பி. என். அக்சர்
பரமேஷ்வர் நாராயண் ஹக்சர் (Parmeshwar Narayan Haksar (4 செப்டம்பர் 1913 – 25 நவம்பர் 1998) முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் முதன்மைச் செயலராக (1971–73) நன்கு அறியப்பட்ட இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி மற்றும் இராஜதந்திரி[1] ஆவார். இவர் இந்தியத் திட்டக் குழுவின் துணைத் தலைவராக இருந்தவர். மேலும் இவர் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றியவர். காஷ்மீரப் பண்டிதரான பி. என். ஹக்சர் இந்திரா காந்தியின் நம்பிக்கைப் பெற்றவர்களில் ஒருவராவர்.
பி. என். அக்சர் | |
---|---|
திட்டக் குழுவின் துணைத் தலைவர் | |
பதவியில் 4 சனவரி 1975 – 31 மே 1977 | |
பிரதமர் | இந்திரா காந்தி |
இந்தியப் பிரதமரின் முதன்மைச் செயலளர் | |
பதவியில் 6 December 1971 – 28 பிப்ரவரி 1973 | |
பிரதமர் | இந்திரா காந்தி |
முன்னையவர் | Office established |
பின்னவர் | வி. சங்கர் |
இந்திய அரசின் செயலர் | |
பதவியில் 1967 – 5 டிசம்பர் 1971 | |
முன்னையவர் | இலக்குமி காந்த் ஜா |
பின்னவர் | பணியிடம் தற்காலிகமாக விடப்பட்டது. |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பரமேஷ்வர் நாராயண் ஹக்சர் 4 செப்டம்பர் 1913 குஜ்ரன்வாலா, பஞ்சாப் மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 25 நவம்பர் 1998 (வயது 85) புது தில்லி, இந்தியா |
துணைவர் | ஊர்மிளா சாப்ரு |
பிள்ளைகள் | நந்திதா அக்சர், அனாமிகா அக்சர் |
பி. என். ஹக்சர் இந்திய காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மற்றும் வெளிநாட்டவர் எண்ணெய் நிறுவனங்களை நாட்டுடமை ஆக்க்கும் திட்டத்திற்கு அரசுக்கு பெரிதும் வழிகாட்டியாக இருந்தார். 1971-இல் வங்காளதேச விடுதலைப் போர் வெற்றிகரமாக அமைய, ருசியாவின் ஆதரவைப் பெற்று தந்தவர். பி. என். அக்சர் இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே சிம்லா ஒப்பந்தம் ஏற்பட காரணமாக இருந்தவர் ஆவார்.
அக்சர் எழுதிய ஆங்கில நூல்கள்
தொகு- Premonitions (1979)
- Reflections on our Times (1982)
- One more Life (1990)
- Genesis of Indo-Pakistan Conflict on Kashmir
- Haksar Memorial Vol-1Contemplations on the Human Condition
- Haksar Memorial Vol-2 Contribution in Remembrance
- Haksar Memorial Vol-3 Challenge for Nation Building in a world in turmoil
- Nehru's Vision of Peace and Security in Nuclear Age
- Studies in Indo-Soviet Relations
மேற்கோள்கள்
தொகு- ↑ "Indian Embassy, Vienna, Austria". Indian Embassy, Govt of India. Archived from the original on 22 September 2013. பார்க்கப்பட்ட நாள் 18 August 2012.
- ↑ "Goodreads Authors".
- ↑ "Online Shopping site in India: Shop Online for Mobiles, Books, Watches, Shoes and More - Amazon.in".