மியூனிக் வானூர்தி நிலையம்
மியூனிக் வானூர்தி நிலையம் Munich Airport, (ஐஏடிஏ: MUC, ஐசிஏஓ: EDDM), இடாய்ச்சு மொழி: Flughafen München) செருமனியின் மியூனிக் நகரத்திலிருந்து வடகிழக்கே 28.5 km (17.7 mi) தொலைவில் அமைந்துள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.[2] இது லுஃப்தான்சா நிறுவனத்திற்கும் இசுடார் அல்லையன்சில் உறுப்பினராக உள்ள வான்வழிப் போக்குவரத்து நிறுவனங்களுக்கும் முனைய நடுவமாக விளங்குகிறது. தொன்மையான பிரைசெங் நகரில் அமைந்துள்ள இந்த நிலையம் முன்னாள் பவேரிய பிரதமராக இருந்த பிரான்சு யோசஃப் இசுட்ராசு நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. இது நான்கு நகராட்சிகளின் பகுதிகளில் அமைந்துள்ளது.
மியூனிக் வானூர்தி நிலையம் Flughafen München | |||
---|---|---|---|
![]() | |||
ஐஏடிஏ: MUC – ஐசிஏஓ: EDDM | |||
சுருக்கமான விபரம் | |||
வானூர்தி நிலைய வகை | பொதுத்துறை | ||
உரிமையாளர்/இயக்குனர் | புளுகபென் முன்கென் கெம்பிஎச் | ||
சேவை புரிவது | மியூனிக், செருமனி | ||
அமைவிடம் | பிரைசெங் அருகே | ||
மையம் |
| ||
உயரம் AMSL | 1,487 ft / 453 m | ||
ஆள்கூறுகள் | 48°21′14″N 011°47′10″E / 48.35389°N 11.78611°Eஆள்கூறுகள்: 48°21′14″N 011°47′10″E / 48.35389°N 11.78611°E | ||
இணையத்தளம் | |||
ஓடுபாதைகள் | |||
திசை | நீளம் | மேற்பரப்பு | |
மீ | அடி | ||
08R/26L | 4,000 | 13,123 | பைஞ்சுதை |
08L/26R | 4,000 | 13,123 | பைஞ்சுதை |
உலங்கு களங்கள் | |||
எண்ணிக்கை | நீளம் | மேற்பரப்பு | |
m | ft | ||
H | 30 | 98 | பைஞ்சுதை |
புள்ளிவிவரங்கள் (2012) | |||
பயணிகள் | 3,83,60,604 | ||
மாற்றம் 11-12 | ![]() | ||
வானூர்தி இயக்கங்கள் | 3,99,581 | ||
மாற்றம் 10-11 | ![]() | ||
மூலங்கள்: பயணியர் போக்குவரத்து[1] யூரோகண்ட்ரோல் அமைப்பில் செருமானிய வான்போக்குவரத்து தகவல் வெளியீடு[2] |
1995இல் 15 மில்லியனாக இருந்த பயணிகள் போக்குவரத்து 2006இல் 30 மில்லியனாக இரட்டித்துள்ளது.[3] 1996இல் இது செருமனியின் இரண்டாவது போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையமாக உயர்ந்தது. லுஃப்தான்சா நிறுவனத்திற்கு பிராங்க்ஃபுர்ட்டிற்கு அடுத்து இரண்டாவது முனைய நடுவமாக உள்ளது. 2012இல் ஐரோப்பாவில் 38,360,604 பயணிகள் பயன்படுத்திய இந்நிலையம் ஐரோப்பாவில் ஏழாவதாகவும்[1] உலகில் 30ஆவதாகவும்[4] விளங்குகிறது.
மேற்சான்றுகள்தொகு
- ↑ 1.0 1.1 ADV passenger statistics and aircraft movements
- ↑ 2.0 2.1 EAD Basic
- ↑ anna.aero (20 April 2010). "Munich’s traffic doubles in 10 years; Lufthansa adds more routes than it drops as a host of new airlines announce new services". anna.aero Airline News & Analysis.
- ↑ Airports Council International - Year to date International Passenger Traffic Data