பாஸ்கர்புவா பக்லே
பாஸ்கர் ரகுநாத் பக்லே (Bhaskar Raghunath Bakhale) (17 அக்டோபர் 1869 - 8 ஏப்ரல் 1922) (பாஸ்கர்ராவ் அல்லது பாஸ்கர்புவா என்றும் அழைக்கப்படுகிறார்) ஒரு இந்துஸ்தானி இசைப் பாடகரும், இசையமைப்பாரும், இசை ஆசிரியருமாவார். [1] [2]
கல்வி
தொகுபாஸ்கர் பக்லே இந்தியாவின் குசராத்தில் உள்ள கதோர் என்ற கிராமத்தில் உள்ள கர்கடே பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவரது ஆரம்பகால பயிற்சி வதோதராவில் உள்ள விஷ்ணுபுவ பிங்கலேவிடம் துருபாத் மற்றும் கீர்த்தனைகளில் இருந்தது. வதோதராவின் அரச குடும்பம் அதன் அரசவை இசைக்கலைஞர் மௌலா பக்சா நடத்திய பள்ளியில் இசை பாடங்களை படிக்க ஏற்பாடு செய்தது. [3] பின்னர் இவர் அன்னாசாகேப் கிர்லோஸ்கரின் இசை நாடகக் குழுவான கிர்லோஸ்கர் நாடக் மண்டலியில் குழந்தைக் கலைஞரானார். அங்கு இவர் இந்தோர் அரசவையைச் சேர்ந்த ருத்ர வீணைக் கலைஞரான பாண்டே அலி கானுடன் காந்தா-பந்தன் விழாவை நடத்தினார். குவாலியர் கரானாவைச் சேர்ந்த பயசு முகமது கான் வதோதராவில் 1886–1897 இல் இவருக்கு கற்பித்தார்.
பின்னர் ஆக்ரா கரானாவின், ஜெய்ப்பூர் மற்றும் மைசூர் அரசவை இசைக்கலைஞரும் விலையத் உசேன் கானின் தந்தையுமான நாதன் கான் என்பவரிடம் மேலதிக பயிற்சிக்குச் சென்றார். [4] 1901 ஆம் ஆண்டில் நாதன் கான் இறக்கும் வரை மைசூர் மற்றும் தார்வாட்டில் இந்த பயிற்சி தொடர்ந்தது.
தொழில்
தொகு1883–1885 காலப்பகுதியில், கிர்லோஸ்கர் நாடக மண்டலியின் மேடை நாடகங்களில் குழந்தைக் கலைஞராக இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். பாரம்பரிய இசையில் தனது பயிற்சியை முடித்தபின், பக்லே 1899இல் ஒரு பாடகரானார். [5] 1897-1901 ஆம் ஆண்டில், தார்வாட்டில் உள்ள ஒரு பயிற்சி கல்லூரியில் இசைப் பேராசிரியராக பணியாற்றினார். 1901 ஆம் ஆண்டு தொடங்கி, இவர் மும்பை மற்றும் புனேவில் வசித்து வந்தார், இந்தியா மற்றும் நேபாளம் முழுவதும் நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். அவருக்கு "தேவ கந்தர்வன்" என்ற கௌரவத் தலைப்பு வழங்கப்பட்டது. [6] கிர்லோஸ்கர் நாடக மண்டலியின் இசை இயக்குநராகவும், பின்னர் கந்தர்வ நாடக மண்டலியின் இசை இயக்குநராகவும் இவர் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையைப் பெற்றார். [7] சங்கீத் மனப்மேன் (1911) என்ற மேடை நாடகத்திற்கு கோவிந்த்ராவ் தெம்பேவை இசையமைக்க இவர் ஏற்பாடு செய்தார். [8]
சீடர்கள்
தொகுபால கந்தர்வன், தாராபாய் சிரோத்கர், தத்தாத்ரே பாகல்கோட்கர் (தத்தோபா), பாபுராவ் கேத்கர், கிருட்டிணராவ் புலாம்ப்ரிகர் போன்றவர்களுக்கு இவர் கற்பித்தார்.
குறிப்புகள்
தொகு- ↑ V.H. Deshpande. Between Two Tanpuras. Popular Publication, 1989. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86132-226-8
- ↑ B.R. Deodhar. Pillars of Hindustani Music. Popular Publication, 1995. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7154-555-1
- ↑ Bonnie C. Wade. Khyal: Creativity Within North India's Classicial Music Tradition. Cambridge University Press. Cambridge, U.K., 1984.
- ↑ B.R. Deodhar. Pillars of Hindustani Music. Popular Publication, 1995. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7154-555-1ISBN 978-81-7154-555-1
- ↑ N. M. Kelkar. The Life of Pt. Bhaskarbuwa Bakhale. Popular Publication, Mumbai, 1959.
- ↑ Shaila Datar. Devagandharva. Rajahansa Prakashana, Nasik, 1991.
- ↑ H.V. Mote. Vishrabdha Sharada: Volumes 1–4. H.V. Mote Publication, Mumbai, 1972.
- ↑ Govind Tembe. Maza Sangeet Vyasanga (My Pursuit of Music). 1939.
வெளி இணைப்புகள்
தொகு- http://audiofarm.org/audiofiles/6497 (audio files of Bal Gandharva, Kesarbai Kerkar, and Master Krishnarao Phulambrikar)
- http://web.me.com/wvdm/Meersahebs_noblog_on_music/Articles/Entries/2007/11/13_Dilip_Chandra_Vedi.html (audio files of Dilip Chandra Vedi)
- https://web.archive.org/web/20120327155040/http://www.sawf.org/library/?d=page&parent=57&pid=sp181 (more audio files of Dilip Chandra Vedi)
- http://www.parrikar.org/raga-central/bhairavi-page2/ (audio file of Govindrao Tembe playing Bhairavi on harmonium)
- https://www.youtube.com/watch?v=5TOvh6Ec2H0 (video file of the musical Sangeet Swayamvar)
- http://courses.nus.edu.sg/course/ellpatke/Miscellany/bal%20gandharva.htm (list of Bal Gandharva's recordings)
- http://www.cs.washington.edu/homes/mausam/bakhle.html (V.H. Deshpande's article on Bakhale)
- https://web.archive.org/web/20110902080851/http://www.pracheenkalakendra.org/activities_bhaskar.php
- http://www.punebharatgayansamaj.org/ பரணிடப்பட்டது 2021-01-16 at the வந்தவழி இயந்திரம்
- https://web.archive.org/web/20120326110519/http://www.kalyangayansamaj.org/dmaboutus_eng.html
- http://www.bookganga.com/eBooks/Book/4951430475352089766.htm
- http://shailasudhirdatar.com/profile.html பரணிடப்பட்டது 2021-01-16 at the வந்தவழி இயந்திரம்
- https://web.archive.org/web/20111003090713/http://ulhaskashalkar.tripod.com/krishnar.htm
- http://www.parrikar.org/vpl/profiles/tembe_profile.pdf பரணிடப்பட்டது 2021-01-15 at the வந்தவழி இயந்திரம் (V.H. Deshpande's obituary of Govindrao Tembe)