பி. சதிதேவி

இந்திய அரசியல்வாதி

பி. சதிதேவி (P. Sathidevi)(பிறப்பு 29 நவம்பர் 1956) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்தியாவின் பதினான்காவது மக்களவை உறுப்பினராக இருந்தவர் ஆவார்.[1] இவர் கேரளாவின் வடகரா தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். சதிதேவி இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினராக உள்ளார். இவர் அக்டோபர் 1, 2021 முதல் கேரள மகளிர் ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றி வருகிறார். சதிதேவி இப்போது இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மத்தியக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பி. சதிதேவி
P. Sathidevi
தலைவர், கேரள மகளிர் ஆணையம்
பதவியில் உள்ளார்
பதவியில்
1 அக்டோபர் 2021 (2021-10-01)
முன்னையவர்எம். சி. ஜோசபின்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
 ()–2009 (2009)
முன்னையவர்ஏ. கே. பிரேமாஜம்
பின்னவர்முல்லப்பள்ளி ராமச்சந்திரன்
தொகுதிவடகரை மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 நவம்பர் 1956 (1956-11-29) (அகவை 67)
தலச்சேரி, கண்ணூர் மாவட்டம், கேரளம், இந்தியா
தேசியம்இந்திய மக்கள்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்(கள்)
எம். தாசன்
(தி. 1984; இற. 2002)
வாழிடம்(s)வடகரை (கேரளம்), கோழிக்கோடு
கல்விஇளங்கலைச் சட்டம்
முன்னாள் கல்லூரிஅரசு சட்டக் கல்லூரி, கோழிக்கோடு
தொழில்வழக்கறிஞர்
As of 23 செப்டம்பர், 2006
மூலம்: [1]

வாழ்க்கை

தொகு

சதிதேவி, குன்கிராமனுக்கும் தேவியம்மாவுக்கும் மகளாகக் கேரளாவின் தெளிசேரியில் நவம்பர் 29, 1956ஆம் ஆண்டு பிறந்தார். இவர் இளங்கலை படிப்பினை பிரென்னன் கல்லூரியிலும் இளங்கலை சட்டப்படிப்பினை கோழிக்கோடு சட்டக் கல்லூரியிலும் முடித்தார். சதிதேவி 1984ல் எம். தாசனை மணந்தார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Current Lok Sabha Members Biographical Sketch". 2006-06-22. Archived from the original on 22 June 2006. பார்க்கப்பட்ட நாள் 2021-05-27.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சதிதேவி&oldid=3685869" இலிருந்து மீள்விக்கப்பட்டது