பிளாட்டினம் புரோமைடு
பிளாட்டினம் புரோமைடு (Platinum bromide) என்பது PtBr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அடர்பச்சை நிறத்தில் தூளாக உள்ள இச்சேர்மமானது பல பிளாட்டினம் புரோமைடு சேர்மங்கள் தயாரிப்புக்கு முன்னோடியாக விளங்குகிறது. பலேடியம் குளோரைடு மற்றும் பலேடியம் புரோமைடு சேர்மங்கள் போலவே பிளாட்டினம் புரோமைடும் ஒருங்கிணைவு கரைப்பான்கள் அல்லது ஈந்தணைவி வழங்கிகள் முன்னிலையில் மட்டுமே கரைகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பிளாட்டினம்(II) புரோமைடு
| |
வேறு பெயர்கள்
பிளாட்டினம் புரோமைடு
| |
இனங்காட்டிகள் | |
13455-12-4 | |
EC number | 236-64-8 |
பப்கெம் | 83486 |
பண்புகள் | |
Br2Pt | |
வாய்ப்பாட்டு எடை | 354.886 கி/மோல் |
தோற்றம் | அடர் பச்சைநிறத் தூள் |
அடர்த்தி | 6.65 கி/செ.மீ3, solid |
உருகுநிலை | 250 °C (482 °F; 523 K) (சிதைவடையும்) |
கரையாது. | |
கட்டமைப்பு | |
ஒருங்கிணைவு வடிவியல் |
சதுரத்தளம் |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 0 D |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தோலில் எரிச்சலூட்டும் |
R-சொற்றொடர்கள் | R36/37/38, R43 |
S-சொற்றொடர்கள் | S24, S26, வார்ப்புரு:S27/38 |
தீப்பற்றும் வெப்பநிலை | ?°C |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பிளாட்டினம்(II) குளோரைடு, பிளாட்டினம்(II) அயோடைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பயன்கள்
தொகுபிளாட்டினம் புரோமைடுடன் இமிடசோனியம் உப்பு வேற்று வளைய முன்னோடிகளை சூடுபடுத்துவதால் பிளாட்டினத்தின் தாண்டல் உலோக கார்பீன் அணைவுச் சேர்மங்கள் தயாரிக்க முடியும். மற்றும், இருமெத்தில் கந்தகாக்சைடில் உள்ள சோடியம் அசெட்டேட்டை சூடுபடுத்துவதாலும் பிளாட்டினத்தின் தாண்டல் உலோக கார்பீன் அணைவுச் சேர்மங்கள் தயாரிக்க முடியும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Muehlhofer M., Strassner T., Herdtweck E., Herrmann W.A. (2002). "Synthesis and structural characterization of novel bridged platinum(II) biscarbene complexes". Journal of Organometallic Chemistry 660 (2): 121–126. doi:10.1016/S0022-328X(02)01670-4.