பாரதிய ஜனசங்கம்

இந்திய அரசியல் கட்சி
(பாரதீய ஜன சங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாரதிய ஜன சங்கம் (Bhartiya Jan Sangh)(இந்தி:ஜன் சங்) 1951 முதல் 1977 வரை இயங்கிய ஓர் அரசியல் கட்சியாகும்.[1] இது பின்னர் இந்தியாவின் முன்னணிக் கட்சிகளில் ஒன்றான பாரதிய ஜனதா கட்சியாக உருவெடுத்தது. 21 அக்டோபர் 1951 அன்று தில்லியில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் என்னும் ஆர். எஸ். எஸ் உடன் கலந்தாலோசித்து சியாமா பிரசாத் முகர்ஜியால் நிறுவப்பட்டது. கட்சியின் சின்னமாக தீபம் (விளக்கு) இருந்தது. 1952ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று இடங்களில் வென்றது. 1967ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கூடுதலான இடங்களை வென்றது. சியாமா பிரசாத் முகர்ஜிக்குப் பின்னர் தீனதயாள் உபாத்தியாயா தலைவரானர்.

பாரதிய ஜன சங்கம்
தொடக்கம்1951
கலைப்பு1977
பிரிவுஇந்திய தேசிய காங்கிரஸ்
இணைந்ததுஜனதா கட்சி
பின்னர்பாரதிய ஜனதா கட்சி
கொள்கைஇந்து தேசியம், இந்துத்துவம்
தேர்தல் சின்னம்
இந்தியா அரசியல்

தலைவர்களின் காலவரிசை பட்டியல்

தொகு
# உருவப்படம் பெயர் காலம்
1   சியாமா பிரசாத் முகர்ஜி 1951–52
2 மௌலி சந்திர சர்மா 1954
3 பிரேம் நாத் டோக்ரா 1955
4 தேபபிரசாத் கோஷ் 1956–59
5 பிதாம்பர் தாஸ் 1960
6 அவசரல ராமராவ் 1961
(4) தேபாபிரசாத் கோஷ் 1962
7 ரகு வீரா 1963
(4) தேபாபிரசாத் கோஷ் 1964
8 பச்ராஜ் வியாஸ் 1965
9 பால்ராஜ் மாதோக் 1966
10   தீனதயாள் உபாத்தியாயா 1967–68
11   அடல் பிஹாரி வாஜ்பாய் 1968–72
12   லா. கி. அத்வானி 1973–77
மேலும் பார்க்க பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர்கள்

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-06-13. பார்க்கப்பட்ட நாள் 2015-04-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரதிய_ஜனசங்கம்&oldid=4090745" இலிருந்து மீள்விக்கப்பட்டது