பாவுலோ பிரெய்ரி
பாவுலோ பிரெய்ரி (Paulo Freire) ஒரு பிரேசிலியக் கல்வியாளரும், மெய்யியலாளரும் ஆவார். கற்றல் கலையில் நுண்ணாய்வுடைய திறனுடன் பல புத்தகங்களை எழுதியுள்ளார். ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை என்கிற புத்தகம் அவரது சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. இப்புத்தகமே ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை இயக்கத்தின் அடித்தளமாகவும் அமைந்தது.[11][12][13]
பாவுலோ பிரெய்ரி Paulo Freire | |
---|---|
1977 இல் பிரெய்ரி | |
பிறப்பு | பாவ்லோ ரெக்லசு நேவெசு பிரெய்ரி 19 செப்டம்பர் 1921 ரெசிஃபி, பெர்னம்புகோ, பிரேசில் |
இறப்பு | 2 மே 1997 சாவோ பாவுலோ, பிரேசில் | (அகவை 75)
படித்த கல்வி நிறுவனங்கள் | ரெசிபே பல்கலைக்கழகம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை (1968) |
தாக்கம் செலுத்தியோர் | |
பின்பற்றுவோர் | பட்டியல் |
அரசியல் கட்சி | தொழிலாளர் கட்சி |
வாழ்க்கைத் துணை |
|
ஆரம்ப வாழ்க்கை
தொகுபாவ்லோ பிரையர் 1921 ஆம் ஆண்டில் பிரேசிலில் பிறந்தார். உலகத்தின் மிகப்பெரும் பொருளாதார மந்தம் 1930களில் ஏற்பட்ட நேரம் இவரது குடும்பத்தையும் பாதித்தது . அந்த நேரம் கடும் பசியும் பட்டினியும் பாவ்லோ பிரையரை வாட்டியது. இந்த வறுமையின் காரணமாக அவரது படிப்பு நான்கு ஆண்டுகள் தாமதப்பட்டது. அந்த நேரத்தில் அவர் அருகாமையில் இருந்த சேரியில் வசிக்கும் சிறுவர்களுடன் கால்பந்து விளையாடியபடியே கழித்தார். இந்த சேரியில் இருக்கும் சிறுவர்களுடன் அவர் மிகுந்த நட்புடன் இருந்த காலத்தில் தான் அவர் ஏராளமான விஷயங்களை கற்றார். கற்றல் என்பது வேறு படிப்பு என்பது வேறு என்பதை அங்கு உணர்கிறார் பாவ்லோ பிரையர்.பசிக்கும் படிப்புக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி சிந்திக்கும் பாவ்லோ பிரையர் , வகுப்பறையில் ஒருவன் பட்டினியாக அமர்ந்திருந்தால், நிச்சயமாக அவனுக்கு அங்கு நடத்தப்படும் பாடங்கள் புரியாது, அது புரியாததற்கு காரணம் அவன் மந்தமானவனோ, அல்லது படிப்பில் ஆர்வம் குறைவானவனோ என்பது அல்ல என்கிறார் பாவ்லோ பிரையர்.
" அனுபவம், வர்க்கம் மற்றும் அறிவுக்கு இடையிலான உறவை எனக்கு மீண்டும் காட்டியது"
— பாவ்லோ பிரையர், [14]
தொழில்முறை வாழ்க்கை
தொகு1943ல் பாவ்லோ பிரையர் சட்டம் பயின்றார். 1946ல் அவர் சமூகப் பணி - கல்வித் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். 1961ல் கலாச்சாரத்துறையின் இயக்குநரானார். 1964ல் அங்கு நடந்த ராணுவ ஆட்சியின் போது 70 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின் சிறிது நாட்கள் பொலிவியாவில் இருந்து விட்டு பிறகு சிலியில் கிரிஸ்துவ ஜனநாயக விவசாய சீர்திருத்த இயக்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றில் ஐந்து ஆண்டுகள் வேலை செய்தார்.[15]
நூல்கள்
தொகு1967ல் விடுதலையின் ஆயுதமான கல்வி (Education as the Practice of Freedom) என்கிற அவரது முதல் நூல் வெளியானது. 1968ல் அவரது ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி (Pedagogy of the Oppressed) நூல் வெளியானது. போர்த்துகீசிய மொழியில் வெளியான இந்த நூல் 1970ல் தான் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது.[15]
இறப்பு
தொகுபாவ்லோ பிரையர் மே 2, 1997 இல் இதயக் கோளாறு காரணமாக இறந்தார்.[15]
மேற்கோள்கள்
தொகு- ↑ Clare n.d.; Díaz n.d..
- ↑ Arney 2007, p. 30; Clare n.d.; Díaz n.d..
- ↑ Díaz n.d.; Mayo 2013, p. 53.
- ↑ Blunden 2013, p. 11; Clare n.d.; Díaz n.d.; Ordóñez 1981, p. 100.
- ↑ Kahn & Kellner 2008, ப. 30.
- ↑ Clare n.d.; Peters & Besley 2015, p. 3.
- ↑ Clare n.d.; Díaz n.d.; Kress & Lake 2013, p. 30; Lake & Dagostino 2013, p. 111; Ordóñez 1981, pp. 100–101.
- ↑ Ordóñez 1981, pp. 100–101; Peters & Besley 2015, p. 3.
- ↑ Díaz n.d.; Kirylo 2011, pp. 251–252.
- ↑ Stone 2013, ப. 45.
- ↑ "The New Observer" (PDF). Justinwyllie.net. Archived from the original (PDF) on 2012-09-16. பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2013.
- ↑ "Why Paulo Freire's "Pedagogy of the Oppressed" is just as relevant today as ever | Sima Barmania | Independent Uncategorized Blogs". Blogs.independent.co.uk. 2011-10-26. Archived from the original on 2012-04-30. பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2013.
- ↑ "Paulo Freire and informal education". Infed.org. 2012-05-29. பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2013.
- ↑ Stevens, C. (2002). Critical Pedagogy on the Web. Retrieved July 18, 2008
- ↑ 15.0 15.1 15.2 "Paulo Freire". பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2013.
வெளி இணைப்புகள்
தொகு- Digital Library Paulo Freire (Pt-Br) பரணிடப்பட்டது 2008-06-04 at the வந்தவழி இயந்திரம்
- Pedagogy of the Oppressed by Paulo Freire
- PopEd Toolkit - Exercises/Links inspired by Freire's work பரணிடப்பட்டது 2006-05-11 at the வந்தவழி இயந்திரம்
- Interview with Maria Araújo Freire on her marriage to Paulo Freire
- Interview excerpt with Paulo Freire on liberation theology and Marx
- A dialogue with Paulo Freire and Ira Shor (1988) பரணிடப்பட்டது 2011-07-25 at the வந்தவழி இயந்திரம்