பிரான்சிஸ் வில்லியம் ஆஸ்டன்

பிரித்தானிய வேதியலாளர்

பிரான்சிஸ் வில்லியம் ஆஸ்டன் (Francis William Aston, எஃப்.ஆர்.எஸ்;[2] 1 செப்டம்பர் 1877 - 20 நவம்பர் 1945) என்பவர் ஒரு ஆங்கில வேதியியலாளர் மற்றும் இயற்பியலாளர் ஆவார். இவர் 1922 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார், பொருள்களில் அடங்கியுள்ள அணுக்களின் எடையை அவற்றின் நிறைகளுக்கேற்பக் கணக்கிடப் பயன்படும் 'நிறைநிரல் வரைவி'யை முதன்முதலாகக் கண்டு பிடித்தவர் இவரே. அத்துடன் 'ஐசோடோப்' என அழைக்கப்படும் ஓரகத் தனிமங்களையும் இவரே கண்டறிந்து விளக்கினார்.[3][4] இவை இரண்டையும் கண்டுபிடித்தமைக்காக 1922ஆம் ஆண்டில் நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. இவர் அரச கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் திரித்துவக் கல்லூரியின் சக உறுப்பினராக இருந்தார்.[5] இவர் கண்டுபிடித்த நிறைநிரல் வரைவி வேதியியலில் மட்டுமல்லாது அணுக்கரு இயற்பியல், உயிரியல், நில இயல்போன்ற பல்வேறு துறைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதுவரை கண்டறியப்பட்டுள்ள 287 இயற்கை ஓரகத் தனிமங்களில் 212-ஐக் கண்டு பிடித்து விளக்கியவர் ஆஸ்டன் ஆவார்.

பிரான்சிசு வில்லியம் ஆசுடன்
Francis William Aston
பிறப்பு(1877-09-01)1 செப்டம்பர் 1877
ஆர்போர்ன், பர்மிங்காம், இங்கிலாந்து
இறப்பு20 நவம்பர் 1945(1945-11-20) (அகவை 68)
கேம்பிரிட்ச், இங்கிலாந்து
குடியுரிமைபிரித்தானியர்
தேசியம்ஆங்கிலேயர்
துறைவேதியியல், இயற்பியல்
பணியிடங்கள்திரித்துவக் கல்லூரி, கேம்பிரிட்சு
கல்வி கற்ற இடங்கள்மேசன் கல்லுரி (இலண்டன் பல்கலைக்கழகம்)
திரித்துவக் கல்லூரி, கேம்பிரிட்சு
ஆய்வு நெறியாளர்பெர்சி எஃப். பிராங்க்லண்ட்
Other academic advisorsஜெ. ஜெ. தாம்சன்
சான் என்றி பொயின்டிங்கு[1]
வில்லியம் டில்டன்[1]
அறியப்படுவதுபொருண்மை நிறமாலை வரைவி
முழு எண் விதி
ஆசுடன் கருவெளி[1]
விருதுகள்மெக்கென்சி டேவிட்சன் பதக்கம் (1920)
வேதியியலுக்கான நோபல் பரிசு (1922)
இயூசு பதக்கம் (1922)
யோன் இசுக்காட் பதக்கம் (1923)
பட்டெர்னோ பதக்கம் (1923)
வேந்தியர் பதக்கம் (1938)
டூடெல் பதக்கமும் பரிசும் (1944)

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Francis W. Aston - Biographical". NobelPrize.org. The Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 5 October 2017.
  2. George de Hevesy (1948). "Francis William Aston. 1877–1945". Obituary Notices of Fellows of the Royal Society 5 (16): 634–650. doi:10.1098/rsbm.1948.0002. 
  3. "The Nobel Prize in Chemistry 1922". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 14 April 2008.
  4. Squires, Gordon (1998). "Francis Aston and the mass spectrograph". Dalton Transactions 0 (23): 3893–3900. doi:10.1039/a804629h. 
  5. "Dr. F.W. Aston Dies. Winner of the Nobel Prize in Chemistry in 1922. Noted for His Work With Isotopes. In Tour of This Country 23 Years Ago, He Foresaw the Releasing of New Energy. Developed Isotopes. Headed Atom Committee. Lectured in This Country". த நியூயார்க் டைம்ஸ். 22 November 1945. https://www.nytimes.com/1945/11/22/archives/dr-fw-aston-dies-british-scientist-winner-of-the-nobel-prize-in.html. பார்த்த நாள்: 6 August 2010. "The death of Dr. Francis William Aston, fellow of the Royal Society and Fellow of Trinity College, Cambridge, was announced today. He was 68 years old." 

வெளி இணைப்புகள்

தொகு