பிரம்மா.காம்

பிரம்மா.காம் 2017 ஆம் ஆண்டு நகுல் மற்றும் ஆஷ்னா சவேரி நடிப்பில், விஜயகுமார் இயக்கத்தில், சித்தார்த் விபின் இசையில் வெளியான தமிழ் திரைப்படம்[1].

பிரம்மா.காம்
இயக்கம்பி. எஸ். விஜயகுமார்
தயாரிப்புமிலானா கார்த்திகேயன்
கதைபி. எஸ். விஜயகுமார்
இசைசித்தார்த் விபின்
நடிப்புநகுல்
ஆஷ்னா சவேரி
நீத்து சந்திரா
சித்தார்த் விபின்
ராசேந்திரன்
கே. பாக்யராஜ்
ஜெகன்
கெளசல்யா
ஒளிப்பதிவுதீபக் குமார் பதி
படத்தொகுப்புவி. ஜே. சாபு ஜோசப்
கலையகம்கணேஷ் ட்ரீம் பாக்டரி
வெளியீடு15 திசம்பர் 2017
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

தொகு

காமேஸ்வரன் (நகுல்) திறமையான விளம்பரப் பட இயக்குனர். வணங்காமுடியின் (ராஜேந்திரன்) நிறுவனத்தில், முதன்மைப் பொறுப்பில் உள்ள ராமேஸ்வரனின் (சித்தார்த் விபின்) கீழ் வேலை பார்க்கிறான் காமேஷ். காமேஷின் உறவினர்தான் ராமேஸ்வரன். ராமுவை விட திறமையானவனாக இருந்தாலும் காமேஷ் செய்த சிறு தவறால் அவனுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு ராமேஸ்வரனுக்குக் கிடைத்திருக்கிறது. தன்னுடைய வாழ்க்கை தான் நினைத்தது போல இல்லையென்று இறைவன் பிரம்மனைத் திட்டிக் கொண்டே இருக்கிறான் காமேஷ். காமேஷும் விளம்பரப் பட நடிகை மனிஷாவும் (ஆஷ்னா சவேரி) காதலர்கள்.

காமேஷ் தன் பிறந்த நாளன்று கோயிலுக்கு செல்கிறான். கோயில் மூடவேண்டிய நேரமாகிவிட்டதால் அங்குள்ள பிரம்மனின் சன்னதியில் வழிபட்டுச்செல்லுமாறு கூறுகிறார் அர்ச்சகர். பிரம்மனிடம் சென்று தன்னுடைய குறைகளை எல்லாம் சொல்லி, அவற்றை நீக்கி தனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய அருள்புரியுமாறு கேட்கிறான். அடுத்த நாள் அவனது முகநூல் கணக்கிற்கு "பிரம்மா" என்ற பெயரில் ஒரு நட்பழைப்பு வருகிறது. யாரோ தன்னிடம் கேலி செய்து விளையாடுகிறார்கள் என்றெண்ணி அந்த நட்பாலைப்பை ஏற்றுக்கொண்டு பிரம்மாவுடன் உள்பெட்டியில் உரையாடுகிறான். தான் உண்மையிலேயே கடவுள் பிரம்மா என்பதை நிரூபிக்க காமேஷ் கேட்டவாறு அவனது குழந்தைப்பருவ வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகள் முதல் இப்போதுவரையிலான பல்வேறு புகைப்படங்களை அனுப்பி தன்னை கடவுள் என்று நிரூபிக்கிறார். அதிர்ச்சியடையும் காமேஷ் இதுபற்றி தன் நண்பர்கள் ஜெகன் மற்றும் மாயாவிடம் தெரிவிக்கிறான். அவர்களும் பிரம்மாவிடம் தங்கள் குழந்தைப் பருவ புகைப்படங்களைக் கேட்க அவர்களுடைய புகைப்படங்களையும் அனுப்புகிறார். அனைவரும் ஆச்சர்யமடைகின்றனர்.

மாயா எதிர்பாராவிதமாக மடிக்கணினியில் ஒரு பொத்தானை அழுத்திவிட காலம் ஒரு வருடம் பின்னோக்கிச் செல்கிறது. அதாவது சரியாக காமேஷ் செய்த தவறால் அவனது பதவி உயர்வு பாதிக்கப்பட்ட தினத்திற்குச் செல்கிறது. காமேஷ் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அவன் நினைத்ததுபோல் நிறுவனத்தில் பதவி உயர்வு பெறுகிறான். ஆனால் அதன்பின் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு சமாளித்தான் என்பது மீதிக்கதை.

நடிகர்கள்

தொகு

விமர்சனம்

தொகு

விகடன்: பக்தனுக்கு முகநூல் வழியே வரம் தரும் கடவுள் என்ற கரு நன்றாகத்தான் இருக்கிறது[2].

தினமலர்: பிரம்மா.காம் - பிரமிப்பில்லை[3].

மேற்கோள்கள்

தொகு
  1. "பிரம்மா.காம்".
  2. "விமர்சனம்".
  3. "விமர்சனம்".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மா.காம்&oldid=3660467" இலிருந்து மீள்விக்கப்பட்டது