பீம் பிரசாத் தாகல்

இந்திய அரசியல்வாதி

பீம் பிரசாத் தாகல் (Bhim Prasad Dahal) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சிக்கிம் சனநாயக முன்னணி கட்சியின் தலைவராக இருந்த இவர் ஓர் எழுத்தாளராகவும் அறியப்படுகிறார். பீம் பிரசாத் தாகல் சிக்கிம் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களவை உறுப்பினராக பணியாற்றினார். 11, 12 மற்றும் 13 ஆவது மக்களவைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

பீம் பிரசாத் தாகல்
Bhim Prasad Dahal
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1996–2004
முன்னையவர்தில் குமாரி பண்டாரி
பின்னவர்நகுல் தாசு ராய்
தொகுதிசிக்கிம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பீம் பிரசாத் தாகல்

(1954-11-02)2 நவம்பர் 1954
திம்பர்பாங்கு, சிக்கிம் இராச்சியம்
இறப்பு6 மார்ச்சு 2022(2022-03-06) (அகவை 67)
கேங்டாக், சிக்கிம், இந்தியா
அரசியல் கட்சிசிக்கிம் சனநாயக முன்னணி
வாழிடம்புது தில்லி
முன்னாள் கல்லூரிடார்ச்சிலிங்கு அரசு கல்லூரி, வடக்கு வங்காள பல்கலைக்கழகம்
வேலைவிவசாயி, பத்திரிகையாளர்

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

பீம் பிரசாத் தாகல் மேற்கு சிக்கிம் மாவட்டத்தில் உள்ள திம்பர்பாங்கில் பிறந்தார். மாவட்ட தகவல் அலுவலராக அரசுப் பணியில் சேர்ந்த இவர், பின்னர் மாநில அரசின் துணைச் செயலாளராக ஆனார். ஓர் எழுத்தாளராகவும் இருந்தார், நேபாளி எழுத்தாளர்களுக்கான சாகித்ய அகாடமி விருதை இவரது துரோகா (2006) என்ற நாவலுக்காகப் பெற்றார். [2] [3]

6 மார்ச் 2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 6 ஆம் தேதியன்று சிறுநீரக செயலிழப்பால் காங்டாக்கில் உள்ள சர் துடோப் நம்கியால் நினைவு மருத்துவமனையில் தாகல் தனது 67 ஆவது வயதில் இறந்தார் [4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Members Bioprofile -". பார்க்கப்பட்ட நாள் 26 December 2017.
  2. "Former Sikkim MP Bhim Prasad Dahal dead" (in ஆங்கிலம்). 6 March 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-03-09.
  3. Droha : sāmājika upanyāsa (in நேபாளி). 2006.
  4. "Sikkim : SDF Will Constitute Committee To Assemble Literary Works Of Late MP - Bhim Dahal" (in en-US). Northeast Today. 2022-03-08. https://www.northeasttoday.in/2022/03/08/sikkim-sdf-will-constitute-committee-to-assemble-literary-works-of-late-mp-bhim-dahal/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீம்_பிரசாத்_தாகல்&oldid=3822871" இலிருந்து மீள்விக்கப்பட்டது