பிங்கி ராஜ்புத்

குரல் கலைஞர்

பிங்கி பால் ராஜ்புத் ( Pinky Rajput ) (பிறப்பு 20 சனவரி 1969) என்பவர் ஓர் இந்தியப் பின்னணி குரல் கலைஞர் நடிகை, பின்னணி குரல் இயக்குநர், மொழிபெயர்ப்பாளர் ஆவார், இவர் இந்தி, ஆங்கிலம், மராத்தி ஆகிய மொழிகளில் பின்னணிக் குரல் கொடுக்கிறார்.

பிங்கி ராஜ்புத்
பிறப்பு20 சனவரி 1969 (1969-01-20) (அகவை 55)
மும்பை, இந்தியா
மற்ற பெயர்கள்பிங்கி பால் ராஜ்புத்
பணிகுரல் நடிகர், பின்னணிக் குரல் இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1993–தற்போது

பிக்கி ராஜ்புத் இந்தியாவில் உள்ள சின்க் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் இயக்குநரில் ஒருவர். (இவரது சிறந்த நண்பர் அஞ்சு ஜம்வால் பங்குதாரராகவும் தலைமை நிர்வாகியாகவும் உள்ளார்) இந்த நிறுவனம் ஹிஸ்டரி டிவி 18 இல் பல தொடர்களுக்குப்பின்னணிக் குரல்களை (ஆங்கிலம், மராத்தி ) வழங்குகிறது. தவிர இந்தி மற்றும் பல பிராந்திய மொழிகளில் பின்னணிக் குரல் பணிகளைக் கையாள்வதற்காக அறியப்படுகிறது. ஹிஸ்டரி டிவி 18 தவிர, பல பிராந்திய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு பின்னணிக் குரல் பணிகளைக் கையாள்வதற்காக இந்த நிறுவனம் அறியப்படுகிறது. "மயூகி இன் சின்க்" பல அனிமேஷன் தொடர்கள் மற்றும் கார்ட்டூன் நெட்வொர்க், போகோ மற்றும் நிக்லோடின் ஆகியவற்றுக்கான அம்சங்களைச் செய்துள்ளது.[1] பிங்கி ராஜ்புத் பார்பியின் குரலாகவும், பார்பி திரைப்படத் தொடருக்கான உரையாடல் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றுகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களை இந்தியில் மொழிமாற்றும் போது அந்தப் படங்களுக்கு இந்தி பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

பின்னணிக் குரல் தொழில்

தொகு

இவர் ஓர் இந்தி தொலைக்காட்சித் தொடருக்கு வேத் ராகியுடன் தலைமை உதவி இயக்குநராக இருந்தபோது, முதன் முதலில் 1993 ஆம் ஆண்டில் இந்தியில் பின்னணிக் குரல் கொடுக்கத் தொடங்கினார். அது ஒரு தற்செயல் நிகழ்வு ஆகும். படப்பிடிப்பின் போது தொண்டை வலியால் அவதிப்பட்ட ஒரு நடிகைக்குப் பின்னணிக் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனால், அந்தப் படப்பிடிப்பின் போது பின்னணிக் குரல் கலைஞர் ஒருவரைக் கண்டடைவது கடினமாக இருந்ததால், அந்தக் கதாபாத்திரத்திற்கு இந்தியில் பின்னணிக் குரல் கொடுக்குமாறு இவரது இயக்குநர் கூறினார். அப்போதுதான் முதன்முதலில் பின்னணிக் குரல் கொடுத்தார். பின்னர் வெகு காலம் கழித்து, இவர் சாகர் ஆர்ட்ஸ் பட நிறுவனத்துக்குச் சென்றார். தன் பணியை "ஸ்ரீ கிருஷ்ணா"விலிருந்து தொடங்கியது. அதன்பிறகு, டிஸ்னி, கார்ட்டூன் நெட்வொர்க், போகோ, மற்றும் நிக், வானொலி விளம்பரங்கள், வானொலி நாடகங்கள், ஆவணப்படங்கள் மற்றும் பலவற்றிற்காகப் பின்னணிக் குரல் கொடுத்தார். மேலும் பல இந்தி படங்களின் பாத்திரங்களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்தார்.[2] இவர் தொலைக்காட்சி விளம்பரங்களுக்கும் பின்னணி பேசுகிறார்.

பந்தன், கியோ கி... மெயின் ஜுத் நஹின் போல்டா, கிரோத் போன்ற படங்களில் நடிகை ரம்பாவுக்கு பின்னணிக் குரலை பிங்கி ராஜ்புத் கொடுத்துள்ளார். இந்தி திரைப்படமான ஜோடி நம்பர் 1 படத்தில் நடிகை மோனிகா பேடிக்குப் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.

பார்பி படத்துக்கும் பிங்கி ராஜ்புத் பின்னணி குரல் கொடுத்துள்ளார். முதலில் இந்தியில் ராஜ்ஸ்ரீ நாத் மொழிமாற்றம் செய்த முதல் நான்கு படங்களுக்குப் பிறகு, பின் வந்த பார்பி படங்கள் அனைத்திலும் பார்பி பாத்திரத்துக்கு இந்தியில் பின்னணிக் குரல் கொடுக்க அந்த பாத்திரதை பிங்கி ராஜ்புத்திடம் ஒப்படைத்தார். இருப்பினும், ஒரு சில பார்பி திரைப்படங்கள் இரண்டு இந்தி மொழிமாற்றங்களைப் பெற்றன, மேலும் போகோவில் ஒளிபரப்பப்படும் அந்த படங்களுக்கான தொலைக்காட்சி வடிவத்தில் மட்டுமே பார்பிக்கு இவர் பின்னணிக் குரல் கொடுத்தார்.

பிங்கி ராஜ்புத், கலர்ஸ் தொலைக்காட்சிக்காகப் பிரபலமான இந்தி தொடரான ஜெய் ஸ்ரீ கிருஷ்ணாவில் குழந்தை கிருஷ்ணனின் (200க்கும் மேற்பட்ட அத்தியாயங்களில்) குரலுக்காக குரல் கொடுத்துள்ளார். சஹாரா ஒன் சேனலுக்காக " ஜெய் ஜெய் ஜெய் பஜ்ரங் பாலி " தொடருக்கு (150 அத்தியாயங்களுக்கு மேல்) குட்டி "அனுமாரு"க்கு இவர் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். இவர் "சாய் பாபா", "ஜெய் கங்கா மையா", " அலிஃப் லைலா " மற்றும் பல புராண தொடர்களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Dub-star Confidential - Indian Express". www.indianexpress.com.
  2. "Archived copy". Archived from the original on 29 April 2012. பார்க்கப்பட்ட நாள் 13 April 2012.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிங்கி_ராஜ்புத்&oldid=3944566" இலிருந்து மீள்விக்கப்பட்டது