பிரப்சோத் கவுர்

பிரப்சோத் கவுர் (6 ஜூலை 1924 - 24 நவம்பர் 2016), இந்தியாவின் குசராத்து மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சாபி மொழி எழுத்தாளரும் கவிஞருமாவார்.

பிரப்சோத் கவுர்
பிறப்பு(1924-07-06)6 சூலை 1924 [1]
இறப்பு24 நவம்பர் 2016(2016-11-24) (அகவை 92)
தேசியம்இந்தியர்
பணிஎழுத்தாளர், கவிஞர்

வரலாறு தொகு

பிரித்தானிய இந்தியாவின் குசராத்தில் பிறந்த பிரப்சோத் கவுர்[2] [3] [4] எழுத்தாளரும் நாவலாசிரியருமான நரேந்தர்பால் சிங் என்பவரை மணந்துள்ளார்.[4]

புது தில்லியில் உள்ள பாதுகாப்பு காலனியில் வசித்து வரும் இத்தம்பதிக்கு அனுபமா மற்றும் நிருபமா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். சர்தார் ஹுகம் சிங் என்ற இந்திய மக்களவையின் மூன்றாவது சபாநாயகரை நிருபமா மணந்துள்ளார் இந்திய இராணுவத்தின் முன்னாள் தலைவரான ஜெனரல் ஜோகிந்தர் ஜஸ்வந்த் சிங்கை அனுபமா திருமணம் செய்து கொண்டுள்ளார்.

புத்தகங்கள் மற்றும் கவிதைகள் தொகு

  • பீடபூமி
  • கனவுகள் இளமையிலேயே இறக்கின்றன [5]
  • பாபி: பஞ்சாபி கவிதா சங்கலனா
  • ஜிந்தகி தே குஜா பாலா
  • கினாகே
  • மத்தியாந்தரா
  • காந்தார யுகம் : கவிதாவாம்
  • காரி
  • காந்தாரி ஹவா
  • போலனா தீ நஹிம் ஜா வே அரியா

விருதுகள் தொகு

  • கவுர், 1964 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கவிதைத் தொகுப்பான "பப்பி"க்காக சாகித்ய அகாடமி விருதை வென்றுள்ளார். இவரது கணவர் நரேந்தர்பால் சிங்கும் 1976 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • பத்மசிறீ விருது, [6] 1967.
  • "பிரான்சின் ரோசா" விருது, 1968
  • அமெரிக்காவின் கவிதை இயக்கம் இவரை சிறப்புமிக்க கவிதையால் பெருமைப்படுத்தியுள்ளது.
  • பஞ்சாபின் மாநிலச் சட்டமன்ற மேலவைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
  • யுனெஸ்கோவின் உறுப்பினர்

இறப்பு தொகு

24 கவிதைத் தொகுப்புகளையும் நான்கு சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ள பிரப்சோத் அவரது 92 ஆம் அகவையில் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் காலமானார்.[7]

மேற்கோள்கள் தொகு

  1. R. P. Malhotra; Kuldeep Arora (2003). Encyclopaedic Dictionary of Punjabi Literature: A-L. Global Vision Publishing House. பக். 294–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-87746-52-2. https://books.google.com/books?id=WLAwnSA2uwQC&pg=PA294. 
  2. "KAUR, PRABHJOT (1924 - ) - Famous Sikh personalities". 2016-09-17. Archived from the original on 2016-09-17. பார்க்கப்பட்ட நாள் 2018-01-07.
  3. "Prabhjot Kaur worldcat". worldcat.org. பார்க்கப்பட்ட நாள் 6 July 2016.
  4. 4.0 4.1 "Punjabi poet Prabhjot Kaur passes away". tribuneindia.com.
  5. Dreams die young. இணையக் கணினி நூலக மையம்:7548887. https://www.worldcat.org/oclc/7548887. பார்த்த நாள்: 7 July 2016. 
  6. "Year wise list of Padma Shri recipients - 1954 to 2014" (PDF). mha.nic.in. pp. Page 27 of 193 No. 42. Archived from the original (PDF) on 15 November 2016. பார்க்கப்பட்ட நாள் 6 July 2016.
  7. "பஞ்சாபி கவிஞர் பிரப்சோத் கவுர் காலமானார்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரப்சோத்_கவுர்&oldid=3894594" இலிருந்து மீள்விக்கப்பட்டது