பிஜாய் சாகர்
பிஜாய் சாகர் (Bijoy sagar) (விஜய் சாகர் ) என்பது வடகிழக்கு இந்தியாவில் திரிபுராவின் உதய்ப்பூரில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகும். இது மகாதேவ் திகி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏரி 750 அடி நீளமும் 450 அடி அகலமும் கொண்டது. ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த குடியிருப்புகளாக உள்ளன. வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு வாய்க்கால் வழியாக வீட்டு கழிவுநீர் மற்றும் கழிவு நீரால் ஏரி மாசுபட்டுள்ளது. மக்கள் குளிப்பதற்கும், கழுவுவதற்கும், மீன்பிடிப்பதற்கும் இந்த ஏரியை நம்பியிருக்கிறார்கள். மேலும் சுற்றியுள்ள வீடுகளின் திடக்கழிவுகளும் ஏரியில் விடப்படுகின்றன.[1]
பிஜாய் சாகர் | |
---|---|
பிஜாய் சாகர் ஏரியின் தோற்றம் | |
அமைவிடம் | திரிபுரா, இந்தியா |
ஆள்கூறுகள் | 23°32′17″N 91°29′56″E / 23.538°N 91.499°E |
வகை | ஏரி |
வரலாறு
தொகுவடகிழக்கு இந்தியாவில், 1684-இல் மாணிக்ய அரச மரபால் நிறுவப்பட்ட சுதந்திர திரிபுரா இராச்சியத்தை ஆண்ட தான்ய மாணிக்யா மற்றும் கோவிந்த மாணிக்யா ஆகியோரின் இடைப்பட்ட ஆட்சிக் காலத்தில் இந்த ஏரி தோண்டப்பட்டது. இந்த ஏரி வீர் விக்ரம் கிசோர் மாணிக்கம் ஆட்சியின் போது அளவிடப்பட்டது.
திரிபுராவின் மன்னர் ஜுஜரூபா மோக் வம்சத்தை தோற்கடித்து ரங்கமதியைக் ( உதய்ப்பூர் முன்பு ரங்கமதி என்றும் அழைக்கப்பட்டது ) கைப்பற்றி கி.பி 590 ஆம் ஆண்டின் மத்தியில் உதய்பூரில் தனது புதிய தலைநகரை நிறுவினார். அவரது சந்ததியினர் தங்கள் பெயரை மாணிக்யா என்று மாற்றிக்கொண்டு உதய்பூரில் திரிபுரசுந்தரி கோயில், புவனேசுவரி கோயில், குணபதி மந்திர், சிவன் கோயில், ஜெகந்நாதர் கோயில், கோபிநாத் கோயில், பதர்சகேத் பாரி மற்றும் துடியா மந்திர் போன்ற பல கோயில்களைக் கட்டினார்கள். இந்த கட்டத்தில், ஏரிகள் மற்றும் கோயில்களின் நகரத்திற்கு அழகு சேர்க்க அமர்சாகர், ஜகந்நாத் திகி, தனிசாகர் (தான்ய சாகர்) மற்றும் பிஜோய் சாகர் (மகாதேவ் திகி) போன்ற பல ஏரிகள் தோண்டப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டில் திரிபுராவின் தலைநகராகவும் இருந்தது. [2]
முக்கியமானவை
தொகுதிரிபுராவின் முதல் கல்லூரியான நேதாஜி சுபாஷ் மகாவித்யாலயா ஏரியின் கரையில் அமைந்துள்ளது. கல்லூரி 1964 இல் தனது பயணத்தைத் தொடங்கியது. 1977 இல் திரிபுரா அரசு இக்கல்லூரியை நிரந்தரமாக வைக்க ஏரியின் கரையில் ஒரு நிலத்தை ஒதுக்கியது.
ஏரிக்கரையில் சிவனுக்கான திரிபுரேசுவர் கோயில் உள்ளது.
ஏரிக்கு வடக்கே மகாதேவ் கோவிலின் முன் பாறையில் செதுக்கப்பட்ட இரண்டு சிங்கங்களின் உருவங்கள் உள்ளன.[3]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Pollution Status Assessment of Mahadeb Dighi,South Tripura" (PDF). Tripura Pollution control board. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-05-11.
- ↑ "A Brief History Of Udaipur - TRIPURA MIRROR".
- ↑ "Heritages of Tripura".