பாரத்பென்சு

பாரத்பென்சு டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெஹிகிள் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் (DICV) நிறுவனத்தின் வணிகச்சின்னமாகும். ஜெர்மனி நாட்டை தலைமையகமாகக் கொண்ட டெய்ம்லர் ஏஜி நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்நிறுவனம் 2011ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும்.[1][2] வர்த்தக சரக்கு வாகனங்கள் மற்றும் பேருந்து தயாரிப்பில் தனக்கென தனி அடையாளமாக விளங்கும் பாரத்பென்ஸ் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையின் அருகில் உள்ள ஒரகடம் சிப்காட் மையத்தில் அமைந்துள்ளது.

பாரத்பென்ஸ்
வகைBrand
நிறுவுகைபெப்ரவரி 17, 2011
தலைமையகம்சென்னை, இந்தியா
முதன்மை நபர்கள்சத்யகம் ஆர்யா, நிர்வாக இயக்குனர் மற்றும் CEO
தொழில்துறைAutomotive
உற்பத்திகள்டிரக் வகை சரக்கு வாகனங்கள்
பேருந்துகள்
சேவைகள்நிதி வழங்குதல்
உரிமையாளர்கள்டெய்ம்லர் ஏஜி
பணியாளர்3,000 -ம் மேல்
தாய் நிறுவனம்டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெஹிகிள் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்

"பாரத்" என்னும் பெயர் இந்தியாவை அடையாளப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.[1]

வரலாறு தொகு

 
ஹனோவர் நகரின் கண்காட்சியின் போது பாரதபென்சு கனரகவாகனம்

சரக்கு வாகனங்கள் தயாரிப்பில் பெரிய அளவில் ஈடுபட்டுள்ள ஜெர்மனியைச் சேர்ந்த நிறுவனமான டெய்ம்லர், இந்தியாவின் ஹீரோ குரூப் நிறுவனங்களுடன் இணைந்து, சென்னையில் வர்த்தக வாகனங்கள் உற்பத்தி பிரிவை துவக்குவதற்காக 2008ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு Daimler Hero Commercial Vehicles (DHCV) என்ற நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி கூட்டு முயற்சியில் அமைக்கப்படும் இந்த நிறுவனத்திற்காக, ஐந்து ஆண்டுகளில், 4,400 கோடி ரூபாய் முதலீடு செய்வதாகவும், சென்னையில் இருந்து 40 கி.மீ., தொலைவில் உள்ள ஒரகடத்தில், மாநில அரசின் சிப்காட் தொழிற் பூங்காவில், 400 ஏக்கர் பரப்பளவில் இந்த தொழிற்சாலை அமைக்கப்படுவதாகவும் திட்டமிடப்பட்டது.[3] மேலும் இந்த தொழிற்சாலையில், புதிய ரக, குறைந்த விலையிலான வர்த்தக வாகனங்கள் தயாரித்து, உள்நாட்டில் விற்பதோடு, வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. ஒப்பந்தப்படி, உற்பத்தி பிரிவில், 60 சதவீத பங்கை டெய்ம்லர் நிறுவனமும், 40 சதவீத பங்கை ஹீரோ நிறுவனமும் கொண்டிருக்கும். டெய்ம்லர் நிறுவனம் ரூ. 1,400 கோடியும், ஹீரோ நிறுவனம் ரூ. 900 கோடியும் முதலீடு செய்வதாகவும் அதன்படி ஆரம்பத்தில் ஆண்டுக்கு 70 ஆயிரம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் திட்டங்கள் தீட்டப்பட்டன.[4] .

ஆனால் இந்தியாவில் ஏற்பட்ட எதிர்பராத தொழில் இழப்புகள் மற்றும் வளர்ச்சியின்மையின் காரணமாக இந்த கூட்டு நிறுவனத்தை கலைப்பதாக ஏப்ரல் 15, 2009 -ல் அறிவித்தனர்.[5][6] அதன்படி ஹிரோ நிறுவனம் தனது 40 சதவீத பங்குகளை டெய்ம்லர் நிறுவனத்திடமே திரும்ப கொடுத்து தனது சொந்த தயாரிப்புகளில் கவனம் செலுத்த முடிவெடுத்தனர்.[7] எனவே 100 சதவீத பங்குகளையும் கொண்டதாக டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெஹிகிள் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் என பெயர் மாற்றப்பட்ட டெய்ம்லர் நிறுவனத்தின் துணை நிறுவனமானது.

 
BharatBenz MDT (Medium- Duty Truck) 914

பாரத்பென்சு என்ற வர்த்தக பெயரானது சென்னையில் பெப்ரவரி 17,2011 ல் டெய்ம்லர் நிறுவனத்தின் தலைவரான Dieter Zetsche அறிமுகப்படுத்தினார். மேலும். சென்னையில் தயாரிக்கப்பட்ட முதல் வணிக பயன்பாட்டுக்கான முதல் சரக்கு வாகனம் சனவரி 4,2012 டெல்லியில் காட்சிக்கு வைக்கப்பட்டது.[8] தனது சக போட்டியாளர்களான அசோக் லேலண்ட் மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்ற இந்திய நிறுவனங்களுக்கும், சர்வதேச நிறுவன கூட்டிணைப்பான வால்வோ -எய்கர் வர்த்தக வாகனங்கள் போன்ற நிறுவனங்களுக்கும் மத்தியில் தனகக்கான சந்தையைக் கவரும் விதமாக ஒரே ஆண்டுற்குள் தனது வாகனத்தை தயாரித்து அதை காட்சிப்படுத்தியது சிறந்த முடிவாக கருதப்பட்டது. மேலும் 25டன் முதல் 31 டன் சுமை இழுக்கும் திறன் கொண்ட பிரிவில் 3 புதிய டிரக் மாடல்களை இந்திய வாகனச்சந்தையில் முதலாவதாக விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்தியா முழுவதும் 30 க்கும் மேற்பட்ட விற்பனை முகவர்கள் வழியாக பாரத் பென்ஸ் டிரக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் ஒரே கூரையின் கீழ் விற்பனை, நிதி உதவி உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஒருங்கிணைந்து பெறும் வகையில் எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, சுந்தரம் பைனான்ஸ் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி லிட் போன்ற நிறுவனங்களுடன் பாரத்பென்சு வணிக ஒப்பந்தம் செய்திருக்கிறது. 2013-ம் ஆண்டு முதல் இந்நிறுவனம் உள்நாட்டு விற்பனையுடன், டிரக்குகளை சென்னையிலிருந்து உலக சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்துவருவது கவனிக்கத்தக்கது. இதுவரை 40 ஆயிரத்துக்கும் அதிகமான டிரக்குகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது

பேருந்து தயாரிப்பு தொகு

மே மாதம் 2015 ம் ஆண்டு முதல் சென்னை ஒரகடம் தொழிற்சாலையில் பேருந்துகளையும் தயாரிக்க தொடங்கியது. பாரத்பென்சு மட்டுமல்லாது மெர்சுடீசு பென்சு வகை வர்த்தக பெயரிலான பேருந்துகளையும் தயாரித்து வருகிறது. 9 டன் பிரிவில் பள்ளிப் பேருந்துகள் , சுற்றுலா பேருந்துகள் மற்றும் அலுவலக பேருந்துகளும் 16 மற்றும் 24 டன் பிரிவில் மெர்சிடீஸ் பென்ஸ் மல்ட்டி ஆக்ஸில் பஸ் மற்றும் பஸ் சேஸிஸ் ஆகியவற்றையும் தயாரித்து இந்தியா மட்டுமல்லாது ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.


சரக்கு வாகனங்களின் வரிசை தொகு

மிதமான வாகன வரிசை தொகு

914R MD (9.6t GVW Truck, 140 hp)
914R MD Inpower (10.6t GVW Truck, 140 hp)
1214R MD (11.9t GVW Truck, 140 hp)
1214R MD Inpower (11.9t GVW Truck, 140 hp)
1214RE MD (12.8t GVW Truck, 140 hp)
1214RE MD Inpower (13.0t GVW Truck, 140 hp)
1217C MD (13.0t GVW Tipper, 170 hp)

கடின வகை வாகன வரிசை தொகு

1617R (16t Gross Vehicle Weight Truck, 170 hp)
1623R (16t GVW Truck, 230 hp)
1623C (16t GVW Tipper, 230 hp)
2523R (25t GVW Truck, 230 hp)
2523C (25t GVW Tipper, 230 hp)
2528C (25t GVW Tipper, 280 hp)
2528CM (25t GVW Mining Tipper,280 hp)
3123R (31t GVW Truck, 230 hp)
3128C (31t GVW Tipper, 280 hp)
3128CM (31t GVW Mining Tipper, 280 hp)
3143CM (31t GVW Mining Tipper, 430 hp)
3723R (37t GVW Truck, 230 hp)
3723C (must be ) 4023T (40t GVW Tractor, 230 hp)
4028T (40t GVW Tractor, 280 hp)
4928T (49t GVW Tractor, 280 hp)
4940T (49t GVW Tractor, 400 hp)[9]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 Daimler News[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "The Hindu-BharatBenz trucks from Daimler by mid-2012". Archived from the original on 2012-02-09. பார்க்கப்பட்ட நாள் 2012-02-23.
  3. "Daimler News - The Indo-German joint venture Daimler Hero Commercial Vehicles (DHCV)". Archived from the original on 2016-04-22. பார்க்கப்பட்ட நாள் 2012-02-23.
  4. Economic Times - Daimler-Hero JV to start in 2010, make 70,000 trucks
  5. "Money Control News- Hero pulls out of Rs 4400cr Daimler JV". Archived from the original on 2015-05-26. பார்க்கப்பட்ட நாள் 2012-02-23.
  6. Daimler News - Repositioning of the Daimler Hero Commercial Vehicles Ltd. joint venture in India பரணிடப்பட்டது மார்ச்சு 21, 2012 at the வந்தவழி இயந்திரம்
  7. Hindustan Times - Hero exits truck J-V with Daimler, citing slowdown[தொடர்பிழந்த இணைப்பு]
  8. "Daimler News - Daimler Unveils BharatBenz – An Exclusive Brand for its Trucks in India". Archived from the original on 2017-04-14. பார்க்கப்பட்ட நாள் 2012-02-23.
  9. "Archived copy". Archived from the original on 2016-03-27. பார்க்கப்பட்ட நாள் 2016-03-24.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரத்பென்சு&oldid=3711233" இலிருந்து மீள்விக்கப்பட்டது