பி. வி. ராமன்

பெங்களூர் வெங்கட ராமன் (Bangalore Venkata Raman) (1912 ஆகத்து 8 - 1998 திசம்பர் 20) இவர் நவீன இந்தியாவில் ஒரு இந்திய சோதிடரும் ஏராளமான புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியவருமாவார். வேத அல்லது இந்து சோதிடத்தை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் அறியவும் மதிக்கவும் இவர் கருவியாக இருந்தார். இவரது மகன்களான நிரஞ்சன் பாபு மற்றும் சச்சிதானந்தா பாபு ஆகியோரின் உதவியுடன், சோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திர அறிவை மேம்படுத்துவதற்காக இராமன் & இராசேசுவரி ஆராய்ச்சி அறக்கட்டளையையும் தொடங்கினார். [1] [2]

பெங்களூர் வெங்கட ராமன்
பிறப்புவெங்கட்ரமனையா
(1912-08-08)8 ஆகத்து 1912
பெங்களூர், இந்தியா
இறப்பு20 திசம்பர் 1998(1998-12-20) (அகவை 86)
பெங்களூர், இந்தியா
தேசியம்இந்தியன்
பணிசோதிடம்
அறியப்படுவதுசோதிடமும் அறிவியலும், சோதிட இதழ்
உறவினர்கள்நிரஞ்சன் பாபு, இராமன் சுப்ரஜாரமா, சச்சினாந்த பாபு

தொழில்

தொகு

இவர், 1936 ஆம் ஆண்டில் சோதிட இதழை மறுதொடக்கம் செய்தார். இது முன்னர் 62 ஆண்டுகளுக்கும் மேலாக அதன் ஆசிரியராக இருந்த இவரது தாத்தாவால் நடத்தப்பட்டது. இவரது மரணத்திற்குப் பிறகு, இந்த இதழ் 2007 திசம்பர் வரை இவரது மகன் நிரஞ்சன் பாபு மற்றும் இவரது மகள் காயத்ரி தேவி வாசுதேவ் ஆகியோரால் பெங்களுரிலிருந்து நடத்தப்பட்டது. இது இப்போது நிரஞ்சன் பாபுவால் சோதிட மின் இதழ் என மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. [3]

இங்கிலாந்தின் கேம்பிரிட்ச்சில் நடைபெற்ற சோதிட மாநாட்டிலும், நியூயார்க்கில் நடந்த சர்வதேச சோதிட மாநாட்டிலும் இவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். உலகம் முழுவதும் பயணம் செய்த இவர், ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா, ஆலந்து, கனடா, யப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் எண்ணற்ற சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். சோதிடத்தின் பல்வேறு அம்சங்களில் இந்து வானியல், தத்துவம் மற்றும் இந்திய கலாச்சாரம் போன்றவற்றை பல்கலைக்கழகங்கள், மருத்துவ சங்கங்கள் மற்றும் கல்வி மற்றும் கலாச்சார நிறுவனங்களிலும் உரையாற்றினார். . 

1968 ஆம் ஆண்டில், அகில பாரதீய சமசுகிருத மாநாட்டில் இவருக்கு இலக்கிய முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. 1976 சூன் மாதத்தில் குமாவோன் பல்கலைக்கழகம் (உத்தரப் பிரதேசம்) இவருக்கு கடிதங்களின் முனைவர் என்ற பட்டம் வழங்கியது. [4]

1970 களில் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையில், நவீன காலங்களில் சோதிடத்தின் சம்பந்தம் என்ற சொற்பொழிவை முதன்முதலில் நிகழ்த்தினார். இது இராஜதந்திர வட்டங்களில் அதிக ஆர்வத்தைத் தூண்டியது. சோதிடம் ஒரு அறிவியல் என்று இவர் வலியுறுத்தினார். 

பெங்களூர், சென்னை, தில்லி, கான்பூர், திருவனந்தபுரம், பட்னா மற்றும் பிற நகரங்களில் சோதிட ஆய்வு மற்றும் நடைமுறையை ஒழுங்குபடுத்துவதற்காக இவர் 1984 ஆம் ஆண்டில் இந்திய சோதிட அறிவியல் சபை] ஒன்றை நிறுவினார். [5]

1992 அக்டோபரில், சான் பிரான்சிஸ்கோவின் சான் ரஃபேலில் உள்ள டொமினிகன் கல்லூரியில் நடைபெற்ற வேத சோதிடம் தொடர்பான முதல் சர்வதேச மாநாட்டில் முக்கிய உரையை வழங்குவதற்காக அமெரிக்காவிற்கு சென்ற இவர், [6] மாநிலங்களில் இந்திய சோதிடம் பற்றிய ஆய்வை ஒழுங்கமைக்கஒரு தேசிய அமைப்பின் யோசனையை முன்வைத்தார். அமெரிக்காவில் இந்திய சோதிடம் பற்றிய ஆய்வை பிரபலப்படுத்த உதவும் வகையில் அமெரிக்கர்களின் ஒரு குழு அமெரிக்கரின் வேத சோதிட அமைப்பு இவரது வழிகாட்டுதலின் கீழ் நிறுவப்பட்டது. 1993-2003 வரை இந்த அமைப்பின் தலைவராக இருந்த டேவிட் ஃப்ராவ்லி என்பவர் இவரது உத்வேகம் மற்றும் வழிகாட்டுதலைப் பற்றி குறிப்பிடுகிறார். [7] இராமன் 1998 இல் பிரித்தானிய வேத சோதிட சங்கத்தின் புரவலர் நிறுவனராக இருந்தார். [8] 2016 இல் வேதசோதிடத்தை பிரேசிலில் பிரபலப்படுத்த உதவும் பல புத்தகங்களையும் மென்பொருட்களையும் போர்த்துகீசியர்களுக்கு மொழிபெயர்த்தார். [9]

ஐதராபாத்தைச் சேர்ந்த பிரபல சோதிடரான திரு கே.வி. மல்லிகார்ச்சுனா ராவ், இவரது பல புத்தகங்களை தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார். சோதிட மின் இதழின் மூத்த ஆசிரியரான இவரது பேரன் ராமன் சுப்ராஜாராமா இவரது ஆளுமையை பின் தொடர்கிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Raman & Rajeswari Research Foundation".
  2. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  3. "We are back as The Astrological eMagazine".
  4. "Gita Today - a different perspective" By Maanoj Rakhit (Yashodharma), page 188
  5. http://www.icasindia.org
  6. The Nakshatras: The Lunar Mansions Of Vedic Astrology.
  7. Astrology of the Seers: A Guide to Vedic (Hindu) Astrology, second edition.
  8. https://www.astrologiaabav.org
  9. "B.V. Raman, Pai da Astrologia Védica Moderna".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._வி._ராமன்&oldid=3070327" இலிருந்து மீள்விக்கப்பட்டது