பாரத் கூட்டுறவு வங்கி

பாரத் கூட்டுறவு வங்கி லிமிடெட், மும்பை நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு 21 ஆகஸ்டு 1978 முதல் செயல்படும் ஒரு கூட்டுறவு வங்கி ஆகும். உறுப்பினர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 17 நிர்வாகக் குழுவினரும், ஒரு மேலாண்மை இயக்குநர் & தலைமைச் செயல் அலுவலரும் வங்கியை நிர்வகிக்கின்றனர்.[1] இது மகாராட்டிரம், குஜராத் மற்றும் கர்நாடகம் மாநிலங்களில் பெங்களூரு, மங்களூரு, அகமதாபாத் போன்ற பிற இந்திய நகரங்களிலும் கிளைகள் கொண்டுள்ளது. 31 மார்ச்சு 2022 முடிய இவ்வங்கி 103 கிளைகளும்; 1394 ஊழியர்களும் கொண்டுள்ளது. நவி மும்பை பகுதியின் ஐரோலியில் இவ்வங்கி செப்டம்பர் 2015இல் தனது 75வது கிளையை துவக்கியது.[2]

பாரத் கூட்டுறவு நகர வங்கி லிமிடெட்
வகைவங்கி
தொழில்துறைகூட்டுறவு வங்கி
உற்பத்திகள்வங்கித் தொழில்
பணியாளர்1394

இவ்வங்கி தனது உறுப்பினர்களிடமிருந்து சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு, நிரந்தர வைப்பு போன்ற சேமிப்புத் திட்டங்களையும், சிறு, குறி, நடுத்தர கடன்களையும் வழங்கி வருகிறது. இவ்வங்கியின் தலைமையகம் மற்றும் கிளைகளில் பாதுகாப்புப் பெட்டகம் கொண்டுள்ளது. 2012 முதல் இவ்வங்கி பற்று அட்டை வழங்கி வருகிறது. மேலும் இவ்வங்கி இணைய வங்கி மற்றும் நகர்பேசி இயங்குதளம் மூலம் வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதிகளை வழங்கியுள்ளது. மேலும் வெளிநாடுகளில் வாழும் தங்கள் உறவினர்களுக்கு கல்வி, மருத்துவம், பரிசு வழங்குதல் போன்ற காரணங்களுக்காக வெளிநாட்டுக்கு இவ்வங்கி மூலம் பணம் அனுப்பும் வசதியுள்ளது.[3]

வழங்கும் கடன்கள்

தொகு
  • வீட்டுவசதி கடன்
    • வீட்டுமனை கடன், புதிய வீடு கட்டும் கடன் (அதிக பட்சம் 70 இலட்சம்)
  • அடமானக் கடன்
  • உயர் கல்விக் கடன்
  • தங்க நகைக் கடன்
  • அரசு பத்திரங்கள் மீதான கடன்
  • நுகர்வோர் கடன்
  • தனிநபர் கடன்
  • வாகனக் கடன்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரத்_கூட்டுறவு_வங்கி&oldid=3737237" இலிருந்து மீள்விக்கப்பட்டது