பால்டி மக்கள்
பால்டி மக்கள் (Baltis), இந்தோ திபெத்திய மொழிகளில் ஒன்றான பால்டி மொழி[4]பேசும் மக்கள், இமயமலையின் நீட்சியான காரகோரம் மலைத்தொடர்களில் வாழும் இம்மக்கள் பெரும்பான்மையாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்ஜித்-பால்டிஸ்தான் பகுதிகளில் வாழ்கின்றனர்.[5] மேலும் இந்தியாவில் லடாக் பகுதியில் கார்கில் மாவட்டம் மற்றும் லே மாவட்டம் ஆகிய பகுதிகளில் வாழ்கின்றனர். பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, கராச்சி போன்ற நகரங்களில் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர்.
பால்டி குழந்தைகள், ஆஸ்தோர் மாவட்டம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்ஜித்-பால்டிஸ்தான், செப்டம்பர் 2008 | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
ஏறத்தாழ 3,93,000[1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்ஜித்-பால்டிஸ்தான் இந்தியாவின் லடாக்[2] | |
மொழி(கள்) | |
பால்டி மொழி, உருது, இந்தி | |
சமயங்கள் | |
சியா இசுலாம்[3]சுன்னி இசுலாம், சூபித்துவம் & திபெத்திய பௌத்தம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
லடாக்கியர்கள், திபெத்தியர்கள், தார்திக்குகள் |
சமயம்
தொகுஇந்தியாவின் தூர வடக்கில் கில்ஜித்-பால்டிஸ்தானில் பால்டி மொழி பேசும் மக்கள், இந்தியவில் இசுலாம் வருகைக்கு முன்னர் போன் பௌத்தம் மற்றும் திபெத்திய பௌத்தத்தைப் பயின்றனர். 14ம் நூற்றாண்டில் இப்பகுதியில் சூபித்துவம் பரவியது. 17ம் நூற்றாண்டு வரை சூபித்துவம்[6] பயின்ற இம்மக்கள், பின்னர் பெரும்பாலன பால்டி மக்கள் சியா இசுலாம் பிரிவையும், சிலர் சுன்னி இசுலாம் பிரிவையும் பின்பற்றுகிறார்கள். இருப்பினும் இம்மக்கள் தற்போதும் சடங்குகளில் தங்களின் முந்தைய போன் பௌத்தம் மற்றும் திபெத்திய பௌத்தத்தின் தாக்கத்தைக் கொண்டுள்ளனர்.
தற்போது கில்ஜித்-பால்டிஸ்தானில் உள்ள பால்டி மக்களில் 60% சியா இசுலாம் மற்றும் 30% மக்கள் சூபித்துவம் மற்றும் 10% சன்னி இசுலாமைப் பின்பற்றுகிறார்கள்.[7]இந்தியாவில் லடாக் பகுதி பால்டி மக்களில் 97% இசுலாமையும்; 3% பௌத்தத்தையும் பின்பற்றுகின்றனர்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ahmed, Musavir (29 January 2021). "Balti: Protecting the language". Greater Kashmir (in ஆங்கிலம்). Archived from the original on 11 July 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-10-03.
- ↑ "In pictures: Life in Baltistan" (in en-GB). BBC News. 2013-07-01. https://www.bbc.com/news/world-asia-india-22690692.
- ↑ Bakshi, S.R. (1997). Kashmir: History and People. Sarup & Sons. p. 186. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85431-96-3.
- ↑ * N. Tournadre (2005) "L'aire linguistique tibétaine et ses divers dialectes." Lalies, 2005, n°25, p. 7–56 [1]
- ↑ Backstrom, Peter C.; Radloff, Carla F. (1992). O’Leary, Clare F. (ed.). Languages of Northern Areas. Sociolinguistic Survey of Northern Pakistan. Vol. 2. Quaid-i-Azam University: National Institute of Pakistani Studies. p. 5. CiteSeerX 10.1.1.860.8811. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9698023127.
- ↑ "Little Tibet: Renaissance and Resistance in Baltistan". Himal Southasian (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 1998-04-30. பார்க்கப்பட்ட நாள் 2020-05-20.
- ↑ Bakshi, S. R. (1997-01-01). Kashmir: History and People (in ஆங்கிலம்). Sarup & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185431963.
- ↑ "Census of India Website : Office of the Registrar General & Census Commissioner, India". www.censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-31.