பரான், இராஜஸ்தான்

(பாரான், இராஜஸ்தான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாரான் (Baran), இந்தியாவின் மேற்கில் அமைந்த இராஜஸ்தான் மாநிலத்தில் தென்கிழக்கில் உள்ள பாரான் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம்[1][2] மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூருக்கு தென்கிழக்கே 300 கிலோ மீட்டர் தொலைவிலும்; இந்தியத் தலைநகரான புது தில்லிக்கு தெற்கே 600 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இதன் கிழக்கே கோட்டா நகரம் 74 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனருகே சாப்ரா நகரம் அமைந்துள்ளது.

பாரான்
நகரம்
பாரான் is located in இராசத்தான்
பாரான்
பாரான்
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் பாரான் நகரத்தின் அமைவிடம்
பாரான் is located in இந்தியா
பாரான்
பாரான்
பாரான் (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°06′N 76°31′E / 25.1°N 76.52°E / 25.1; 76.52
நாடுஇந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
மாவட்டம்பாரான்
பரப்பளவு
 • மொத்தம்72.36 km2 (27.94 sq mi)
ஏற்றம்
262 m (860 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,17,992
 • அடர்த்தி1,600/km2 (4,200/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
325205
தொலைபேசி குறியீடு07453
வாகனப் பதிவுRJ-28
இணையதளம்baran.rajasthan.gov.in

அமைவிடம்

தொகு

கடல்மட்டத்திலிருந்து 262 மீட்டர் உயரத்தில் உள்ள பாரான் நகரத்தைச் சுற்றிலும் காளி சிந்து ஆறு, பார்வதி ஆறு மற்றும் பர்பன் ஆறுகள் பாய்கிறது. இது இராஜஸ்தான்-மத்தியப் பிரதேசம் எல்லையில் அமைந்துள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 35 வார்டுகளும், 23,277 வீடுகளும் கொண்ட பாரான் நகராட்சியின் மக்கள் தொகை 1,17,992 ஆகும். அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 932 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள்15190 (13%) ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 80.2% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 27,063 (22.9%) மற்றும் 6,259 (5.3%) ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 84.32%, இசுலாமியர் 14%, சமணர்கள் 1.16%, சீக்கியர்கள் 0.25%, கிறித்தவர் 0.15% மற்றும் பிறர் 0.13% ஆகவுள்ளனர்.[3]

சாலைப் போக்குவரத்து

தொகு

தேசிய நெடுஞ்சாலை பழைய எண் 76, புதிய எண் 27 பாரான் நகரம் வழியாகச் செல்கிறது. கிழக்கையும், மேற்கையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையின் புதிய எண் 27, இந்நகரத்தின் வழியாகச் செல்கிறது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "District Census Handbook - Baran" (PDF). Census of India. pp. 11, 24. பார்க்கப்பட்ட நாள் 19 January 2015.
  2. "Home". rajasthan.gov.in.
  3. {https://www.censusindia.co.in/towns/baran-population-baran-rajasthan-800615 Baran Population, Religion, Caste, Working Data Baran, Rajasthan - Census 2011]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரான்,_இராஜஸ்தான்&oldid=3618109" இலிருந்து மீள்விக்கப்பட்டது