பிஞ்சூர் (Pinjore) இந்தியாவின் அரியானா மாநிலத்தின் பஞ்சகுலா மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும். பிஞ்சூர் நகரம், சண்டிகரிலிருந்து கால்கா செல்லும் பாதையில், கடல் மட்டத்திலிருந்து 1,800 அடி உயரத்தில் உள்ளது. சண்டிகரிலிருந்து பிஞ்சூர் நகரம் 20 கிமீ தொலைவில் உள்ளது.

பிஞ்சூர்
पिंजौर
நகரம்
பிஞ்சூர் is located in அரியானா
பிஞ்சூர்
பிஞ்சூர்
இந்தியாவின் அரியானா மாநிலத்தில் பிஞ்சூர் நகரத்தின் அமைவிடம்
பிஞ்சூர் is located in இந்தியா
பிஞ்சூர்
பிஞ்சூர்
பிஞ்சூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 30°47′50″N 76°55′02″E / 30.7972°N 76.9172°E / 30.7972; 76.9172
நாடு இந்தியா
மாநிலம்அரியானா
மாவட்டம்பஞ்சகுலா
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்35,912
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
தொலைபேசி குறியீடு எண்01733
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-HR
வாகனப் பதிவுHR
இணையதளம்haryana.gov.in

பிஞ்சூரில் 17ம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட பிஞ்சூர் தோட்டத்தால், இந்நகரம் புகழ் பெற்றது[2] இந்நகரத்தில் இந்துஸ்தான் மெசின் டூல்ஸ் நிறுவனத்தின் ஒரு அலகு செயல்படுகிறது.

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011ம் ஆண்டின் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பிஞ்சூர் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 35,912 ஆகும். இந்நகரத்தில் 7,752 வீடுகள் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4,190 (11.67%) ஆக உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 875 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 89.64 % ஆகவுள்ளது. பிஞ்சூர் நகராட்சி மன்றம், 15 உறுப்பினர்களைக் கொண்டது. Pinjore Population Census 2011

பிஞ்சூர் மக்கள்தொகையில் இந்துக்கள் 85.39%; சீக்கியர்கள் 10.45%; இசுலாமியர்கள் 3.14%, கிறித்தவர்கள் 0.79%, மற்றவர்கள் 0.24% ஆகவும் உள்ளனர்.

தட்பவெப்பம் தொகு

மலைப்பகுதி என்பதால் பிஞ்சூர் நகரத்தின் சராசரி தட்பவெப்பம், கோடை மற்றும் குளிர்காலங்களில் 35 முதல் 18 பாகை செல்சியசு வெப்பம் நிலவுகிறது. சூலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் பருவமழை பொழிகிறது.

பிஞ்சூர் தோட்டம் தொகு

 
பிஞ்சூர் தோட்டம்

பிஞ்சூரில் அமைந்துள்ள இத்தோட்டம் மொகலாயர் தோட்டக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட பிஞ்சூர் தோட்டம் பாட்டியாலா அரச குல மன்னர்களால் மறுசீரமைக்கப்பட்டது. இத்தோட்டம் காலை ஏழு மணி முதல் இரவு பத்து மணி வரை பார்வையாளர்களுக்காகத் திறந்து வைக்கப்படுகிறது.

இத்தோட்டம் சண்டிகரிலிருந்து 22 கிமீ தொலைவில் அம்பாலா - சிம்லா நெடுஞ்சாலையில் பிஞ்சூர் கிராமத்தில் அமைந்துள்ளது.

17-ஆம் நூற்றாண்டில் மொகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பால் ஆதரித்து வளர்க்கப்பட்ட நவாப் பிதாய் கான் என்ற வல்லுனரால் இத்தோட்டம் வடிவமைக்கப்பட்டது.

பாட்டியாலா நாட்டின் மன்னராக இருந்த யதவீந்திர சிங் நினைவைப் போற்றும் விதமாக, பாழாகிப் போயிருந்த பிஞ்சூர் தோட்டத்தை சீரமைத்து யதவீந்திர தோட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. [3]

போக்குவரத்து தொகு

சாலைப்போக்குவரத்து தொகு

தில்லியிலிருந்து 269 கிமீ தொலைவில் உள்ள பிஞ்சூருக்கு சோனிபட் புறவழிச்சாலை வழியாக அடையலாம். சண்டிகரிலிருந்து பிஞ்சூர் 20 கிமீ தொலைவில் உள்ளது.

தொடருந்து தொகு

தில்லி - சண்டிகர் - கல்கா செல்லும் இருப்புப் பாதை, கால்கா தொடருந்து நிலையம் வழியாக செல்கிறது. கல்கா தொடருந்து நிலையத்திலிருந்து பிஞ்சூர் 5 கிமீ தொலைவில் உள்ளது.


மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஞ்சூர்&oldid=3714742" இருந்து மீள்விக்கப்பட்டது