பிரின்ஸ் குணசேகரா

பிரின்சு குணசேகரா (Prins Gunasekara, பிறப்பு: 12 சூலை 1924) இலங்கை இடதுசாரி அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மனித உரிமை ஆர்வலரும் ஆவார்.

பிரின்ஸ் குணசேகரா
Prins Gunasekara
இலங்கை நாடாளுமன்றம்
ஹபரதுவ
பதவியில்
மார்ச் 1960 – சூலை 1960
இலங்கை நாடாளுமன்றம்
ஹபரதுவ
பதவியில்
1965–1977
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 சூலை 1924 (1924-07-12) (அகவை 100)
அரசியல் கட்சிஇலங்கை சுதந்திரக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
மகாஜன எக்சத் பெரமுன, லங்கா சமசமாஜக் கட்சி
முன்னாள் கல்லூரிஆனந்தா கல்லூரி, கொழும்பு
தொழில்வழக்கறிஞர்

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

பிரின்சு குணசேகராதென் மாகாணத்தில் ஹபரதுவா என்ற ஊரில் பிறந்தார். கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி பயின்ற பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராகப் பயின்று பட்டம் பெற்றார். சட்டக் கல்லூரியில் பயின்று 1955 ஆம் ஆண்டில் வழக்கறிஞர் ஆனார். லங்காதீப சிங்களப் பத்திரிகையில் செய்தியாளராகவும், பின்னர் அதன் அதன் ஆசிரியர்களுள் ஒருவராகவும் பணியாற்றியுள்ளார்.[1]

அரசியலில்

தொகு

பிரின்சு குணசேகரா இலங்கையில் அக்காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த இடதுசாரி அரசியல் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியில் சேர்ந்து அரசியலில் இறங்கினார்.[1] 1956 ஆம் ஆண்டில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா தலைமையில் மகாஜன எக்சத் பெரமுன என்ற இடதுசாரிக் கூட்டணி அரசு அமைப்பதற்கு பிரின்சு பெரும் பங்காற்றினார். சமசமாசக் கட்சியின் பிரதி செயலாளராகவும், கட்சித் தலைவர் பிலிப் குணவர்தனாவின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்..[1] 1959 இல் பண்டாரநாயக்கா படுகொலை செய்யப்பட்டதை அடுத்து கூட்டணியும் பிளவடைந்தது. 1960 மார்ச் மாதத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஹபரதுவ தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[2] அரசர் பேச்சு நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து டட்லி சேனநாயக்கா தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. 1960 சூலையில் மீண்டும் நடைபெற்ற தேர்தலில் பிரின்சு குணசேகரா 2,404 வாக்குகள் மட்டும் பெற்று படுதோல்வியடைந்தார்.[3] பின்னர் அவர் மகாஜன எக்சத் பெரமுன கட்சியில் இருந்து விலகி 1965 தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[4] 1970 தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1977 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[5]

அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பிரின்சு குணசேகரா பிரித்தானியாவுக்குக் குடிபெயர்ந்து இலண்டனில் வசித்து வருகிறார்..[1]

எழுதிய நூல்கள்

தொகு
  • A Lost Generation - Sri Lanka in Crisis[6]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 சுகத் செனிவிரத்தினா (3 சூலை 2014). "Prins turns 90". Lanka News Web. பார்க்கப்பட்ட நாள் 23 மே 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2015-05-23.
  3. "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2015-05-23.
  4. "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2015-05-23.
  5. "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2015-05-23.
  6. திலக் எஸ். பெர்னாண்டோ. "Sri Lanka in Crisis - A lost Generation by Prins Gunasekera : Book Review". Infolanka. பார்க்கப்பட்ட நாள் 23 மே 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரின்ஸ்_குணசேகரா&oldid=3563631" இலிருந்து மீள்விக்கப்பட்டது