பிரேயஸ்

கிரேக்கத்தின், ஏதென்சில் உள்ள நகரம் மற்றும் துறைமுகம்.

பிரேயஸ் (Piraeus) என்பது ஏதென்சு நகர்ப்புறத்தில் உள்ள ஒரு துறைமுக நகரமாகும். இது ஏதென்சு ரிவியராவில், ஏதென்சு நகர மையத்திலிருந்து தென்மேற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில், சரோனிக் வளைகுடாவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. [2] [3]

பிரேயஸ்
Πειραιάς (கிரேக்கம்)
கடிகாரச்சுற்றில்: பைரேயஸ் நிலையம், பொசைடன் சிலை, மைக்ரோலிமானோ பைரேயஸ் நகராட்சி அரங்கம்
கடிகாரச்சுற்றில்: பைரேயஸ் நிலையம், பொசைடன் சிலை, மைக்ரோலிமானோ பைரேயஸ் நகராட்சி அரங்கம்
அமைவிடம்

No coordinates given

Location within the region
அரசாண்மை
நாடு: கிரேக்கம்
நிர்வாக வலயம்: அட்டிகா
மண்டல அலகு: பைரேயஸ்
மேயர்: Ioannis Moralis
(துவக்கம்: 2014)
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் (as of 2011)[1]
நகரகம்
 - மக்கள்தொகை: 4,48,997
 - பரப்பளவு: 50.417 km2 (19 sq mi)
 - அடர்த்தி: 8,906 /km2 (23,066 /sq mi)
நகராட்சி
 - மக்கள்தொகை: 1,63,688
 - பரப்பளவு: 10.865 km2 (4 sq mi)
 - அடர்த்தி: 15,066 /km2 (39,020 /sq mi)
Other
நேர வலயம்: EET/EEST (UTC+2/3)
உயரம் (min-max): 0–87 m ­(0–285 ft)
அஞ்சல் குறியீடு: 185 xx
தொலைபேசி: 21
வாகன உரிமப் பட்டை: Υ
வலைத்தளம்
www.piraeus.gov.gr

பிரேயஸ் நகராட்சியும் மற்ற நான்கு புறநகர் நகராட்சிகளும் பிரேயசின் பிராந்திய அலகுகள் ஆகும். சில நேரங்களில் இது கிரேட்டர் பிரேயஸ் பகுதி என்று அழைக்கப்படுகிறது. கிரேட்டர் பிரேயர்சின் மொத்த மக்கள் தொகையானது 448,997 ஆகும். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பிரேயஸ் 163,688 மக்களைக் கொண்டிருந்தது. இது கிரேக்கத்தில் ஐந்தாவது பெரிய நகராட்சியாகவும் [4] ஏதென்ஸ்-பிரேயஸ் நகர்ப்புறத்தில் இரண்டாவது பெரிய (ஏதென்ஸ் நகராட்சிக்கு அடுத்து) உள்ளது.

பிரேயஸ் நீண்ட பதியப்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இது பண்டையக் கிரேக்கத்திற்கு முந்தையது. இந்த நகரம் கிமு 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிறுவப்பட்டது. அதை ஏதென்சின் புதிய துறைமுகமாக மாற்றுவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன: அது ஒரு முன்மாதிரி துறைமுகமாக கட்டப்பட்டது. இதன் விளைவாக ஏதென்சின் அனைத்து இறக்குமதி, போக்குவரத்து வர்த்தகம், கடற்படை போன்றவை இந்த ஒரே இடத்தில் குவிந்தன. [5] ஏதென்சின் பொற்காலத்தின் போது, ஏதென்சின் பிரதான குடியிருப்பிலிருந்து துறைமுகத்திற்கு (பிரேயஸ்) செல்லும் பாதையை பாதுகாக்க நெடிய மதில் சுவர்கள் கட்டப்பட்டன. ஏதென்சின் பாரம்பரியக் காலத்தில், பிரேயசில் இருந்த கடற்படைத் தளத்தில் 372 கப்பல் கொட்டகைகள் இருந்தன. [6] கிமு 3 ஆம் நூற்றாண்டில் தொடங்கி, பைரேயஸ் ஒட்டுமொத்தமாக வீழ்ச்சியடைந்தது. இருப்பினும், ஏதென்சு கிரேக்கத்தின் தலைநகராக ஆக்கப்பட்ட பிறகு, 19 ஆம் நூற்றாண்டில் மீண்டும் பிரேயஸ் தலை நிமிர்ந்து வளரத் தொடங்கியது. இன்று, பிரேயஸ் ஒரு பெரிய நகரமாக உள்ளது, இது பரபரப்பாக செயல்படுவதாகவும், ஏதென்சின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் உள்ளது. இது ஒரு பெரிய கடல் மற்றும் வணிக-தொழில்துறை மையமாகவும் உள்ளது. மேலும் இது கிரேக்கத்தின் மிகப்பெரிய துறைமுக மையமாகவும் உள்ளது.

பிரேயஸ் துறைமுகம் கிரேக்கத்தின் தலைமை துறைமுகமாகவும், ஐரோப்பாவில் 5 வது பெரிய பயணிகள் துறைமுகமாகவும் உள்ளது. [7] இந்த துறைமுகம் 2020 இல் ஆண்டுதோறும் சுமார் 4,37 மில்லியன் பயணிகளுக்கு சேவை செய்து உலகின் 24 வது பெரிய பயணிகள் துறைமுகமாக விளங்குகிறது. 5.44 மில்லியன் டிஇயு (இருபது-அடி சமமான அலகு) கையாளும் செயல்திறன் கொண்டது. [8] சரக்குப் பெட்டக போக்குவரத்தின் அடிப்படையில் ஐரோப்பாவின் பரபரப்பான பத்து துறைமுகங்களில் பைரேயஸ் துறைமுகமும் ஒன்றாகும். மேலும் இது கிழக்கு நிலநடுக் கடலில் மிகவும் பரபரப்பான கொள்கலன் துறைமுகமாகும். [9] ஏதென்சில் நடைபெற்ற 1896 மற்றும் 2004 கோடைகால ஒலிம்பிக் இரண்டிலும் இந்த நகராட்சி நிகழ்வுகளை நடத்தியது. பிரேயஸ் பல்கலைக்கழகம் கிரேக்கத்தின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். மேலும் நாட்டின் இரண்டாவது பழமையான வணிகப் பள்ளியையும், நிதியியல் ஆய்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பழமையான கல்வித் துறையையும் உள்ளடக்கியது. [10]

மேற்கோள்கள்

தொகு
  1. Detailed census results 2011 (கிரேக்கம்)
  2. "Η Πόλη - Δημοσ Πειραια". Piraeus.gov.gr. பார்க்கப்பட்ட நாள் 2022-08-15.
  3. "Ιστορια".
  4. 2011 POPULATION AND HOUSING CENSUS, HELLENIC STATISTICAL AUTHORITY, http://www.statistics.gr/documents/20181/1215267/A1602_SAM01_DT_DC_00_2011_03_F_EN.pdf/cb10bb9f-6413-4129-b847-f1def334e05e பரணிடப்பட்டது 2016-07-16 at the வந்தவழி இயந்திரம்
  5. "Port of Piraeus". World Port Source. பார்க்கப்பட்ட நாள் 2022-01-04.
  6. "Birth of Democracy: The Athenian Navy".
  7. "Messina remained the largest EU passenger port in 2020". Eurostat. பார்க்கப்பட்ட நாள் 2022-07-08.
  8. "World Shipping Council- Top 50 Ports". பார்க்கப்பட்ட நாள் 2022-07-07.
  9. "Container terminal". www.olp.gr. Archived from the original on December 20, 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-27.
  10. "University of Piraeus Student Guide 2017" (PDF) (in கிரேக்கம்).
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேயஸ்&oldid=3995972" இலிருந்து மீள்விக்கப்பட்டது