பி. கோதைநாயகி
பி. கோதைநாயகி (B. Codanayaguy) இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் மின்னணு மற்றும் கருவிமயமாக்கல் துறையின் பொறியாளர் ஆவார். செயற்கைக்கோள் ஏவுதல்களில் பயன்படுத்தப்படும் திட இராக்கெட் மோட்டர்களுக்கான கட்டுப்பாட்டு அமைப்புகளின் கருவிக்கு இவர் பொறுப்பாவார். 2017ஆம் ஆண்டில் புதுதில்லி குடியரசுத் தலைவர் இல்லத்தில் இந்தியாவில் பெண்களுக்கான மிக உயர்ந்த விருதான, நாரி சக்தி விருது இவருக்கு வழங்கப்பட்டது.
பி. கோதைநாயகி | |
---|---|
![]() 2017இல் கோதைநாயகி | |
தேசியம் | ![]() |
கல்வி | அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர் |
பணி | பொறியாளர் |
பணியகம் | இந்திய விண்வெளி ஆய்வு மையம் |
அறியப்படுவது | இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் நீண்ட நாள் பணி பெண் பொறியாளர் |
இந்தியாவில் புதுச்சேரி நகரைச் சேர்ந்த இவர், [1] இந்தியாவில் முதல் விண்வெளி ஏவுதல்களைப் பார்த்த பிறகு தான் ஒரு பொறியியாலாளராக முடிவு செய்தார். இவர் கோவையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டம் பெற்றார். இவரது முதல் வேலை 1984இல் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்தது. [2] அங்கு, இவர் ஆக்மென்ட் செயற்கைக்கோள் ஏவும் விண்கலத்தில் பணிபுரிந்தார்.
தொழில்
தொகுமின்னணு, கருவிமயமாக்கல் & கட்டுபாடுகளைக் கவனிக்கும் தரப் பிரிவின் குழுத் தலைவரானார். [3] சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் எரிபொருள் மற்றும் பற்றவைப்புகள் சோதிக்கப்படும் இடத்தில் பணிபுரிந்தார்.
சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் முப்பது ஆண்டுகள் பணியாற்றிய பிறகு , முனைய துணைக்கோள் ஏவுகலம் சி 37 பயணத்தின்போது இவரும் இவரது குழுவும் போலார் செயற்கைக்கோள் ஏவுதல் வாகனத்தில் திட ராக்கெட் மோட்டார்கள் பிரிவில் வேலை செய்யத் தொடங்கினர்[4] இது 2017 பிப்ரவரி 15 அன்று 104 செயற்கைக்கோள்களை சூரிய-வட்டச் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக வைத்தது. [5] தனது வேலையில் தன்னை சுதந்திரமாக வெளிப்படுத்த முடிந்தது என்றும், பாலியல் தொடர்பான பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றும் இவர் கருத்து தெரிவித்துள்ளார். [2]
அங்கீகாரம்
தொகுமார்ச் 2017 இல், இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து ஒரு விருதைப் பெற தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று விஞ்ஞானிகளில் ஒருவராக இருந்தார். அதில் சுபா வாரியர், அனட்டா சோனி ஆகியோர் மற்ற இருவராவர். [4] 2017 ஆம் ஆண்டு அனைத்துலக பெண்கள் நாள் அன்று, இவருக்கு புது தில்லியில் குடியரசுத் தலைவர் இல்லத்தில் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி நாரி சக்தி விருது வழங்கினார். [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Rai, Arpan (March 8, 2017). "International Women's Day: 33 unsung sheroes to be awarded Nari Shakti Puraskaar". India Today (in ஆங்கிலம்). Retrieved 2020-04-06.
- ↑ 2.0 2.1 Srikanth, Manoj Joshi and B. R. (2017-02-26). "India's rocket women". Deccan Chronicle (in ஆங்கிலம்). Retrieved 2020-04-06.
- ↑ admin (2017-03-10). "Nari Shakti Puraskar 2016". UPSCSuccess (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-04-06.
- ↑ 4.0 4.1 Rai, Arpan (March 8, 2017). "International Women's Day: 33 unsung sheroes to be awarded Nari Shakti Puraskaar". India Today (in ஆங்கிலம்). Retrieved 2020-04-06.
- ↑ "PSLV-C37 / Cartosat −2 Series Satellite – ISRO". www.isro.gov.in. Archived from the original on 2019-12-11. Retrieved 2020-04-06.
- ↑ "Nari Shakti Awardees- | Ministry of Women & Child Development | GoI". wcd.nic.in. Retrieved 2020-04-06.