சோடியம் பார்மேட்டு

சோடியம் பார்மேட்டு ( Sodium formate ) என்பது சோடியம் உப்பு பார்மிக் அமிலத்துடன் வினைபுரிந்து உருவாகும் சேர்மம் ஆகும். இதனுடைய மூலக்கூறு வாய்பாடு HCOONa . பொதுவாக வெள்ளை நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் நீர் ஈர்க்கும் தன்மை கொண்டது.

சோடியம் பார்மேட்டு
Structural formula of sodium formate
Ball-and-stick model of the formate anion
Ball-and-stick model of the formate anion
The sodium cation
The sodium cation
பெயர்கள்
வேறு பெயர்கள்
பார்மிக் அமிலத்தின் சோடிய உப்பு, சோடியம் ஐதரோகார்பன் டைஆக்சைடு
இனங்காட்டிகள்
141-53-7 Y
ChEMBL ChEMBL183491 N
ChemSpider 8517 Y
EC number 205-488-0
InChI
  • InChI=1S/CH2O2.Na/c2-1-3;/h1H,(H,2,3);/q;+1/p-1 Y
    Key: HLBBKKJFGFRGMU-UHFFFAOYSA-M Y
  • InChI=1/CH2O2.Na/c2-1-3;/h1H,(H,2,3);/q;+1/p-1
    Key: HLBBKKJFGFRGMU-REWHXWOFAN
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 2723810
  • [Na+].[O-]C=O
UNII 387AD98770 Y
பண்புகள்
HCOONa
வாய்ப்பாட்டு எடை 68.007 g/mol
தோற்றம் வெண் சிறுமனிகள்
நீர் உறிஞ்சி
அடர்த்தி 1.92 g/cm3 (20 °C)
உருகுநிலை 253 °C (487 °F; 526 K)
கொதிநிலை சிதைவடையும்
43.82 g/100 mL (0 °C)
97.2 g/100 mL (20 °C)
160 g/100 mL (100 °C)
கரைதிறன் ஈதரில் கரையாது
கிளிசெரால், ஆல்ககால், பார்மிக் அமிலம் இவற்றில் கரையும்
காடித்தன்மை எண் (pKa) 7.0-8.5 (0.1M)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-666.5 kJ/mol
நியம மோலார்
எந்திரோப்பி So298
103.8 J/mol K
வெப்பக் கொண்மை, C 82.7 J/mol K
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு not listed
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

பயன்கள்

தொகு

துணிகளுக்குச் சாயமிடுதல் மற்றும் அச்சிடும் செயல்முறைகளில் சோடியம் பார்மேட்டு பயன்படுத்தப்படுகிறது. வலிமையான கனிம அமிலங்களின் அமிலத்தன்மையை அதிகரித்தலில் இடையகப்படுத்தும் முகவராகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது ஒரு உணவுக் கூட்டுப்பொருளாகவும் பனிநீக்க முகவராகவும் பயனாகிறது.

கட்டமைப்பு உயிரியலில், {[புரதம்|புரதப்]] படிகங்கள் மீதான எக்சு கதிர் சோதனைகளில் ஒரு உறை பாதுகாப்புப் பொருளாக சோடியம் பார்மேட்டைப் பயன்படுத்த முடியும்[1], ஆய்வுகளில் ஏற்படும் கதிரியக்க சேதப் பாதிப்புகளை குறைப்பதற்காக பொதுவாக 100 கெல்வின் வெப்பநிலையில் இவ்வாய்வுகள் நடத்தப்படுகின்றன.

தயாரிப்பு

தொகு

பார்மிக் அமிலத்தை சோடியம் கார்பனேட்டுடன் வினைபுரியச் செய்து நடுநிலையாக்கம் மூலமாக சோடியம் பார்மேட்டு ஆய்வகத்தில் தயாரிக்கப்படுகிறது. குளோரோபார்மை அமிலங்கலந்த சோடியம் ஐதராக்சைடுடன் சேர்ப்பதன் மூலமாகவும்

CHCl3 + 4NaOH → HCOONa + 3NaCl + 2H2O

அல்லது சோடியம் ஐதராக்சைடை குளோரால் ஐதரேட்டுடன் சேர்த்தும் சோடியம் பார்மேட்டைத் தயாரிக்கலாம்.

C2HCl3(OH)2 + NaOHCHCl3 + HCOONa + H2O

முதலாவது முறையைக் காட்டிலும் இரண்டாவதாகக் கூறப்பட்ட முறை அதிக அளவில் பயன்படுகிறது. ஏனெனில் குளோரோபார்ம் அமிலக்கரைசலில் குறைவான கரைதிறன் பெற்றுள்ளதால் சோடியம் பார்மேட்டுக் கரைசலில் இருந்து பகுதிப்படிகமாக்கல் முறையில் பிரித்தெடுப்பது எளிதாக இருக்கும். முதலாவது முறையில் உருவாகும் சோடியம் குளோரைடு நன்றாக கரைந்து விடுவதால் பிரித்தெடுப்பது கடினமாக இருக்கும்.

கார்பன் மோனாக்சைடு தகுந்த அழுத்தத்தில் 160 பாகை செல்சியசு வெப்பநிலையில் சேர்க்கப்பட்டு வணிகமுறையில் சோடியம் பார்மேட்டு தயாரிக்கப்படுகிறது.

CO + NaOH → HCOONa

எத்தனாலை ஒரு காரத்தின் முன்னிலையில் சோடியம் ஐப்போகுளோரைட்டுடன் ஏலோபார்ம் வினைக்கு உட்படுத்தியும் சோடியம் பார்மேட்டு தயாரிக்கலாம். குளோரோஃபார்ம் தயாரிக்கும் முறையாக இம்முறை சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Bujacz, G.; Wrzesniewska, B.; Bujacz, A. (2010), "Cryoprotection properties of salts of organic acids: a case study for a tetragonal crystal of HEW lysozyme", Acta Crystallographica Section D: Biological Crystallography, vol. 66, no. 7, pp. 789–796, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1107/S0907444910015416

இவற்றையும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_பார்மேட்டு&oldid=2438529" இலிருந்து மீள்விக்கப்பட்டது