பாவலி ஆறு

கேரளாவில் பாயும் ஆறு

பவாலி ஆறு (Bavali river) என்பது 84 கி.மீ நீளமுள்ள ஆறு ஆகும். இது தென்னிந்திய மாநிலமான கேரளாவில் வயநாடு வழியாகச் செல்லும் செகுத்தான்தோல்டில் இருந்து பாய்ந்து கண்ணூரின், முனாம்பு கடவு என்ற இடத்தில் வளப்பட்டணம் வளப்பட்டணம் ஆற்றில் கலக்கிறது.[1] புகழ்பெற்ற சிவன் கோயிலான கொட்டியூர் கோயில் [2] பவாலி ஆற்றின் வடகரையில் திருவஞ்சிரை எனப்படும் சிறிய ஆற்றின் நடுவில் அமைந்துள்ளது. இந்த ஆற்றங்கரையில் கொட்டியூர் வைசாக மகோத்சவம் நடைபெறுகிறது. இது வாவு பலிப்புழா (வாவலி ஆறு) என்றும் அழைக்கப்படுகிறது.[3]

பாவலி ஆறு
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கண்ணூர்
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
அரபிக்கடல்
 ⁃ உயர ஏற்றம்
84 கி.மீ.
வடிநில சிறப்புக்கூறுகள்
பாயும் வழிமேற்கு நோக்கி ஓடும் ஆறு
அடையாளங்கள்கொட்டியூர் கோயில், பழசி அணை

ஆற்றின் தடம்

தொகு

பவாலி ஆறு கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள செகுத்தான்தோல்டில் இருந்து தொடங்குகிறது. ஆரம்பத்தில் இந்த ஆறு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் 20 கி.மீ.க்கு மேல் பாய்ந்து அம்பயத்தோட்டை அடைகிறது. பின்னர் கண்ணூர் மாவட்டத்தின் கிழக்கு மலைப் பகுதிகளில் கொட்டியூர் கிராமத்தில் நுழைகிறது. பின்னர் இந்த ஆறு சிறு நகரங்களான சுங்கக்குன்னு, கெளகம், கனிச்சார் , பாலை (கண்ணூர்) (கஞ்சிரப்புழா ஆறு இணையும் இடம்) வழியாக செல்கிறது. பின்னர் ஆரளம் ஆறு பவாலி ஆற்றில் கலக்கும் அய்யப்பன்காவு என்ற இடத்தில் வந்து சேரும். பின்னர் இரிட்டி நகரை நோக்கி பாய்ந்து வேணி ஆறு பவாலி ஆற்றில் கலக்கிறது. பின்னர் பவாலி ஆறு பாடியூர், பெருமண்ணு, இரிக்கூர் பாவண்ணூர் வழியாகச் சென்று இறுதியாக கொய்யம், முனாம்பு கடவு என்ற இடத்தில் வளப்பட்டணம் ஆற்றில் கலக்கிறது.

துணை ஆறுகள்

தொகு
  • கஞ்சிரப்புழா ஆறு
  • ஆரளம் ஆறு
  • வேணி ஆறு

புகைப்படங்கள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Palchuram waterfalls: a less explored wonder of nature". மலையாள மனோரமா. 22 March 2017.
  2. "Major Temples under Malabar Devaswam". பார்க்கப்பட்ட நாள் 10 August 2013.
  3. "https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/festival-time-at-kottiyur/article4796628.ece". பார்க்கப்பட்ட நாள் 2021-12-03. {{cite web}}: External link in |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவலி_ஆறு&oldid=3577784" இலிருந்து மீள்விக்கப்பட்டது