பிரகத்திர மௌரியன்


பிரகத்திர மௌரியன் (Brihadratha Maurya), சத்தாதன்வனுக்குப் பின் கி மு 187 முதல் 180 முடிய மௌரியப் பேரரசின் இறுதி மன்னராக இருந்தவர்.[1] பிரகத்திர மௌரியனை, அவரது போர்ப்படைத் தலைவரும், பிராமணருமான புஷ்யமித்திர சுங்கன் என்பவர் கொன்று, மௌரிய வம்சத்தை முடிவுக்கு கொண்டு வந்து சுங்கப் பேரரசை நிறுவினார்.

பிரகத்திர மௌரியன்
9வது மற்றும் இறுதி மௌரியப் பேரரசர்
ஆட்சிக்காலம்கி மு 187 - 180
முன்னையவர்சத்தாதன்வன்
பின்னையவர்புஷ்யமித்திர சுங்கன் (சுங்க வம்ச நிறுவனர்)
அரசமரபுமௌரிய வம்சம்

பிரகத்திரனின் ஆட்சிக்காலம்தொகு

இவரது ஆட்சிக் காலத்தில் பல் வேறு மன்னர்களின் தொடர் படையெடுப்பால், மௌரியப் பேரரசின் பகுதிகள் சுருங்கி, மகதப் பகுதி (தற்கால பிகார்) மட்டும் மௌரியப் பேரரசில் எஞ்சியிருந்தது. இவரது மறைவுக்குப் பின்னர் மௌரியப் படைத்தலைவர் புஷ்யமித்திர சுங்கன் ஆட்சியை கைப்பற்றினார். [2]

புராணக் குறிப்புகளின் படி, மௌரியப் பேரரசர் சாதவதன்வானிற்குப் பின்னர் வந்த பிரகத்திர மௌரியன் ஏழு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.[2]அசோகர் காலத்திய மௌரியப் பேரரசின் நிலப் பரப்புகள், பிரகத்திரனின் ஆட்சிக் காலத்தில் மிகச் சுருங்கி தலைநகர் பாடலிபுத்திரம் அளவிற்குள் சுருங்கி விட்டது.

முதலாம் தெமித்திரஸ்தொகு

கி மு 180-இல் கிரேக்க – பாக்டீரியாவின் கிரேக்க மன்னர் முதலாம் தெமித்திரஸ், மௌரியப் பேரரசின் வடமேற்கு பகுதிகளான தற்கால ஆப்கானித்தான் மற்றும் பாக்கித்தான் பகுதிகளைத் தாக்கினார்.

யுக புராணத்தின் படி, யவனர்களின் படைத்தலைவர் தர்மமித்திரன் எனும் தெமித்திரஸ், பிரகத்திரன் ஆண்ட மௌரியப் பேரரசின் பாஞ்சாலம், மதுரா மற்றும் சகேதம் பகுதிகளை கைப்பற்றி சிறிது காலம் மட்டுமே ஆண்டார்.[3]

புஷ்யமித்திர சுங்கன்தொகு

பிரகத்திர மௌரியனின் தலைமைப் படைத்தலைவரும், பிராமணருமான புஷ்யமித்திர சுங்கன், கி மு 180-இல் மௌரியப் பேரரசர் பிரகத்திரனைக் கொன்று, மகத நாட்டில் சுங்க வம்சத்தை நிறுவினார்.

பாணபட்டர் எழுதிய ஹர்ச சரித்திரம் எனும் வரலாற்று நூலில் பிரகத்திர மௌரியனை எவ்வாறு சுங்க வம்சத்து படைத்தலைவர் புஷ்யமித்திர சுங்கன் கொன்று மகத நாட்டை கைப்பற்றினார் என்ற விவரங்கள் உள்ளது.[4]

மேற்கோள்கள்தொகு

  1. "Brihadratha (Maurya Emperor)". 2017-02-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-10-28 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 Thapar, Romila (1998). Aśoka and the decline of the Mauryas (2nd ). Delhi: Oxford University Press. பக். 182–183. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-564445-X.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "thapar" defined multiple times with different content
  3. Lahiri, B. (1974). Indigenous States of Northern India (Circa 200 B.C. to 320 A.D.) , Calcutta: University of Calcutta, pp.22-4
  4. Lahiri, B. (1974). Indigenous States of Northern India (Circa 200 B.C. to 320 A.D.) , Calcutta: University of Calcutta, pp.24-5


பிரகத்திர மௌரியன்
முன்னர்
சத்தாதன்வன்
மௌரியப் பேரரசு பின்னர்
புஷ்யமித்திர சுங்கன்
(சுங்கப் பேரரசு)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரகத்திர_மௌரியன்&oldid=3563419" இருந்து மீள்விக்கப்பட்டது