கண்டனூர்

(பாலையூர் (சிவகங்கை மாவட்டம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கண்டனூர் காரைக்குடி (ஆங்கிலம்:Kandanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு புறநகர் பகுதி மற்றும் பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி பாலையூர் மற்றும் கண்டனூர் என இரண்டு உட்கிராமங்கள் கொண்டது காரைக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஒன்று

காரைக்குடி - அறந்தாங்கி செல்லும் பாதையில், சிவகங்கையிலிருந்து 63 கிமீ தொலைவில் கண்டனூர் உள்ளது. காரைக்குடிதொடருந்து சந்திப்புநிலையம் 9 கீமீ தொலைவில் உள்ளது

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 1,959 வீடுகளும், 7,696 மக்கள்தொகையும் கொண்டது. [1] இது 5.12 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 46 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது காரைக்குடி மாநகராட்சி பகுதி ஆகும். காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

வரலாறு

தொகு

சிவகங்கை சீமையின் பாலைய நாடான கண்டனூர், புதுவயல், கோட்டையூர், பள்ளத்தூர், கானாடுகாத்தான் ஆகிய ஐந்து கிராமப் பஞ்சாயத்துகளின் தலைமையிடமாக கண்டனூர் அமைந்திருந்தது. கண்டனூர் ஊராட்சியாக இருந்த காலத்தில், 1905ஆம் ஆண்டு முதல் 1908 ஆம் ஆண்டு வரை நகரத்தார் திரு.வ.யி.ராம.ப. பெரியணன் செட்டியார் அவர்கள் சேர்மனாக சேவை செய்து வந்தார். பின்னர் தமிழக அரசு ஆணை எண்.1287, நாள்.15.03.1929ல் காணும் உத்தரவுபடி கண்டனூர் முதல்நிலை பேரூராட்சியாக தோற்றுவிக்கப்பட்டது.

கோயில்கள்

தொகு

கண்டனூர் கோயில்கள்

தொகு

பாலையூர் (ஆங்கிலம் :‌ Palaiyur)கோயில்கள்

தொகு

பாலையூரில் மேலத்தெரு என்று அழைக்கப்படும் மேற்கு வீதியில் நான்கு கோவில்கள் ஒருங்கே அமைந்துள்ளன. அதில் இடது புறத்தில் கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இதன் அருகில் மகாலெட்சுமி நாராயணன் கோவிலும், இதனைத் தொடர்ந்து மாரியம்மன்  கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு மரத்தாலான தேர் ஒன்று உள்ளது.   

வலப்புறத்தில் தேரடிக் கருப்பர்  கோவில் உள்ளது (இந்தக் கோவிலின் அருகில் மாரியம்மன் கோவில் தேரினைப் பாதுகாக்கும் தேர்க்கொட்டகை உள்ளது). இந்த நான்கு கோவில்களுக்கும் அருகில் பாலையூர் கண்மாய் அமைந்துள்ளது. (அரை கிலோ மீட்டர் தொலைவு) பாலையூரில் கீழத்தெரு என்று அழைக்கப்படும்  கிழக்கு வீதியில் முத்திரிச் சந்தி கருப்பர், ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு மிக அருகில் கிழக்குத் திசையில் செல்லும் வழியில் சின்னக் கருப்பர் கோவில் அமைந்துள்ளன.

பள்ளிகள்

தொகு

பாலையூரில் சிட்டாள் ஆச்சி உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி 21 திசம்பர் 1945, வெள்ளிக் கிழமை அன்று தொடங்கப்பட்டதாகும். இப்பள்ளியை அந்நாளைய சென்னை மாகாணத்தின் பொதுத்தகவல் துறை இயக்குநர் டாக்டர் சவூர் என்பவர் திறந்து வைத்த கல்வெட்டு அப்பள்ளியின் முன்பகுதியில் உள்ளது.

ஆதாரங்கள்

தொகு
  1. Kandanur Population Census 2011
  2. "பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-25. பார்க்கப்பட்ட நாள் 2019-03-13.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டனூர்&oldid=4002589" இலிருந்து மீள்விக்கப்பட்டது