கொட்டியூர் வைசாக மகோத்சவம்

தட்சனின் வேள்வியை நினைவுகூரும் வகையில் இந்துக்களால் அனுசரிக்கப்படும் 27 நாள் வருடாந்திர யாத்

கொட்டியூர் உற்சவம் அல்லது கொட்டியூர் வைசாக மகோத்சவம் (Kottiyoor Vysakha Mahotsavam) ) தட்சனின் வேள்வியை நினைவுகூரும் வகையில் இந்துக்களால் அனுசரிக்கப்படும் 27 நாள் வருடாந்திர யாத்திரையாகும். [2] இந்த யாத்திரை பிரயாகையின் கும்பமேளாவைப் போன்றது. அங்கு அபிசேகம் செய்யப்படுகிறது. கோயிலும் மைதானமும் 'தட்சிணக் காசி' என்றும் அழைக்கப்படுகிறது.

கொட்டியூர் வைசாக மகோத்சவம்
கொட்டியூர் யாக பூமி
அதிகாரப்பூர்வ பெயர்வைசாக மகோத்சவம்
பிற பெயர்(கள்)கொட்டியூர் உற்சவம்
கடைபிடிப்போர்இந்து
வகைசமயச் சடங்குகள்
அனுசரிப்புகள்புனித குளம் (திருவாஞ்சிரை) வழியாக சுயம்புலிங்கத்தைச் சுற்றி வருதல்.
தொடக்கம்சாலிவாகன ஆண்டின் சுவாதி: வைகாசி; (கிரெகொரியின் நாட்காட்டி: மேசூன்)
முடிவுசாலிவாகன ஆண்டின் சித்திரை: ஆனி (கிரெகொரியின் நாட்காட்டி: சூன்–சூலை)
தொடர்புடையனதட்சனின் வேள்வி

கோயிலின் அமைப்பு

தொகு

கொட்டியூரில் (கேரளா), வாவலி (பாவலி ஆறு) ஆற்றங்கரையில் இரண்டு சிவாலயங்கள் உள்ளன. மேற்குக் கரையில் திருச்செருமண வடக்கேசுவரம் கோயில் (இக்கரை கொட்டியூர் கோயில் என்று பூர்வீக மக்களால் அழைக்கப்படுகிறது), இது நாலுகெட்டு கோயில் வளாகமாகும். கிழக்குக் கரையில், "அக்கரை கொட்டியூர்" என்று அழைக்கப்படும் ஒரு தற்காலிக சன்னதி உள்ளது. அங்கு திருவிழாச் சடங்குகள் நடைபெறுகின்றன. இக் கோயில் வைசாக மகோத்சவத்தின் போது மட்டுமே திறக்கப்படும். வைசாக யாத்திரையின் போது, வரலாற்றுக்கு முந்தைய வேத காலத்திய இடத்தில் உள்ள தற்காலிக கோவிலில் (இக்கரை கொட்டியூர்) பூசை செய்யப்படுகிறது. திருவிழா முடிந்ததும் அகற்றப்படும் தற்காலிக ஓலைக் குடில்கள் மட்டுமே கட்டப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் [3] யாக பூமிக்கு வருகிறார்கள். [4] யாகசாலையில் சுயம்பு சிவலிங்கம் உள்ளது. அங்கு அபிசேகம் செய்யப்படுகிறது. யாகம் நடைபெறும் அக்கரை கொட்டியூர் கோவிலில், கர்ப்பக்கிருகம் ஏதுமில்லை; அதற்கு பதிலாக, மணித்தாறம் என்று பெயரிடப்பட்ட ஆற்று கற்களால் ஆன உயரமான மேடை அமைந்துள்ளது. ஒரு நீரூற்றின் பிறப்பிடமான குளத்தின் மையத்தில் கோயில் அமைந்துள்ளது. குளத்திலிருந்து மேற்கே வாவலி ஆற்றை நோக்கி தண்ணீர் செல்கிறது. வானத்தில் இருந்து பார்த்தால் சிவலிங்கம் போல் காட்சியளிக்கிறது. இந்த குளம் திருவஞ்சிறை என்று அழைக்கப்படுகிறது. பக்தர்கள் பெரும்பாலும் மழைக்காலத்தில் குளத்தில் உள்ள சன்னதியை சுற்றி வருகின்றனர். அம்மாரக்கல் தரை (அம்மாரக்கல்ல் தரை) என்று அழைக்கப்படும் மற்றொரு உயரமான வட்ட மேடை உள்ளது. இறுதியாக, ஒரு பெரிய விளக்கும் (ஒரு வகையான லட்சுமி விளக்கு), ஒரு பனை ஓலைக் குடை மூலம் மூடப்பட்டல்ள் தரையில் தீக்குளித்துக்கொண்டதாக நம்பப்படுகிறது. [5]

இக்கரை கொட்டியூர் கோயிலும் அக்கரை கொட்டியூர் கோயிலும் மகாதேவருக்கு அர்ப்பணிக்கப்பட்டவை. சிவாலயங்களுக்கு இடையே வாவலி ஆறு ஓடுகிறது. இக்கரை கொட்டியூர் கோயில் பரசுராமரால் உருவாக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. அதே சமயம் அக்கரை கொட்டியூர் கோயில் ஒரு சுயம்புவாகும். அதாவது இயற்கையாக உருவானது.கோவிலின் பூசையும், சடங்குகளும் சங்கராச்சாரியாரால் உருவாக்கப்பட்டது.

புராணக் கதை

தொகு

இந்தக் கதை முக்கியமாக வாயு புராணத்தில் கூறப்பட்டுள்ளது . கந்த புராணத்தின் காசி காண்டம்,[6] கூர்ம புராணம், அரிவம்ச புராணம் , பத்ம புராணம் ஆகியவற்றிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது . லிங்க புராணம், சிவபுராணம், மச்ச புராணம் ஆகியவையும் இந்த சம்பவத்தை விவரிக்கின்றன.[7][8] சதி என்கிற தாட்சாயினி சிவன் மீது கொண்ட காதலால், தவமிருந்து சிவனின் அன்பை பெறுகிறாள். இறைவனான சிவபெருமான் தனக்கு மருமகனாக வந்தால் மேலும் புகழும், அதிகாரமும் என்று நம்பிய தட்சன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். தட்சன் கைலாயம் சென்றபோது, சிவபெருமான் எழுந்து நின்ற வரவேற்காததை நினைத்து வருத்தம் கொண்டார். வருத்தம் சிவன் மீதான கோபமாக மாறியது. அவரை பழிவாங்க பெரும் யாகமொன்றை நடத்தி சிவபெருமானை அழையாமல், மற்ற அனைத்து தேவர்களையும், இறைவன்களையும் தட்சன் அழைத்தார்.

இதனை அறிந்த சதி தன்னுடைய தந்தையிடம் முறையிட செல்ல சிவபெருமானிடம் அனுமதி கேட்டார். சிவன் அதற்கு அனுமதி தரமறுத்துவிட்டார். இருந்தும் தன் தந்தையின் செயலுக்கு காரணம் அறிந்திட சதி சென்றாள். அங்கு அவமானம் அடைந்து, யாககுண்டத்தில் விழுந்து மாண்டாள்.

இதனால் சிவபெருமான் ருத்திரன், மகாகாளி, வீரபத்திரன் முதலிய அவதாரங்களை உருவாக்கி தட்சனை அழித்தார்.

வைசாகத் திருவிழாச் சடங்குகள்

தொகு
 
அக்கரை கொட்டியூர்

வாவலி ஆற்றின் கிழக்குப் பகுதியில் உள்ள அக்கரை கொட்டியூர் கோவிலில் கொட்டியூர் வைசாக மகோத்சவ விழா நடைபெறுகிறது.[9]

கொட்டியூர் உற்சவம் திருவஞ்சிரை குளத்தில் மழைக்காலத்தில் நடத்தப்படுகிறது. அங்கு வைக்கோல் குடிசைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. புனித குளம் ஒரு நீரூற்று மற்றும் வாவலி ஆற்றின் கிளை ஆறாகும். இது பண்டைய வேத காலத்தை நினைவூட்டுகிறது. கொட்டியூர் ஒரு அமைதியான மலைப்பகுயாகும். திருநெல்லி மகாவிஷ்ணு கோயிலில் இருந்து (கொட்டியூர் கோயிலுக்கு தெற்கே 10 கிமீ) பிரம்மகிரி பள்ளத்தாக்கு வழியாக பூத கணங்கள் சடங்குகளுக்கு தேவையான பொருட்களை கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் சந்திப்புதான் கொட்டியூர் கோயில். கொட்டியூர் கோயிலின் சிவலிங்கம் ஒரு சுயம்புலிங்கம் ஆகும். அதாவது இயற்கையாக உருவானது.

 
நடராசராக சிவன்- சோழர்கால சிலை-(லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி கலை அருங்காட்சியகம்)
இக்கரை கொட்டியூரின் அழகிய காட்சி, கொட்டியூர் வைசாக மகோத்சவம்

சமூக பங்கேற்பு

தொகு
 
குமிழி விற்பனையாளர்

கொட்டியூர் யாத்திரையானது அனைத்து சமூகத்தினரின் பங்களிப்பையும் கொண்டதாக உள்ளது. இப்பகுதியில் உள்ள இந்து சமூகங்கள் ஒவ்வொரு ஆண்டும் நூறு கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் இருந்து மூலப்பொருட்களை ஒரு சடங்காக கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு சமூகத்துக்கும் கோட்டயம் (பழசி) அரச குடும்பத்தினரால் குறிப்பிட்ட பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. பின்னர் அவை மீண்டும் மாற்றியமைக்கப்படவில்லை. இவை தங்களுக்கு வழங்கப்பட்ட உரிமையாக அவர்கள் கருதுகின்றனர். மேலும் தங்களுக்கு ஒதுக்கபட்ட பணியை ஒரு கடமையாக கருதி செய்கின்றனர். இது பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியமாகும். யாத்திரை அவர்களின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. அமைதியான அடர்ந்த காட்டில் இந்த கோயில் அமைந்துள்ளது. இது இப்போது கேரள அரசால் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. [10]

திருவிழாவின் உரிமைகள், சடங்குகள் போன்றவை சைவ-வைணவ-சாக்த்த சமயங்களின் நல்லிணக்கத்தின் அடையாளமாக உள்ளது. ரோகினி ஆராதணை [11] வைசக மகோத்சவத்தின் போது புனித சடங்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது, 'குருமத்தூர்' என்ற பெயரிலான வைணவ குடும்பத்தின் தலைமையில் நடக்கிறது. சுயம்புலிங்கத்திற்கு 'ஆலிங்கண புஷ்பஞ்சலி' நடத்துகிறனர், இது சிவன் தனது அன்பு மனைவி சதி தேவியின் எரிந்த சடலத்தைக் கண்டு ஆழ்ந்த துக்கத்தில் இருந்தபோது அவரை சமாதானப்படுத்திய விஷ்ணுவை நினைவுகூருவதாகும்.

அணுகல்

தொகு

கண்ணூர் நகரம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் கிழக்கே கொட்டியூர் அமைந்துள்ளது. மங்களூர் மற்றும் மும்பையை வடக்குப் பக்கமாகவும், கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தை தெற்குப் பக்கமாகவும் அணுகலாம். இரிட்டியின் கிழக்கே உள்ள சாலை மைசூர் மற்றும் பெங்களூருடன் இணைக்கிறது. மங்களூர்- பாலக்காடு பாதையில் கண்ணூர் தொடருந்து நிலையம் அருகில் உள்ளது. மங்களூரிலும் கோழிக்கோடிலும் விமான நிலையங்கள் உள்ளன.

படத்தொகுப்பு

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Vaisakha Maholsavam dates for year 2013". 2013. பார்க்கப்பட்ட நாள் 20 July 2013. 19-June-2013, Wednesday - Thrukkalassattu
  2. "Daksha Yagnam". தி இந்து. 19 August 2009. Archived from the original on 22 August 2009. பார்க்கப்பட்ட நாள் 2013-07-20. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. "Thousands throng Kottiyur temple" இம் மூலத்தில் இருந்து 18 ஜூன் 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050618073504/http://www.hindu.com/2005/06/07/stories/2005060710270500.htm. 
  4. "Huge crowd at Kottiyur temple". https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/huge-crowd-at-kottiyur-temple/article3120548.ece. 
  5. "Few Facts about the temple". Kottiyoor Devaswom. பார்க்கப்பட்ட நாள் 11 August 2013.
  6. Skanda Purana (Pre-historic Sanskrtit literature), G. V. TAGARE (Author) (August 1, 1992). G.P. Bhatt (ed.). Skanda-Purana, Part 1. Ganesh Vasudeo Tagare (trans.) (1 ed.). Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8120809661. {{cite book}}: |first= has generic name (help)
  7. "What are Puranas? Are they Myths?". boloji.com. Archived from the original on 12 August 2013. பார்க்கப்பட்ட நாள் 12 August 2013.
  8. Wendy Doniger, ed. (1993). Purana Perennis: Reciprocity and Transformation in Hindu and Jaina Texts. State University of New York Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780791413814.
  9. "Kottiyoor Devaswam Temple Administration Portal". Kottiyoordevaswom.com. பார்க்கப்பட்ட நாள் 20 July 2013.
  10. "Wildlife sanctuary area in Kannur increases". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/wildlife-sanctuary-area-in-kannur-increases/article1772084.ece. பார்த்த நாள்: 11 August 2013. 
  11. "Archived copy". Archived from the original on 11 August 2013. பார்க்கப்பட்ட நாள் 11 August 2013.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

உசாத்துணை

தொகு

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

Kottiyoor Temple