பிசுமத் ஆக்சியயோடைடு

வேதிச் சேர்மம்

பிசுமத் ஆக்சியயோடைடு (Bismuth oxyiodide) என்பது BiIO என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிசுமத், அயோடின், ஆக்சிசன் ஆகிய சேர்மங்கள் சேர்ந்து பிசுமத் ஆக்சியடோடைடு உருவாகிறது.

பிசுமத் ஆக்சியயோடைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பிசுமத் ஆக்சைடு அயோடைடு
பிசுமத் அயோடைடு ஆக்சைடு
இனங்காட்டிகள்
7787-63-5 Y
யேமல் -3D படிமங்கள் Image
  • I[Bi]=O
பண்புகள்
BiIO
வாய்ப்பாட்டு எடை 351.88 கி·மோல்−1
தோற்றம் செங்கல் சிவப்பு நிற திண்மம்[1]
அடர்த்தி 8.0 கி·செ.மீ−3[1]
கொதிநிலை 300 °C (573 K) (சிதைவடையும்)[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

பிசுமத் (III) ஆக்சைடுடன் ஐதரயோடிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் பிசுமத் ஆக்சியோடைடைப் பெறலாம்:[1]

Bi2O3 + 2HI ---> 2BiOI + H2O

பிசுமத் நைட்ரேட் பெ ண்டா ஐதரேட்டுடன் எத்திலீன் கிளைக்காலில் கரைக்கப்பட்ட பொட்டாசியம் அயோடைடை சேர்த்து 160 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தி வினைபுரியச் செய்தாலும் பிசுமத் ஆக்சியடோடைடை தயாரிக்கலாம்.[3] நைட்ரிக் அமிலத்துடன் அமிலமைய பிசுமத் நைட்ரேட்டின் நீரிய கரைசல் சோடியம் ஐதராக்சைடால் சரி செய்யப்பட்டு, பொட்டாசியம் அயோடைடுடன் துளித் துளியாகச் சேர்த்து விளை பொருளை பெறவேண்டும். மேலும் ஆக்சி அயோடைடுகளின் மற்ற விகிதாச்சாரங்களும் வெவ்வேறு சரிசெய்தல்களின்படி உற்பத்தி செய்யப்படுகின்றன.[4]

பண்புகள்

தொகு

பிசுமத் ஆக்சியடோடைடு செங்கல் சிவப்பு நிறப்படிகத் தூள் அல்லது செப்பு நிற படிகங்களாக உருவாகிறது. தண்ணீர் மற்றும் எத்தனாலில் பிசுமத் ஆக்சியடோடைடு கரையாது. சூடுபடுத்தப்பட்டாலும் தண்ணீரில் சிறிதளவே கரைகிறது. செஞ்சிவப்பு நிலைக்கு சூடுபடுத்தினால் உருகி சிதைவைடைகிறது.[1] P4/nmm (எண். 129) என்ற இடக்குழுவில் நாற்கோண படிகவமைப்பு கட்டமைப்பில் பிசுமத் ஆக்சியடோடைடு காணப்படுகிறது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Handbuch der präparativen anorganischen Chemie. 1 (3., umgearb. Aufl ed.). Stuttgart: Enke. 1975. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-432-02328-1.
  2. Haynes, William M. (2012-06-22). CRC Handbook of Chemistry and Physics, 93rd Edition (in ஆங்கிலம்). CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-8049-4.
  3. 付大卫, 谢汝义, 张琳萍,等. 空心球状碘氧化铋的制备及其对染料的吸附降解性能 பரணிடப்பட்டது 2019-08-20 at the வந்தவழி இயந்திரம்[J]. 应用化学, 2017, 34(5):590-596.
  4. Wenlian William Lee, Chung-Shin Lu, Chung-Wei Chuang, Yen-Ju Chen, Jing-Ya Fu, Ciao-Wei Siao, Chiing-Chang Chen (2015). "Synthesis of bismuth oxyiodides and their composites: characterization, photocatalytic activity, and degradation mechanisms" (in en). RSC Advances 5 (30): 23450–23463. doi:10.1039/c4ra15072d. பன்னாட்டுத் தர தொடர் எண்:2046-2069. http://xlink.rsc.org/?DOI=C4RA15072D. பார்த்த நாள்: 2018-08-20. 
  5. Ans, Jean d'; Lax, Ellen (1998). Taschenbuch für Chemiker und Physiker (in ஜெர்மன்). Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-60035-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசுமத்_ஆக்சியயோடைடு&oldid=3879792" இலிருந்து மீள்விக்கப்பட்டது