பீட்
பீட் (/ˈbiːd/ BEED-'; 672/673 – 26 மே 735) அல்லது வணக்கத்திற்குரிய புனித பீட் (இலத்தீன்: Bēda Venerābilis) என்பவர் ஆங்கிலேயத் துறவியும், அறிஞரும் எழுத்தாளரும் ஆவார். இவரின் ஆங்கிலேயத் திருச்சபையின் வரலாறு (Historia ecclesiastica gentis Anglorum) என்னும் படைப்பு இவருக்கு ஆங்கிலேய வரலாற்றின் தந்தை என்னும் பட்டத்தைப் பெற்றுத்தந்தது.
வணக்கத்திற்குரிய புனித பீட் | |
---|---|
நோவான் நற்செய்தியினை மொழிபெயர்க்கும் வணக்கத்திற்குரிய பீட்; ஓவியர் பென்ரோஸ் (அண். 1902) | |
திருச்சபையின் மறைவல்லுநர், துறவி, வரலாற்றாசிரியர் | |
பிறப்பு | c. 673[1][2][3] not recorded, possibly Monkton[1] |
இறப்பு | 26 மே 735 Jarrow, Northumbria[1] |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம் |
புனிதர் பட்டம் | 1899இல் மறைவல்லுநராக அறிவிக்கப்பட்டார், உரோமை by திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ |
முக்கிய திருத்தலங்கள் | Durham Cathedral. |
திருவிழா | 25 மே (மேற்கில்) 27 மே மரபு வழி திருச்சபை |
பாதுகாவல் | எழுத்தாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் |
1899இல் திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ இவரை திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவித்தார். இப்பட்டத்தைப்பெற்ற ஒரே ஆங்கிலேயர் இவராவார். இவர் ஒரு சிறந்த மொழியியலாளரும், மொழிபெயர்ப்பு வல்லுநரும் ஆவார். இவரின் படைப்புகள் திருச்சபைத் தந்தையரின் கிரேக்க மற்றும் இலத்தீன் படைப்புகளை ஆங்கிலோ-சாக்சன் மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக்கின.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Ray 2001, ப. 57–59
- ↑ Colgrave & Mynors 1969, ப. xix
- ↑ Campbell 2004
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: பீட்