்பினர்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது, இது இந்தியாவுக்கு வெளியேயும் செயல்படுவதாக கூறப்படுகிறது.[7]

சல்மான் கான்

தொகு

2018 ஆம் ஆண்டில், பிஷ்னோயின் நெருங்கிய கூட்டாளியான சம்பத் நெஹ்ரா, சல்மான் கான் இல்லத்தின் மீது ஒரு தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. சல்மான் கான் மீது புல்வாய் மான்களை வேட்டையாடிய குற்றச்சாட்டு உள்ளதால் அவரை படுகொலை செய்யும் பணியில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. காவல்துறையினரின் கூற்றுப்படி, பிஷ்னோய் கும்பல் புல்வாய் மானினங்களை புனிதமான ஒன்றாக கருதுகின்ற இனத்தைச் சேர்ந்தவர்.[4][9][7]

மிரட்டி பணம் பறித்தல் வழக்குக்காக ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்த காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டபோது, ​​பிஷ்னோய், "சல்மான் கான் இங்கே, ஜோத்பூரில் கொல்லப்படுவார்... அப்போது அவருக்கு எங்கள் உண்மையான முகம் தெரியவரும்... இப்போது, நான் ஏதாவது பெரிய குற்றம் செய்ய வேண்டும் என்று காவல் துறையினர் விரும்பினால், நான் சல்மான் கானை ஜோத்பூரில் கொன்றுவிடுவேன். பிஷ்னோய் தன்மீதான, குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை என்று கூறினார்.[12][13]

2023 நவம்பரில், சல்மான்கானுடன் தொடர்பு கொண்டதாகக் கூறப்படும் நடிகர்-பாடகர் ஜிப்பி கிரேவாலின் வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு பிஷ்னோய் பொறுப்பேற்றார். ஆனால் கிரேவால் சல்மான்கானுடன் தனக்கு எந்த நட்பும் இல்லை என்று மறுத்தார்.[14][15]

சித்து மூசேவாலா படுகொலை

தொகு

29, மே, 2022 அன்று, பஞ்சாபி பாடகர் சித்து மூசேவாலா பஞ்சாப்பின் மானசாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.[16] படுகொலை நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, துப்பாக்கிச் சூட்டுக்கான பொறுப்பை கோல்டி பிரார் ஏற்றார். அவர் பிஷ்னோயுடன் சேர்ந்து சதித்திட்டத்தை வடிவமைத்ததாகக் கூறினார். பிஷ்னோயின் கும்பல் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில், பிஷ்னோய் திகார் சிறையில் காவலில் இருந்தார்.[17][6] தில்லி காவல் துறையின் சிறப்பு பிரிவு விசாரணைக்காக பிஷ்னோய் ஐந்து நாள் காவலில் எடுக்கபட்டார்.[18]

சித்து மூசேவாலா படுகொலை செய்யப்பட்ட உடனேயே, பிஷ்னோய் தில்லி உயர்நீதிமன்றத்தில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பஞ்சாப் காவல்துறையின் மோதல் கொலைக்கு (போலி என்கவுண்டர்) அஞ்சுவதாகவும் கூறி மனு தாக்கல் செய்தார். தில்லி காவல்துறையும், திகார் சிறை அதிகாரிகளும் தனது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், தான் சரியான முறையில் கைவிலங்கிடப்பட வேண்டும் என்றும் முறையிட்டார் . பின்னர் அந்த மனுவை தில்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து திரும்பப் பெற்றார். பின்னர் இவர் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தனது மனுவையும் திரும்பப் பெற்றார்.[19][20]

சுக்தூல் சிங் கொலை

தொகு

21, செப்டம்பர், 2023 அன்று, காலிஸ்தானி பிரிவினைவாதி சுக்தூல் சிங் கில் அல்லது சுகா துனேக் கொல்லப்பட்டதற்கு பிஷ்னோய் பொறுப்பேற்றார்.[21][22]

சுக்தேவ் சிங் கோகமேதி படுகொலை

தொகு

5, திசம்பர், 2023 அன்று, கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமேதி ஜெய்ப்பூரில் சுட்டுக் கொல்லப்பட்டார். படுகொலை நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ரோஹித் கோதாரா துப்பாக்கிச் சூட்டுக்குப் பொறுப்பேற்றார்.[23][24][25]

பாபா சித்திக் கொலை

தொகு

சல்மான் கானுடனான தொடர்பு காரணமாக, 12, அக்டோபர், 2024 அன்று பாபா சித்திக் கொல்லப்பட்டதற்கு பிஷ்னோயே காரணம் என்று கூறப்படுகிறது.[26]

மேற்கோள்கள்

தொகு
  1. "பாபா சித்தீக்கி வழக்கு: லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை பற்றி தெரியுமா?". BBC News தமிழ். 2024-10-15. பார்க்கப்பட்ட நாள் 2024-10-16.
  2. 2.0 2.1 2.2 "Who is Lawrence Bishnoi, whose gang shot Sidhu Moose Wala". India Today. பார்க்கப்பட்ட நாள் 4 May 2024.
  3. "Lawrence Bishnoi admits he planned Moose Wala killing, but doesn't know shooters | Chandigarh News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 4 May 2024.
  4. 4.0 4.1 4.2 "Who is Lawrence Bishnoi whose gang claimed to have killed Sidhu Moose Wala". The Indian Express (in ஆங்கிலம்). 31 May 2022. பார்க்கப்பட்ட நாள் 4 May 2024.
  5. "Notorious gangster threatens to kill Salman Khan". The Asian Post. 8 January 2018. பார்க்கப்பட்ட நாள் 19 July 2022.
  6. 6.0 6.1 "Lawrence Bishnoi, being investigated in the Sidhu Moose Wala murder, threatened Salman Khan's life in 2018: 'Jodhpur mein hi maarenge…'". The Indian Express (in ஆங்கிலம்). 31 May 2022. பார்க்கப்பட்ட நாள் 31 May 2022.
  7. 7.0 7.1 7.2 Ojha, Arvind (31 May 2022). "'Will kill Salman Khan in Jodhpur': Watch Lawrence Bishnoi's threat to Bollywood star in 2018 | Video". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 31 May 2022.
  8. 8.0 8.1 Chandigar, Arvind Ojha (30 May 2022). "Who is Lawrence Bishnoi, whose gang shot Sidhu Moose Wala". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 31 May 2022.
  9. 9.0 9.1 9.2 9.3 . 
  10. "Gangster Lawrence Bishnoi Sent To High-Security Gujarat Jail In Drugs Case". என்டிடிவி. 28 August 2023. https://www.ndtv.com/india-news/gangster-lawrence-bishnoi-sent-to-high-security-sabarmati-jail-in-gujarat-in-drugs-case-4336764. 
  11. "NIA files chargesheet against Lawrence Bishnoi, Goldy Brar on terror nexus case". Hindustan Times (in ஆங்கிலம்). 24 March 2023. பார்க்கப்பட்ட நாள் 8 November 2023.
  12. "Salman Khan Gets Death Threat From Gangster". NDTV.com. https://www.ndtv.com/india-news/salman-khan-gets-death-threat-from-notorious-gangster-1796491. 
  13. "Salman Khan issued death threats by Rajasthan-based gangster; linked to black buck case?". Firstpost (in ஆங்கிலம்). 6 January 2018. பார்க்கப்பட்ட நாள் 31 May 2022.
  14. Desk, Wb. ""Salman Khan is not my friend"". ARY News. பார்க்கப்பட்ட நாள் 7 December 2023.
  15. Richter, Brent. "Bollywood actor's home reportedly targeted in West Vancouver shooting". North Shore News. பார்க்கப்பட்ட நாள் 7 December 2023.
  16. "Days after his security trimmed, Congress leader Moosewala shot dead in Punjab". The Indian Express (in ஆங்கிலம்). 30 May 2022. பார்க்கப்பட்ட நாள் 31 May 2022.
  17. "Five things to know about Goldy Brar, who claimed responsibility for Sidhu Moosewala's death". The Indian Express (in ஆங்கிலம்). 31 May 2022. பார்க்கப்பட்ட நாள் 31 May 2022.
  18. Haider, Tanseem; Ojha, Arvind (31 May 2022). "Delhi Police Special Cell gets 5-day custody of gangster Lawrence Bishnoi in Sidhu Moose Wala murder case". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 June 2022.
  19. "Lawrence Bishnoi moves Punjab and Haryana High Court after withdrawing plea from Delhi High Court". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 June 2022.
  20. "Sidhu Moose Wala murder: Lawrence Bishnoi takes back Delhi HC plea, will move Punjab high court". Hindustan Times (in ஆங்கிலம்). 1 June 2022. பார்க்கப்பட்ட நாள் 2 June 2022.
  21. "Two rival Punjabi gangsters claim responsibility for Sukhdev Singh's death in Canada". இந்தியன் எக்சுபிரசு. 21 September 2023. பார்க்கப்பட்ட நாள் 21 September 2023.
  22. "Lawrence Bishnoi claims responsibility for Khalistani freedom fighter Sukhdev Singh's killing in Canada". Mint. 21 September 2023. பார்க்கப்பட்ட நாள் 21 September 2023.
  23. "Rashtriya Rajput Karni Sena chief Sukhdev Singh Gogamedi shot dead in Jaipur". The Times of India. 10 December 2023. https://timesofindia.indiatimes.com/india/rashtriya-rajput-karni-sena-chief-sukhdev-singh-gogamedi-shot-dead-in-jaipur/articleshow/105753284.cms?from=mdr. 
  24. "Karni Sena chief murder: Lawrence Bishnoi gang claims attack, protests in Jaipur". India Today. https://www.indiatoday.in/india/story/karni-sena-chief-sukhdev-singh-gogamedi-shot-dead-lawrence-bishnoi-gang-member-claims-responsibility-2472251-2023-12-05. 
  25. "‘Rajasthan bandh’ called today over Karni Sena chief Sukhdev Gogamedi's murder". mint. 6 December 2023. https://www.livemint.com/news/india/rajasthan-bandh-called-over-karni-sena-chief-sukhdev-singh-gogamedis-murder-details-here-11701827507953.html. 
  26. "Baba Siddique murder: Who is Lawrence Bishnoi, jailed gangster said to be involved in NCP leader's killing?". Financialexpress (in ஆங்கிலம்). 13 October 2024. பார்க்கப்பட்ட நாள் 13 October 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாரன்ஸ்_பிஷ்னோய்&oldid=4119388" இலிருந்து மீள்விக்கப்பட்டது