பிரதீப் ரவட்

தமிழ்த் திரைப்பட நடிகர்

பிரதீப் சிங் ரவட் இந்திய நடிகர். இவர் பெரும்பாலும் கதைநாயகனுக்கு எதிர் பாத்திரத்தில் நடிப்பவர். இவர் தமிழ் தெலுங்கு இந்தி மலையாளம் கன்னடம் ஒரிய மொழி படங்களில் நடித்துள்ளார்.

பிரதீப் ரவட்
Rawatman.jpg
பிறப்புஜபல்பூர்
இருப்பிடம்மும்பை
பணிநடிகர், வங்கியாளர்

இவர் மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் பிறந்தார், அங்கு உள்ள யூகோ வங்கியில் பணி புரிந்தார். மகாபாரத தொடரில் துரோணாச்சாரியாரின் மகன் அசுவத்தாமனாக நடித்ததே இவரின் முதல் திரை அறிமுகமாகும். தமிழ் கஜினி திரைப்படத்தில் ராம் , லட்சுமணன் என இரு பாத்திரத்தில் நடித்தார். இந்தி கஜினி திரைப்படத்தில் கஜினி என்ற பாத்திரத்தில் நடித்தார். இராஜமௌலியின் சை என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரைஉலகுக்கு அறிமுகமானார். 2005ம் ஆண்டிற்கான பிலிம்பேர், சந்தோசம், நந்தி விருதுகளை சை படத்தில் சிறந்த எதிர் நாயகனாக நடித்ததற்காக பெற்றார்

தமிழ்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதீப்_ரவட்&oldid=2720507" இருந்து மீள்விக்கப்பட்டது