பீனைல்பைருவிக் அமிலம்

கீட்டோ அமிலம்

பீனைல்பைருவிக் அமிலம் (Phenylpyruvic acid) என்பது C6H5CH2C(O)CO2H என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மேலும் இதுவொரு கீட்டோ அமிலமுமாகும்.

பீனைல்பைருவிக் அமிலம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-ஆக்சோ-3-பீனைல்புரோப்பேனாயிக் அமிலம்
வேறு பெயர்கள்
பீனைல்பைருவேட்டு; 3-பீனைல்பைருவிக் அமிலம்; கீட்டோ-பீனைல்பைருவேட்டு; பீட்டா- பீனைல்பைருவிக் அமிலம்
இனங்காட்டிகள்
156-06-9 Y
ChEBI CHEBI:30851 N
ChemSpider 972 N
InChI
  • InChI=1S/C9H8O3/c10-8(9(11)12)6-7-4-2-1-3-5-7/h1-5H,6H2,(H,11,12) N
    Key: InChIKey=BTNMPGBKDVTSJY-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 997
  • C1=CC=C(C=C1)CC(=O)C(=O)O
பண்புகள்
C9H8O3
வாய்ப்பாட்டு எடை 164.16 g·mol−1
உருகுநிலை 155 °C (311 °F; 428 K) (சிதைவடையும்)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தோற்றம்

தொகு

பீனைல்பைருவிக் அமிலம் அதன் எ-மற்றும் ஒ-ஈனால் அமைப்பு மாற்றியங்களுடன் சமநிலை கொண்டுள்ளது. பீனைல் அலனின் சேர்மத்தை ஆக்சிசனேற்ற அமீன் நீக்க வினைக்கு உட்படுத்துவதால் இச்சேர்மம் விளைபொருளாகக் கிடைக்கிறது.

தயாரிப்பு

தொகு

பென்சால்டிகைடு மற்றும் கிளைசின் வழிப்பெறுதிகளை ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதால் பீனைல் அசுலாக்டோன் உற்பத்தி செய்யப்பட்டு, பின்னர் அது அமிலம் அல்லது கார வினையூக்கியால் நீராற்பகுக்கப்பட்டு பீனைல்பைருவிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது[1]. பென்சைல் குளோரைடை இரட்டைக் கார்பனைலேற்றம் செய்தும் இதைத் தயாரிக்க இயலும்[2][3].

பீனைல்பைருவிக் அமிலத்தை ஒடுக்கச் சிதைவு அமீனேற்றம் செய்தால் பீனைல் கிளைசின் கிடைக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Carpy, Alain J. M.; Haasbroek, Petrus P.; Oliver, Douglas W. "Phenylpyruvic acid derivatives as enzyme inhibitors: Therapeutic potential on macrophage migration inhibitory factor" Medicinal Chemistry Research 2004, volume 13, pp. 565-577.
  2. Wolfram, Joachim. "Preparation of α-keto-carboxylic acids from acyl halides". Google Patents US4481368 & US4481369. Ethyl Corporation.
  3. Werner Bertleff; Michael Roeper; Xavier Sava (2007). "Carbonylation". Ullmann's Encyclopedia of Industrial Chemistry: pg.19. doi:10.1002/14356007.a05_217.pub2. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீனைல்பைருவிக்_அமிலம்&oldid=2751369" இலிருந்து மீள்விக்கப்பட்டது