பிராங்க்ஃபுர்ட் வானூர்தி நிலையம்
பொதுவாக பிராங்ஃபுர்ட் வானூர்தி நிலையம் (Frankfurt Airport) எனப்படும் பிராங்ஃபுர்ட் அம் மைன் வானூர்தி நிலையம் (Frankfurt am Main Airport, (ஐஏடிஏ: FRA, ஐசிஏஓ: EDDF),இடாய்ச்சு மொழி:Flughafen Frankfurt am Main அல்லது Rhein-Main-Flughafen) செருமனியின் பிராங்க்ஃபுர்ட்டில் அமைந்துள்ள முதன்மையான பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.
பிராங்ஃபுர்ட் வானூர்தி நிலையம் Flughafen Frankfurt am Main | |||
---|---|---|---|
![]() | |||
![]() | |||
வானிலிருந்து பிராங்புர்ட் வானூர்தி நிலையக் காட்சி (2010) | |||
ஐஏடிஏ: FRA – ஐசிஏஓ: EDDF | |||
சுருக்கமான விபரம் | |||
வானூர்தி நிலைய வகை | பொது | ||
உரிமையாளர்/இயக்குனர் | ஃபிராபோர்ட் | ||
அமைவிடம் | பிராங்க்ஃபுர்ட், ஹெஸென், செருமனி | ||
மையம் |
| ||
உயரம் AMSL | 364 ft / 111 m | ||
ஆள்கூறுகள் | 50°02′00″N 008°34′14″E / 50.03333°N 8.57056°Eஆள்கூறுகள்: 50°02′00″N 008°34′14″E / 50.03333°N 8.57056°E | ||
இணையத்தளம் | |||
ஓடுபாதைகள் | |||
திசை | நீளம் | மேற்பரப்பு | |
மீ | அடி | ||
07R/25L | 4,000 | 13,123 | அசுபால்ட்டு |
07C/25C | 4,000 | 13,123 | அசுபால்ட்டு |
18A | 4,000 | 13,123 | பைஞ்சுதை |
07L/25RB | 2,800 | 9,240 | பைஞ்சுதை |
புள்ளிவிவரங்கள் (2012) | |||
பயணிகள் | 57,527,251 ![]() | ||
சரக்கு | 2,100,747 ![]() | ||
வானூர்தி இயக்கங்கள் | 482,242 ![]() | ||
மூலங்கள்: பயணியர் போக்குவரத்து & இயக்கங்கள் - ஃபிராபோர்ட்[1] செருமானிய வான்வழிப் போக்குவரத்து தரவுகள் வெளியீடு[2] A:^ ஓடுபாதை 36 எனப் பெயரிடப்படவுள்ள ஓடுபாதை 18இன் எதிர் முனை பயன்படுத்தப்படாது உள்ளது.[3] ஓடுபாதை 18 வானேற்றங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. |
பிராபோர்ட் போக்குவரத்து நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் இந்த வானூர்தி நிலையம் செருமனியின் மிகுந்த பயணிகள் போக்குவரத்தைக் கொண்ட வானூர்தி நிலையமாக உள்ளது. பயணிகள் போக்குவரத்தில் 2012இல் ஐரோப்பாவில் இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம், சார்லசு டிகால் வானூர்தி நிலையங்களை அடுத்து மூன்றாவதாகவும் உலகளவில் 11வதாகவும் விளங்குகிறது. 2012இல் இந்த வானூர்தி நிலையத்தை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை 57.5 மில்லியனாக இருந்தது.[1] இங்கிருந்து உலகிலேயே மிகக் கூடுதலாக 113 நாடுகளிலுள்ள 264 சேரிடங்களுக்கு வான்வழிச் சேவைகள் இயக்கப்படுகின்றன.[3] 2012இல் இந்த நிலையம் 2.07 மில்லியன் மெட்றிக் டன்களை கையாண்டுள்ளது.[4]
பிராங்புர்ட் வானூர்தி நிலையம் சருமனியின் தேசிய வான் போக்குவரத்து நிறுவனமான லுஃப்தான்சா, மற்றும் கேண்டர் பிளுக்டின்ஸ்ட் நிறுவனங்களின் முனைய நடுவமாக உள்ளது. இங்குள்ள இட நெருக்கடியால் லுஃப்தான்சா தனது இரண்டாவது முனைய நடுவத்தை மியூனிக் வானூர்திநிலையத்தில் அமைத்துள்ளது.
1936ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட இந்நிலையம் பலமுறை விரிவாக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கு இரண்டு பெரிய முனையங்கள் (முனையம் 1 மற்றும் முனையம் 2) உள்ளன. நான்கு ஓடுபாதைகளுடன் ஆண்டுக்கு 65 மில்லியன் பயணிகளை ஏற்கும் அளவுத்திறன் கொண்டதாக விளங்குகிறது. அண்மையில் புதிய ஏர்பஸ் ஏ380 வந்து செல்வதற்கேற்ப கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏ380 வானூர்திகளுக்கான பராமரிப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 20, 2011 அன்று நான்காவது ஓடுபாதையும் செயலாக்கத்திற்கு விடப்பட்டது. இதன்மூலம் 2020ஆம் ஆண்டுவாக்கில் எதிர்பார்க்கப்படும் 700,000 வானூர்தி இயக்கங்களின் தேவையை நிறைவேற்ற இயலும். 2020இல் எதிர்பார்க்கப்படும் 90 மில்லியன் பயணிகளுக்காக, முனையம் 1இன் விரிவாக்கமாக 6 மில்லியன் பயணிகளுக்கான புதிய முனைய விரிவாக்கம் அண்மையில் கட்டப்பட்டு அக்டோபர் 10, 2012இல் திறக்கப்பட்டது. 2013இலிருந்து 25 மில்லியன் பயணிகளுக்கான புதிய முனையம் 3 கட்டப்படுவது துவங்கும்.
மேற்சான்றுகள்தொகு
- ↑ 1.0 1.1 "Traffic Figures". பார்த்த நாள் 2013-01-24.
- ↑ "EAD Basic". Ead.eurocontrol.int. பார்த்த நாள் 2012-01-19.
- ↑ 3.0 3.1 "Figures". Fraport.de (2012-01-13). பார்த்த நாள் 2012-01-19. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "FRAPORT" defined multiple times with different content - ↑ 2012 Passenger Traffic (Preliminary)