பிரதிமா பூமிக்
இந்திய அரசியல்வாதி
பிரதிமா பூமிக் (பிறப்பு 28 மே 1969) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார், அவர் தற்போது இரண்டாவது மோடி அமைச்சரவையில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தில் மத்திய இணையமைச்சராக பணியாற்றுகிறார்.[1] திரிபுராவை பூர்வீகமாகக் கொண்ட வடகிழக்கில் இருந்து மத்திய அமைச்சராகும் இரண்டாவது பெண்மணி இவர்.[2] மேலும் இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக திரிபுரா மேற்கு பகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
இவர் தற்போது இந்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் இணை அமைச்சராக உள்ளார்.
கல்வி
தொகுபிரதிமா பௌமிக் 1991 இல் திரிபுரா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அகர்தலா மகளிர் கல்லூரியில் உயிரி அறிவியலில் பட்டம் பெற்றவர்.[சான்று தேவை]
மக்களவை நிலைக்குழு
தொகு- உறுப்பினர், உணவு, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகத்திற்கான நிலைக்குழு
- உறுப்பினர், சபையின் அமர்வில் உறுப்பினர்கள் இல்லாத குழு
மேற்கோள்கள்
தொகு- ↑ "Cabinet Reshuffle: The full list of Modi's new ministers and what they got". தி எகனாமிக் டைம்ஸ். 8 July 2021. பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.
- ↑ "Pratima Bhowmik: First Tripura resident to make it to Union cabinet". 8 July 2021.
- ↑ "Pratima Bhoumik(Bharatiya Janata Party(BJP)):Constituency- TRIPURA WEST(TRIPURA) - Affidavit Information of Candidate".