பிஷ்னா (Bishnah or Bishna), வட இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் ஜம்மு மாவட்டத்தில் அமைந்த பிஷனா வருவாய் வட்டத்தித்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது ஜம்மு நகரத்திற்கு தெற்கே 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 292 மீட்டர் (961 அடி) உயரத்தில் உள்ளது.

பிஷ்னா
நகராட்சி
பிஷ்னா is located in ஜம்மு காஷ்மீர்
பிஷ்னா
பிஷ்னா
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் பிஷ்னாவின் அமைவிடம்
பிஷ்னா is located in இந்தியா
பிஷ்னா
பிஷ்னா
பிஷ்னா (இந்தியா)
ஆள்கூறுகள்: 32°37′N 74°52′E / 32.62°N 74.87°E / 32.62; 74.87
நாடுஇந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர்
மாவட்டம்ஜம்மு
ஏற்றம்292 m (958 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்10,719
மொழிகள்
 • அலுவல் மொழிதோக்ரி மொழி, இந்தி மொழி, உருது ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்181132
தொலைபேசி குறியீட்டு எண்01923

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 13 வார்டுகளும், 2,153 வீடுகளும் கொண்ட பிஷ்னா நகரத்தின் மக்கள் தொகை 10,719 ஆகும். அதில் ஆண்கள் 5,676 மற்றும் பெண்கள் 5,043 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 888 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 9% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 86% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,336 மற்றும் 39 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 97.87%, இசுலாமியர் 0.84%, பௌத்தர்கள் , சமணர்கள் , சீக்கியர்கள் 0.46%, கிறித்தவர்கள் 0.76%மற்றும் பிறர் 0.07% ஆகவுள்ளனர்.[1]

மேற்கோள்கள் தொகு

ஜம்மு மாவட்டம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஷ்னா&oldid=3605224" இலிருந்து மீள்விக்கப்பட்டது