பார்மேட்டு

பார்மேட்டு ( Formate ) என்பது பார்மிக் அமிலத்தில் இருந்து புரோட்டான் நீக்கம் செய்யப்பட்டு பெறப்படும் ஒரு எதிர்மின் அயனி யாகும். இதன் மூலக்கூறு வாய்பாடு CHOO அல்லது HCOO அல்லது HCO2 என்று பல்வேறு வகைகளில் குறிப்பிடப்படுகிறது. பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் இந்த எதிர்மின் அயனியை மெத்தனோயேட்டு என்ற பெயரால் குறிக்கிறது. கரிம வேதியியலில் இதுவே மிகச்சிறிய கார்பாக்சிலேட்டு எதிர் மின்அயனியாக விளங்குகிறது. பார்மேட்டு சேர்மம் என்பது பார்மிக் அமிலத்தினுடைய உப்பு அல்லது எசுத்தர் ஆகும்.

பார்மேட்டு அயனியின் அமைப்பு

உயிர்வேதியியல்

தொகு

பார்மேட்டு அதிக அளவில் கல்லீரலிலும் வளர்கரு செல்களில் உள்ள இழைமணிகளிலும், புற்றுநோய் செல்களிலும் உயிர்ச்ச்த்து சுழற்சியின் போது உற்பத்தி செய்யப்படுகிறது :[1].

பார்மேட்டு டிஐதரசனேசு என்ற நொதியால் , பார்மேட்டு நேர்மாறாக ஆக்சிசனேற்றம் செய்யப்படுகிறது:[2].

HCO2 → CO2 + H+ + 2 e

பார்மேட்டு எசுத்தர்கள் மற்றும் உப்புகள்

தொகு

பார்மேட்டு எசுத்தர்கள் ROC(O)H அல்லது (RO2CH) என்ற மூலக்கூறு வாய்பாடால் குறிக்கப்படுகின்றன. ஆல்ககால் கள் பார்மிக் அமிலத்தில் கரையும்போது இவை தன்னியலார்ந்த முறையில் உருவாகின்றன.

பார்மேட்டு உப்புகள் M(O2CH) என்ற மூலக்கூறு வாய்பாடால் குறிப்பிடப்படுகின்றன. இத்தகைய உப்புகள் கார்பாக்சில் நீக்கவினைக்கு நேர்மாறான நிலையில் கிடைப்பவையாகும். உதாரணமாக நீரேறிய நிக்கல் பார்மேட்டு என்ற உப்பைக் கூறலாம். இது சுமார் 200 பாகை செல்சியசு வெப்பநிலையில் கார்பாக்சிலேற்ற வினைக்கு உட்பட்டு இறுதியாக உலோக நிக்கல் துகளைக் கொடுக்கிறது.

Ni(O2CH)2(H2O)x → Ni + 2 CO2 + x H2O + H2

இத்துகள் நிக்கல் ஐதரசனேற்ற வினைகளில் வினையூக்கி யாகப் பயன்படுகிறது.

உதாரணங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. H Frederik Nijhout, et al, In silico experimentation with a model of hepatic mitochondrial folate metabolism, Theoretical Biology and Medical Modeling, 2006, 3:40, link http://www.tbiomed.com/content/3/1/40/abstract).
  2. T. Reda, C. M. Plugge, N. J. Abram and J. Hirst, "Reversible interconversion of carbon dioxide and formate by an electroactive enzyme", PNAS 2008 105, 10654–10658. எஆசு:10.1073/pnas.0801290105
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்மேட்டு&oldid=2222273" இலிருந்து மீள்விக்கப்பட்டது