பிலிப்பீன்சு முள்ளம்பன்றி

பிலிப்பீன்சு முள்ளம்பன்றி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கைட்ரிசிடே
பேரினம்:
இனம்:
கை. புமிலா
இருசொற் பெயரீடு
கைசுட்ரிக்சு புமிலா
(குந்தர், 1879)

பிலிப்பீன்சு முள்ளம்பன்றி (Philippine porcupine) அல்லது பலவான் முள்ளம்பன்றி (கைசுட்ரிக்சு புமிலா) என்பது பிலிப்பீன்சில் உள்ள பலவான் தீவில் கிசுடிரிசிடே (பழைய உலக முள்ளம்பன்றிகள்) குடும்பத்தினைச் சார்ந்த கொறிணி ஆகும். இது அகணிய உயிரியாகும். இது உள்நாட்டில் துரியன் அல்லது லேண்டக் என்று அழைக்கப்படுகிறது.

விளக்கம்

தொகு

வெளிப்படையாக, இதன் எண்ணிக்கை நிலையானது. ஆனால் இது தென்னந்தோப்புகளில் தீங்குயிரிகள், என விவசாயிகளால் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. உள்நாட்டில் அசாதாரணமானது. மலைகள் மற்றும் தாழ் நிலங்களில் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை காடுகளில் இச்சிற்றினம் காணப்படுகின்றது. இந்த சிற்றினம் குகைகளிலும் வாழ்கிறது. ஆனால் பொதுவாக மரங்களின் அடியில் அல்லது பாறை பிளவுகளில் காணப்படுகிறது. இது பலவான் விலங்கின பகுதியில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இது புசுங்கா, கலாய்ட் மற்றும் கொரோன் தீவுகளிலும், புவேர்ட்டோ பிரின்செசா நிலத்தடி நதி தேசிய பூங்கா மற்றும் எல் நிடோவின் வனப்பகுதிகளிலும் உள்ள பிரதான நிலப்பரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பாலூட்டிக்கு இயற்கை எதிரிகள் எதுவும் இல்லை. முள்ளெலும்புகளின் வெளிப்புற உறை இதன் பாதுகாப்பு அமைப்பாகச் செயல்படுகிறது. இதன் உடல் நீளம் சுமார் 42–93 cm (1.38–3.05 அடி) ஆகும். வாலில் நீளம் சுமார் 2.5–19 cm (0.98–7.48 அங்) ஆகும். இதனுடைய உடல் எடை 3.8–5.4 kg (8.4–11.9 lb) வரை உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Clayton, E. (2018). "Hystrix pumila". IUCN Red List of Threatened Species 2018: e.T10753A22231557. doi:10.2305/IUCN.UK.2018-1.RLTS.T10753A22231557.en. https://www.iucnredlist.org/species/10753/22231557. பார்த்த நாள்: 14 November 2021. 

மேலும் படிக்க

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hystrix pumila
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


  • Woods, C. A.; Kilpatrick, C. W. (2005), "Hystricognathi", in Wilson, D. E.; Reeder, D. M. (eds.), Mammal Species of the World: a Taxonomic and Geographic Reference (3rd ed.), Baltimore: Johns Hopkins University Press, pp. 1538–1600, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8018-8221-4