பிவண்டி தாலுகா

பிவண்டி தாலுகா (Bhiwandi Taluka) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின், கொங்கண் கோட்டத்தில் அமைந்த தானே மாவட்டத்தின் 7 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1]இதன் நிர்வாகத் தலைமையிடம் பிவண்டி நகரம் ஆகும். பிவண்டி தாலுகாவில் பிவண்டி-நிஜாம்பூர் மாநகராட்சி உள்ளது.

இத்தாலுகா பிவண்டி-நிஜாம்பூர் மாநகராட்சி மற்றும் 12 கணக்கெடுப்பில் உள்ள ஊர்களும் கொண்டுள்ளது. 2,34,249 வீடுகளும், 698.72 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்ட இத்தாலுகாவின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 1634 பேர் வீதம் வாழ்கின்றனர்.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பிவண்டி தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 11,41,386 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 6,53,758 மற்றும் பெண்கள் 4,87,628 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 746 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 1,50,767 (13.21%) ஆகும். சராசரி எழுத்தறிவு 68.83% ஆகும். பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 42,861 மற்றும் 92,664 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 56.52%, இசுலாமியர்கள் 38.91%, பௌத்தர்கள் 2.18%, சமணர்கள் 2.18%, கிறித்துவர்கள் 0.22% மற்றும் பிறர் 0.65% ஆக உள்ளனர்.[2] [3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிவண்டி_தாலுகா&oldid=3357474" இலிருந்து மீள்விக்கப்பட்டது