பிலால் ஆசிப்
முகமது பிலால் ஆசிப் (Mohammad Bilal Asif (பிறப்பு: செப்டமபர் 24, 1985) பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார்.[1] இவர் பாக்கித்தான் அணிக்காக, தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.ஆகஸ்டு 2018 இல் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் இவர் உட்பட முப்பத்து மூன்று வீரர்களுக்கு 2018-19 ஆம் ஆண்டிற்கான மத்திய ஒப்பந்த விருதினை வழங்கியது.[2][3]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுமுகமது பிலால் ஆசிப் செப்டம்பர் 24, 1985 இல் பிறந்தார். இவரின் தந்தை குவைத்தில் மின் வினைஞராக வேலை பார்த்து வந்தார். இவரின் மருமகன் சாக்கித் சையத் உள்ளூர்ப் போட்டிகளில் வேகப் பந்து வீச்சாளராக விளையாடி வந்தார்.
உள்ளூர்ப் போட்டிகள்
தொகுஇவர் விளையாடிய முதல் இருபது 20 போட்டியில் 114 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் அறிமுக பன்னாட்டு இருபது20 போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனை புரிந்தார்.[4][5] 2018 ஆம் ஆண்டிற்கான பாக்கித்தான் கோப்பைக்கான போட்டியில் இவர் சிந்து மாகாணம் சார்பாக விளையாடினார்.[6] இந்தத் தொடரின் நான்கு போட்டிகளில் விளையாடி 6 இலக்குகளைக் கைப்பறினார்.இதன் மூலம் அதிக இலக்குகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்.[7]
சர்வதேசப் போட்டிகள்
தொகு2015 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரில் பாக்கித்தான் அணியில் இடம் பெற்றார். ஆனால் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.[8] 2015 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி சிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அக்டோபர் 3 இல் அராரே துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் மட்டையாட்டத்தில் 3 பந்துகளைச் சந்தித்த இவர் ஓட்டங்கள் எடுக்காமல் பன்யங்கரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பந்துவீச்சில் 8 ஓவர்கள் வீசி 39 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.இந்தப் போட்டியில் சிம்பாப்வே அணி டக்வோர்த் லூயிஸ் முறையில் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[9]
அக்டோபர் 5 இல் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தனது முதல் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் சிம்பாப்வே அணி 161 ஓட்டங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்தது.மேலும் பிலால் 25 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் மட்டையாட்டத்தில் துவக்க வீரராக களம் இறங்கி 39 பந்துகளில் 38 ஓட்டங்களை எடுத்தார்.[10] ஆனால் இந்தப் போட்டியில் இவரின் பந்துவீச்சு முறையானது சந்தேகத்திற்கு உள்ளானது.[11] இதனால் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரிலிருந்து விலக்கப்பட்டார்.[12] பின் இவரின் பந்துவீச்சு முறையானது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் அக்டோபர் 30, 2015 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[13]
2017 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் அணியில் இடம் பிடித்தார். ஆனால் விளையாடும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.[14] பின் 2018 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இடம் பிடித்தார்[15].பின் அக்டோஅப்ர் 7 இல் தனது முதல் போட்டியில் விளையாடினார்.[16] இந்தப் போட்டியில் இவர் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார்.
சான்றுகள்
தொகு- ↑ "Bilal Asif". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 July 2015.
- ↑ "PCB Central Contracts 2018–19". Pakistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 6 August 2018.
- ↑ "New central contracts guarantee earnings boost for Pakistan players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 August 2018.
- ↑ "Records | Twenty20 matches | Batting records | Most runs in debut match | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/content/records/283769.html.
- ↑ "Group A: Abbottabad Falcons v Sialkot Stallions at Faisalabad, May 15, 2015 | Cricket Scorecard | ESPN Cricinfo". Cricinfo. http://www.espncricinfo.com/ci/engine/match/872579.html.
- ↑ "Pakistan Cup Cricket from 25th". The News International. பார்க்கப்பட்ட நாள் 21 April 2018.
- ↑ "Pakistan Cup 2018, Sindh: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 May 2018.
- ↑ "Mohammad Irfan returns to ODI squad". ESPNcricinfo. ESPN Sports Media. 3 July 2015. பார்க்கப்பட்ட நாள் 3 July 2015.
- ↑ "Pakistan tour of Zimbabwe, 2nd ODI: Zimbabwe v Pakistan at Harare, Oct 3, 2015". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 October 2015.
- ↑ "Pakistan vs Zimbabwe third ODI". ESPNcricinfo. ESPN Cricinfo. 5 October 2015. பார்க்கப்பட்ட நாள் 5 October 2015.
- ↑ "Bilal Asif reported for suspect action". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 October 2015.
- ↑ "Bilal to join Pakistan squad, Azhar to return home". ESPNcricinfo (ESPN Sports Media). 19 October 2015. http://www.espncricinfo.com/pakistan-v-england-2015-16/content/story/930439.html. பார்த்த நாள்: 19 October 2015.
- ↑ "Bilal Asif cleared by ICC after testing". ESPNcricinfo (ESPN Sports Media). 30 October 2015. http://www.espncricinfo.com/pakistan-v-england-2015-16/content/story/935093.html. பார்த்த நாள்: 30 October 2015.
- ↑ "Uncapped Hamza, Sohail picked for SL Tests". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 September 2017.
- ↑ "1st Test, Australia tour of United Arab Emirates at Dubai, Oct 7-11 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 October 2018.
- ↑ "Pakistan vs Australia, 1st Test: Bilal Asif's Six-Wicket Haul Puts Pakistan In Command On Day Three". NDTV. பார்க்கப்பட்ட நாள் 9 October 2018.