பாரா-சைமீன்
பாரா-சைமீன் (p-Cymene) என்பது C10H14 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆல்க்கைல் பென்சீனுடன் தொடர்புடைய ஒற்றை வளைய மோனோடெர்பீன் என வகைப்படுத்தப்படும்[3] இச்சேர்மத்தின் கட்டமைப்பில் ஒரு பென்சீன் வளையமும் அதன் பாரா நிலையில் ஒரு மெத்தில் குழுவும் ஓர் ஐசோபுரோப்பைல் குழுவும் இணைக்கப்பட்டுள்ளன. எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய நிறமற்ற ஒரு திரவமாக காணப்படுகிறது. தண்ணீரில் கிட்டத்தட்ட கரையாது, ஆனால் கரிம கரைப்பான்களில் கரையும். 1-மெத்தில்-4-(புரோப்பேன்-2-யில்)பென்சீன் என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-Methyl-4-(propan-2-yl)benzene[1] | |||
வேறு பெயர்கள்
பாரா-சைமீன்
4-ஐசோபுரோப்பைல்தொலுயீன் 4-மெத்தில்கியூமின் p-சைமீன் | |||
இனங்காட்டிகள் | |||
99-87-6 | |||
3DMet | B00975 | ||
Beilstein Reference
|
1903377 | ||
ChEBI | CHEBI:28768 | ||
ChEMBL | ChEMBL442915 | ||
ChemSpider | 7183 | ||
EC number | 202-796-7 | ||
Gmelin Reference
|
305912 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C06575 | ||
பப்கெம் | 7463 | ||
வே.ந.வி.ப எண் | GZ5950000 | ||
| |||
UNII | 1G1C8T1N7Q | ||
UN number | 2046 | ||
பண்புகள் | |||
C10H14 | |||
வாய்ப்பாட்டு எடை | 134.22 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
அடர்த்தி | 0.857 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | −68 °C (−90 °F; 205 K) | ||
கொதிநிலை | 177 °C (351 °F; 450 K) | ||
23.4 மில்லி கிராம்/லிட்டர் | |||
−1.028×10−4 cm3/mol | |||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.4908 (at 20 °C) [2] | ||
தீங்குகள் | |||
GHS pictograms | |||
GHS signal word | அபாயம் | ||
H226, H304, H411 | |||
P210, P233, P240, P241, P242, P243, P273, P280, P301+310, P303+361+353, P331, P370+378, P391, P403+235 | |||
தீப்பற்றும் வெப்பநிலை | 47 °C (117 °F; 320 K) | ||
Autoignition
temperature |
435 °C (815 °F; 708 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மாற்றியங்கள்
தொகுபாரா-சைமீனைத் தவிர, மெட்டா-சைமீன், ஆர்த்தோ-சைமீன் எனப்படும் இரண்டு வடிவியல் மாற்றியங்களும் காணப்படுகின்றன. மெட்டா-சைமீனில் ஆல்க்கைல் குழுக்கள் பென்சீன் வளையத்தின் மெட்டா நிலையிலும், ஆர்த்தோ-சைமீனில் ஆல்க்கைல் குழுக்கள் பென்சீன் வளையத்தின் ஆர்த்தோ- நிலையிலும் பதிலீடு செய்யப்படுகின்றன. பாரா- சைமீன் மிகவும் பொதுவான மற்றும் ஒரே இயற்கை மாற்றியம் ஆகும். மூன்று மாற்றியங்களும் சேர்ந்து சைமீன்களின் குழுவை உருவாக்குகின்றன.
தயாரிப்பு
தொகுதொலுயீனுடன் புரோப்பைலீனைச் சேர்த்து ஆல்க்கைலேற்ற வினைக்கு உட்படுத்தினால் மெட்டா-சைமீன் உருவாகிறது.[4]
தொடர்புடைய சேர்மங்கள்
தொகுபாரா-சைமீன் பல அத்தியாவசிய எண்ணெய்களின் ஓர் அங்கமாகும், பொதுவாக சீரகம் மற்றும் தைம் எண்ணெய் எனப்படும் ஓமம் போன்றவற்றைக் கூறலாம். மர டெர்பீன்களில் இருந்து சல்பைட்டு கூழ் உருவாக்கும் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க அளவு இது உருவாகிறது.
பாரா-சைமீன் என்பது உருத்தேனியத்திற்கான பொதுவான ஈந்தணைவி ஆகும். இதனுடைய மூலச் சேர்மம் [(η6-cymene)RuCl2]2 என்ற அணைவுச் சேர்மமாகும். இந்த அரை-இடையீட்டுச் சேர்மமானது டெர்பீன் α-பெல்லான்ரீனுடன் ருத்தேனியம் முக்குளோரைடுடன் ஈடுபடும் வினை மூலம் தயாரிக்கப்படுகிறது. ஓசுமியம் அணைவுச் சேர்மமும் அறியப்படுகிறது.[5]
பாரா-சைமீனின் ஐதரசனேற்றம் நிறைவுற்ற வழிப்பெறுதியான பாரா-மெந்தேனை அளிக்கிறது
மேற்கோள்கள்
தொகு- ↑ Nomenclature of Organic Chemistry: IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. pp. 139, 597. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
- ↑ Pabst, Florian; Blochowicz, Thomas (December 2022). "On the intensity of light scattered by molecular liquids - Comparison of experiment and quantum chemical calculations" (in en). The Journal of Chemical Physics 157 (24): 244501. doi:10.1063/5.0133511. பப்மெட்:36586992. Bibcode: 2022JChPh.157x4501P.
- ↑ Balahbib, Abdelaali; El Omari, Nasreddine; Hachlafi, Naoufal EL.; Lakhdar, Fatima; El Menyiy, Naoual; Salhi, Najoua; Mrabti, Hanae Naceiri; Bakrim, Saad et al. (2021-07-01). "Health beneficial and pharmacological properties of p-cymene". Food and Chemical Toxicology 153: 112259. doi:10.1016/j.fct.2021.112259. பன்னாட்டுத் தர தொடர் எண்:0278-6915. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0278691521002921#:~:text=p%2Dcymene%20also%20known%20as,of%20terpenes%2C%20especially%20monocyclic%20monoterpenes..
- ↑ "Alkylation". Kirk‐Othmer Encyclopedia of Chemical Technology. (2003). DOI:10.1002/0471238961.0112112508011313.a01.pub2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0471238961.
- ↑ Bennett, M. A.; Huang, T.-N.; Matheson, T. W.; Smith, A. K. (1982). "(η6-Hexamethylbenzene)Ruthenium Complexes". Inorganic Syntheses 21: 74–78. doi:10.1002/9780470132524.ch16. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780470132524.