பாரதிய கிரந்தி தளம்

பாரதிய கிரந்தி தளம் (பா. கி. த.) என்பது இந்தியாவில் உத்தரப் பிரதேச முதல்வர் சரண் சிங்கால் உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும். அக்டோபர் 1967 இல் லக்னோவில் நடந்த கூட்டத்தில் கட்சி நிறுவப்பட்டது.[1] 1977 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, பாரதிய கிரந்தி தளத்தின் பின் வந்த கட்சியான பாரதிய லோக் தளம் ஜனதா கட்சியில் இணைக்கப்பட்டது.[2]

பாரதிய கிரந்தி தளம்
நிறுவனர்சரண் சிங்
தொடக்கம்அக்டோபர் 1967
பின்னர்பாரதிய லோக் தளம்
நிறங்கள்பச்சை
தேர்தல் சின்னம்
இந்தியா அரசியல்

1967 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி ஹுமாயூன் கபீர் அனைத்து காங்கிரஸ் அல்லாத முதலமைச்சர்கள் மற்றும் பிற முக்கிய தலைவர்களின் கூட்டத்தை தில்லியில் ஏற்பாடு செய்தபோது பா. கி. த. உருவாவதற்கான விதைகள் விதைக்கப்பட்டன.[3] நவம்பர் 1967 இல் பா. கி. த. வின் இந்தூர் அமர்வில், கட்சியின் முதல் தலைவராக மகாமாயா பிரசாத் சின்கா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

மேலும் பார்க்கவும்

தொகு
  • இந்திய தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்த கட்சிகள்

குறிப்புகள்

தொகு
  1. Wallace, Paul. India: The Dispersion of Political Power Paul Wallace, in Asian Survey, Vol. 8, No. 2, A Survey of Asia in 1967: Part II. (Feb., 1968), pp. 87-96.
  2. ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு. The Communist Party in Kerala — Six Decades of Struggle and Advance. புது தில்லி: National Book Centre, 1994. p. 265-266
  3. Brass, Paul R. (2014). An Indian Political Life: Charan Singh and Congress Politics, 1967 to 1987 - Vol.3 (The Politics of Northern India) (in ஆங்கிலம்). Sage India. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9351500322.
  4. Brass, Paul R. (2014). An Indian Political Life: Charan Singh and Congress Politics, 1967 to 1987 - Vol.3 (The Politics of Northern India) (in ஆங்கிலம்). Sage India. p. 83. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9351500322.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரதிய_கிரந்தி_தளம்&oldid=3699173" இலிருந்து மீள்விக்கப்பட்டது