பிரசியோடைமியம்(III) கார்பனேட்டு

வேதிச் சேர்மம்

பிரசியோடைமியம்(III) கார்பனேட்டு (Praseodymium(III) carbonate) என்பது Pr2(CO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நீரிலி நிலையில் காணப்படும் இச்சேர்மம் ஆலிவ் பச்சை நிறத்தில் காணப்படுகிறது.[3] பிரசியோடைமியத்தின் எழுநீரேற்று, எண்ணீரேற்றுகளும் அறியப்படுகின்றன. இவை அனைத்தும் தண்ணீரில் கரையாதவைகளாகும்.[2]

பிரசியோடைமியம்(III) கார்பனேட்டு
Praseodymium(III) carbonate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பிரசியோடைமியம்(III) கார்பனேட்டு
இனங்காட்டிகள்
5895-45-4 Y
14948-62-0 Y
EC number 227-578-9
InChI
  • InChI=1S/3CH2O3.2Pr/c3*2-1(3)4;;/h3*(H2,2,3,4);;/q;;;2*+3/p-6
    Key: XIRHLBQGEYXJKG-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 165369
  • C(=O)([O-])[O-].C(=O)([O-])[O-].C(=O)([O-])[O-].[Pr+3].[Pr+3]
பண்புகள்
Pr2(CO3)3
வாய்ப்பாட்டு எடை 461.849 (நீரிலி)
605.977 (எண்ணீரேற்று)
தோற்றம் பச்சை படிகங்கள் (எண்ணீரேற்று) [1]
கரையாது.
(1.99×10−6மோள்/லி) [2]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பிரசியோடைமியம்(III) குளோரோ அசிட்டேட்டு
பிரசியோடைமியம்(III) சல்பேட்டு
பிரசியோடைமியம்(III) நைட்ரேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் சீரியம்(III) கார்பனேட்டு
நியோடிமியம் கார்பனேட்டு.
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பிரசியோடைமியம்(III) குளோரோ அசிட்டேட்டை நீராற்பகுப்பு செய்து பிரசியோடைமியம்(III) கார்பனேட்டை தயாரிக்கலாம். :[2][4]

2 Pr(C2Cl3O2)3 + 3 H2O → Pr2(CO3)3 + 6 CHCl3 + 3 CO2

கார்பன் டை ஆக்சைடுடன் நிறைவுற்ற சோடியம் பைகார்பனேட்டை பிரசியோடைமியம் குளோரைடு கரைசலுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமும் இதை தயாரிக்கலாம்.[4]

வேதிப்பண்புகள்

தொகு

பிரசியோடைமியம்(III) கார்பனேட்டு அமிலங்களுடன் வினைபுரியும். இவ்வினையின் போது கார்பனீராக்சைடு வெளியிடப்படுகிறது.:[5]

Pr2(CO3)3 + 6 H+ → 2 Pr3+ + 3 H2O + 3 CO2

இது தண்ணீரில் கரையாது. [2]

பிற சேர்மங்கள்

தொகு

பிரசியோடைமியம்(III) கார்பனேட்டு ஐதரசீனுடன் வினைபுரிந்து வெளிர் பச்சைநிறப் படிகங்களான Pr2(CO3)3•12N2H4•5H2O என்ற சேர்மத்தைக் கொடுக்கிறது. தண்ணீரில் இது சிறிதளவு கரையும் ஆனால் பென்சீனில் கரையாது. 20°செல்சியசு வெப்பநிலையில் இதன் அடர்த்தி 1.873 கி/செ.மீ3.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. 《化学化工物性数据手册》 (无机卷) . 化学工业出版社. P320. 7.2 碳酸盐. ISBN 7-5025-3591-8
  2. 2.0 2.1 2.2 2.3 《无机化学丛书》. 第七卷 钪 稀土元素. 易宪武 黄春晖 等编.科学出版社. P174. 碳酸盐. ISBN 978-7-03-030574-9
  3. Rare earth elements: Main volume, Phần 3 (Leopold Gmelin; Verlag Chemie, 1994), page 22; 68. Retrieved 4 Feb 2021.
  4. 4.0 4.1 冯天泽. 稀土碳酸盐的制法、性质和组成. 《稀土》. 1989年第3期. pp.45~49
  5. PubChem. "Praseodymium Carbonate Octahydrate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-10.
  6. Uchenye zapiski: Serii︠a︡ khimicheskikh nauk (S.M. Kirov adyna Azărbai̐jan Dȯvlăt Universiteti; 1977), page 37. Retrieved 7 Feb 2021.