பிரியங்கா தத்
பிரியங்கா தத் சலசானி (Priyanka Dutt Chalasani) (பிறப்பு: டிசம்பர் 19, 1984) ஓர் இந்தியத்] தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.[2] இவர் பிரபல இந்திய திரைப்பட தயாரிப்பாளரும் வைஜெயந்தி மூவீஸின் நிறுவனருமான ச. அஸ்வினி தத்தின் மகள் ஆவார். பிரியங்கா லாஸ் ஏஞ்சலஸின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் திரைப்படத் தயாரிப்பைப் படித்தார்.[2] 2004 இல் பாலு என்ற திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராக தனது 20 வயதில் தயாரிப்பாளராக அறிமுகமானார் [2] இவர் திரீ ஏஞ்சல்ஸ் ஸ்டுடியோ என்ற திரைப்பட நிறுவனத்தை நிறுவனர். இவரது நிறுவனம் தயாரித்த யாதோன் கி பாரத் என்ற குறும்படம் 2013 கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[3]
பிரியங்கா தத் | |
---|---|
பிரியங்கா தத் | |
பிறப்பு | பிரியங்கா தத் சலசானி[1] 19 திசம்பர் 1984 விசயவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
பணி | திரைப்படத் தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2004–தற்போது வரை |
பெற்றோர் | ச. அஸ்வினி தத் (தந்தை) |
வாழ்க்கைத் துணை | நாக் அஸ்வின் |
உறவினர்கள் | சொப்னா தத், சிரவந்தி தத் (சகோதரிகள்) |
புதிய அலை திரைப்படங்களை ஊக்குவிப்பதற்காக 2009 ஆம் ஆண்டில் பிரியங்கா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான திரீ ஏஞ்சல்ஸ் ஸ்டுடியோவை [4] தொடங்கினார். நிறுவனம் மூலம் பானம் (2009) என்ற படத்தைத் தயாரித்தார். இது ஒரு நக்சலைட்டின் மகனான இந்தியக் காவல் பணி அதிகாரியின் கதையை ஆராய்கிறது. இந்தப் பிரச்சனையை கையாண்ட விதத்திற்காக இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது.[5] பிரியங்காவுக்கு, இத்திரைப்படம் 2009 இல் சிறந்த திரைப்படப் பிரிவில் நந்தி விருதை பெற்றுத் தந்தது.[6] தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்தியாவில் உள்ள முக்கிய பெரு நிறுவன வாடிக்கையாளர்களுக்காக படங்களையும் தயாரித்தார்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "EXCLUSIVE | Dulquer Salmaan was a choice that I was hell bent on: Swapna Dutt Chalasani". Hindustan Times (in ஆங்கிலம்). 2017-12-11. பார்க்கப்பட்ட நாள் 2021-05-16.
- ↑ 2.0 2.1 2.2 "Priyanka takes Tollywood to Cannes". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2013-06-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130605045532/http://articles.timesofindia.indiatimes.com/2013-05-01/news-interviews/38956765_1_short-film-rd-burman-telugu. பார்த்த நாள்: 19 May 2013.
- ↑ "Yaadon Ki Baraat, during its short length, tells the tale of a young R.D. Burman fan". Deccan Chronicle இம் மூலத்தில் இருந்து 2 மே 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130502231647/http://www.deccanchronicle.com/130430/entertainment-tollywood/article/tollywood-short-film-cannes. பார்த்த நாள்: 5 May 2013.
- ↑ "Ashwini Dutt's daughter announces 2 projects". India Glitz. Archived from the original on 26 ஜூலை 2009. பார்க்கப்பட்ட நாள் 5 May 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Movie Review-Baanam". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 5 May 2013.
- ↑ "Silver Nandi award for second best Feature Film for Baanam". பார்க்கப்பட்ட நாள் 19 May 2013.
- ↑ "Yaadon Ki Baraat, during its short length, tells the tale of a young R.D. Burman fan". Deccan Chronicle இம் மூலத்தில் இருந்து 2 மே 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130502231647/http://www.deccanchronicle.com/130430/entertainment-tollywood/article/tollywood-short-film-cannes. பார்த்த நாள்: 5 May 2013."Yaadon Ki Baraat, during its short length, tells the tale of a young R.D. Burman fan" பரணிடப்பட்டது 2013-05-02 at the வந்தவழி இயந்திரம்.