பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில்

அகோபில வரதராஜ பெருமாள் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தின் பாலசமுத்திரம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும். இக்கோயிலானது, பழனி முருகன் கோயிலின் ஓர் உபகோயிலாகும்.[3] பழனியிலிருந்து சுமார் ஐந்து கி.மீ. தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் அகோபில வரதராஜ பெருமாள் ஆவார். தாயார்கள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆவர். இக்கோயிலில் கருடாழ்வார், வீர ஆஞ்சநேயர், ஸ்ரீகிருஷ்ணர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.[4] மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை நினைவூட்டக்கூடிய பழங்கால தசாவதார சிலைகள், பெருந்தேவி தாயார் சன்னதியில் நிறுவப்பட்டுள்ளன.[5]

பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில்
பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் is located in தமிழ் நாடு
பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில்
பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில்
அகோபில வரதராஜ பெருமாள் கோயில், பாலசமுத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:10°25′05″N 77°29′54″E / 10.4180°N 77.4983°E / 10.4180; 77.4983
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திண்டுக்கல் மாவட்டம்
அமைவிடம்:பாலசமுத்திரம்
சட்டமன்றத் தொகுதி:பழநி (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:திண்டுக்கல் மக்களவைத் தொகுதி
ஏற்றம்:378 m (1,240 அடி)
கோயில் தகவல்
மூலவர்:அகோபில வரதராஜ பெருமாள்
தாயார்:ஸ்ரீதேவி மற்றும் பூதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:ஆவணி பிரம்மோற்சவம்,[1]
சித்ரா பௌர்ணமி,
சித்திரை மாதப் பிறப்பு,
ஆடிப்பூரம்,
ஆடி சுவாதி,
கோகுலாஷ்டமி,
புரட்டாசி சனிக்கிழமைகள்,
வைகுண்ட ஏகாதசி,
பங்குனி உத்திர திருக்கல்யாணம்
வரலாறு
கட்டிய நாள்:கி. பி. 1504[2]
அமைத்தவர்:ஒபுலக்கொண்டம நாயக்கர்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 378 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 10°25′05″N 77°29′54″E / 10.4180°N 77.4983°E / 10.4180; 77.4983 ஆகும்.

ஆவணி பிரம்மோற்சவம்,[6] சித்ரா பௌர்ணமி, சித்திரை மாதப் பிறப்பு, ஆடிப் பூரம், ஆடி சுவாதி, கோகுலாஷ்டமி, புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி,[7] பங்குனி உத்திர திருக்கல்யாணம் ஆகிய திருவிழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. "பாலசமுத்திரம் வரதராஜ பெருமாள் கோயில் ஆவணி பிரம்மோற்சவம் - தேரோட்ட நிகழ்ச்சி கோலாகலம்". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.
  2. "Agopila Varatharaja Perumal Temple – Hindu Temple Timings, History, Location, Deity, shlokas" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.
  3. மாலை மலர் (2020-08-28). "பழனி பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவில் பிரமோற்சவ விழா ரத்து". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.
  4. "Temple : Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.
  5. Prabhu S (2014-06-27). "Temple, Travel and Sport: Bala Samudram Ahobila Varadaraja Perumal". Temple, Travel and Sport. பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.
  6. தினத்தந்தி (2022-09-04). "அகோபில வரதராஜ பெருமாள் கோவில்: கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆவணி பிரம்மோற்சவ திருவிழா". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.
  7. "வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு". News J : (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-01-06. பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.{{cite web}}: CS1 maint: extra punctuation (link)

வெளி இணைப்புகள்

தொகு