பால்பனின் கல்லறை
கியாசுத்தீன் பால்பானின் கல்லறை என்பது இந்தியாவின் புது தில்லி மெக்ராலியில் அமைந்துள்ள ஒரு கட்டிடமாகும். கி.பி 1287 இல் இடிபாடுகளில் கட்டப்பட்ட இந்த கல்லறை இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலை வளர்ச்சியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டிடமாகும். ஏனெனில் இங்குதான் இந்தியாவில் முதல் இஸ்லாமிய பாணியிலான கட்டிடக்கலைத் தோன்றியது, [1] [2] மேலும் பலரின் கருத்துப்படி, முதல் இஸ்லாமிய குவிமாடமும் இங்குதான் கட்டப்பட்டது. இருப்பினும் இது பிற்காலத்தில் தப்பிப்பிழைக்கவில்லை. கி.பி 1311 இல் அலாய் தர்வாசா என்ற பகுதிக்கு அருகிலுள்ள குதுப் மினார் வளாகத்தில் இது கட்டப்பட்டது. இது இந்தியாவில் எஞ்சியிருக்கும் ஆரம்பகால குவிமாடமாகும். [3] கியாசுத்தீன் பால்பான் 1200 முதல் 1287 வரை தில்லி சுல்தானகத்தின் துருக்கிய ஆட்சியாளராக இருந்தார். தில்லியின் [[மம்லூக்கிய மரபு (தில்லி)|மம்லுக் வம்சம் என்படும் அடிமை வம்ச ஆட்சியின் போது இருந்தார். அவர் அடிமை வம்சத்தின் மிக முக்கியமான ஆட்சியாளர்களில் ஒருவராகவும் இருந்தார். கியாசுத்தீன் பல்பான் இறந்த பின்னர் கட்டப்பட்ட இந்தக் கல்லறை 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.
கண்ணோட்டம்
தொகுஇவரது எஜமானரான இல்த்துத்மிசுவின் கல்லறையில் காணக்கூடிய அற்புதமான அலங்காரங்கள் இல்லாவிட்டாலும், இது ஒரு சிறப்பான கல் மற்றும் கொத்து கட்டிடமாக் உள்ளது. இந்த கல்லறை ஒரு பரந்த பிற்பகுதியில் இடைக்கால குடியேற்றத்தின் இடிபாடுகளால் சூழப்பட்டுள்ளது. மேலும் இது சில கோணங்களில் இருந்து குதுப் மினாரின் குறிப்பிடத்தக்க காட்சியை வழங்குகிறது. பல்பானின் கல்லறையின் கிழக்கில், பால்பானின் மகனான முகம்மது கான் சாகித்தின் கல்லறை என்று கூறப்படும் ஒரு பாழடைந்த செவ்வக அமைப்பு ஒன்று உள்ளது. முகமது கான் சாகித் 1285 இல் முல்தானுக்கு அருகே மங்கோலியர்களுக்கு எதிராக போராடி இறந்தார்.
கியாசுத்தீன் பல்பான்
தொகுகியாசுத்தீன் பல்பான் (1200 – 1287) அடிமை வம்சம் எனப்பட்ட மம்லுக் வம்சத்தைச் சேர்ந்த தில்லி சுல்தானகத்தின் துருக்கிய ஆட்சியாளர் ஆவார். இவர் 1266 ஆம் ஆண்டு முதல் 1287 ஆம் ஆண்டு இறக்கும் வரை ஆட்சியில் இருந்தார்.
வரலாறு
தொகுகியாசுத்தீன் பல்பான் இல்பாரி பழங்குடியினத்தைச் சேர்ந்த துருக்கப் பிரபு ஒருவரின் மகனாவார். ஆனால், இவர் சிறுவனாக இருந்தபோது, மங்கோலியர்களால் பிடிக்கப்பட்டு அடிமையாக காசுனி என்னும் இடத்தில் விற்கப்பட்டார். இவரை, பின்னர் தில்லி சுல்தானாக இருந்த சம்சுத்தீன் இல்த்துத்மிசு 1232 ஆம் ஆண்டு வாங்கினார். எனினும் இல்த்துத்மிசு தனது முன்னாள் எசமானும், ஆட்சியாளனுமாகிய குதுப்புத்தீன் ஐபாக்கின் உத்தரவுக்கேற்ப பல்பானை விடுவித்து ஒரு இளவரசனைப்போல வளர்த்தார்.
இவர் சுதந்திரமாகக் கல்வி கற்றார். பின்னர் நாட்டின் 40 துருக்கப் பிரபுக்களைக் கொண்ட குழுவொன்றுக்குத் தலைவர் ஆனார். சுல்தானகத்தில் ரசியா சுல்தானாவின் ஆட்சி தூக்கியெறியப்பட்டபின் ஏற்பட்ட ஆட்சிக் காலங்களின்போது, பதவி நிலைகளில் இவர் வேகமாக முன்னேறினார். 1246 முதல் 1266 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இவர் பிரதம அமைச்சராகப் பணியாற்றினார். 1266 ஆன் ஆண்டில் நசிருத்தீன் முகமது இறந்ததும், தானே தன்னை ஆட்சியாளனாக அறிவித்துக் கொண்டார். இவர் இறந்த சுல்தானின் மனைவியின் தந்தையாவார். பின்னர் பல்பான் சுல்தானகத்தை இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்தார்.
கேலரி
தொகு-
பால்பானின் கல்லறை - (28-09-2016 தேதியின்படி)
-
பால்பான் கல்லறை, மெக்ராலி, புது தில்லி - (28-09-2016 தேதியின்படி)
-
பால்பானின் கல்லறையின் இடிபாடுகள்- (28-09-2016 தேதியின்படி)
-
பால்பானின் கல்லறையை ஒட்டிய கட்டமைப்பின் இடிபாடுகள்
-
கான் சாகித், மெக்ராலியின் கல்லறைக்கு நுழைவு
-
கான் சாகித்தின் கல்லறை, பால்பானின் மகன்
-
பால்பானின் கல்லறை அடைப்பில் உள்ள கல்லறை, மெக்ராலி
குறிப்புகள்
தொகு- ↑ Delhi and its neighbourhood, by Y. D. Sharma. Published by Director General, Archaeological Survey of India, 1974. Page 20.
- ↑ Balban's Tomb Delhi, by Patrick Horton, Richard Plunkett, Hugh Finlay. Published by Lonely Planet, 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86450-297-5. Page 128.
- ↑ "Discover new treasures around Qutab". 28 March 2006. Archived from the original on 10 ஆகஸ்ட் 2007. பார்க்கப்பட்ட நாள் 14 August 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)