புகைநிறக் கழுகு ஆந்தை
புகைநிறக் கழுகு ஆந்தை | |
---|---|
புகைநிறக் கழுகு ஆந்தை, பரத்பூர் இந்தியா | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | லெசன், 1881
|
இனம்: | கெ. கோரோமண்டா
|
இருசொற் பெயரீடு | |
கெடுபா கோரோமண்டா லாந்தம், 1790 |
புகைநிற கழுகு ஆந்தை ( Dusky eagle-owl ) என்பது தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவில் பரவலாக உள்ள ஸ்ட்ரிஜிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆந்தை இனமாகும். இந்த இனத்தை விவரிக்கப் பயன்படுத்தப்பட்ட வகை மாதிரி சோழ மண்டலக் கடற்கரையில் சேகரிக்கப்பட்டது. இதனால் இதன் விலங்கியல் பெயரில் அடைமொழியாக கோரமண்டல் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது.[2] இது செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த இனத்தின் வாழிட எல்லை 9,250,000 சதுர கிலோமீட்டர் (3,370,00 சதுர மைல்) என மதிப்பிடப்பட்டுள்ளது.[1] எவ்வாறாயினும், eBird.org போன்ற தன்னார்வத் தொண்டு தரவுத்தளங்கள், தங்களுக்கு கிடைக்கக்கூடிய தரவுகளின் படி இதைவிட மிக அதிகமான பரப்பளவில் இவை காணப்படுவதாகக் கூறுகின்றன.
வகைபிரித்தல்
தொகுஇந்த இனத்தை முதன்முதலில் ஜான் லாதம் 1790 இல் ஸ்ட்ரிக்ஸ் கோரமண்டா என்று விவரித்தார். இது தெற்காசியாவில் உள்ள துணையினமாகும். 20 ஆம் நூற்றாண்டில், பின்வரும் துணையினங்கள் விவரிக்கப்பட்டுள்ளன:[2]
விளக்கம்
தொகுபுகைநிறக் கழுகு ஆந்தை என்பது ஒரு பெரிய சாம்பல்-பழுப்பு நிற ஆந்தை ஆகும். முக்கியமாக காதுக் குஞ்சங்களுடன் உள்ளது. இதன் அடிப்பகுதி சாம்பல் கலந்த வெள்ளை நிறத்திலும் சில அடர் பழுப்பு நிறக் கோடுகளுடனும் இருக்கும். மேலும் இதன் கரும் பழுப்பு நிற இறக்கைகளில் சில வெண்மையான கோடுகள் இருக்கும். இது கிளையினமான K. c. klossii போலவே உள்ளது, ஆனால் இது மிகவும் இருண்டது மற்றும் இறக்கைகள் மற்றும் தோள்பட்டைக்குரிய பகுதிகளில் வெண்மையான திட்டுக்கள் காணப்படவில்லை. இறக்கைகள் நீளம் 380-435 மிமீ, வால் நீளம் 187-224 மிமீ. இருக்கும்.
பரவலும் வாழ்விடமும்
தொகுபுகைநிறக் கழுகு ஆந்தை பாக்கித்தான், இந்தியா, நேபாளம், வங்காளதேசம் முதல் மியான்மர், தாய்லாந்து, மலேசியா, சீனா வரை காணப்படுகிறது.[1] தீபகற்ப மலேசியாவில், சிலாங்கூர், பேராக், பகாங், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டு இலையுதிர்காலத்திற்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது எண்ணெய்ப் பனைத் தோட்டங்களில் இது காணப்படுவது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது காடுகள், மரங்கள் நிறைந்த ஈரநிலங்கள், பரந்து விரிந்த தோப்புகள், மரங்களைக் கொண்ட வேளாண் பகுதிகள், பழைய பெரிய மரங்களைக் கொண்ட சாலையோரப் பகுதிகளில் வாழ்கிறது.[2]
நடத்தையும் சூழலியலும்
தொகுபுகைநிறக் கழுகு ஆந்தைக்கு பகல் வெளிச்சமானது அவ்வளவு தொந்தரவாக இல்லை. இருப்பினும் பிற்பகல் நேரத்தில் சூரியன் மறைவதற்கு சற்று முன்பே தன் இருப்பிடத்தில் இருந்து வெளிப்பட்டு இரைதேடக்கூடியது. மேகமூட்டமான நாட்களில் நாள் முழுவதும் இரை தேடித் திரியும்.[2]
இவற்றிற்கு நவம்பர் முதல் ஏப்ரல் வரை அடைகாக்கும் பருவம் ஆகும். திசம்பர் மற்றும் சனவரி மாதங்களில் பெரும்பாலும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகிறது.[2] புகைநிறக் கழுகு ஆந்தைகள் ஆல், அத்தி, அரசு முதலான பெரிய மரங்களில் மற்ற பெரிய பறவைகளின் குச்சிக் கூடுகளைப் பயன்படுத்துகின்றன.[4] அரியானாவில், இனப்பெருக்கம் செய்யும் ஆந்தை ஜோடிகள் வெண்கழுத்து நாரைகளின் கூடுகளை மீண்டும் பயன்படுத்துகின்றன.[4]
புகைநிறக் கழுகு ஆந்தை இனம் உலகில் மிகக் குறைவாக ஆய்வு செய்யப்பட்ட ஆந்தை இனங்களில் ஒன்றாகும். மேலும் இதன் உயிரியல் பற்றிய பெரும்பாலான தகவல்கள் துண்டுத் துணுக்கான தகவல்களிலிருந்தே பெறப்பட்டடுள்ளன.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 BirdLife International (2016). "Bubo coromandus". IUCN Red List of Threatened Species 2016: e.T22688992A93213395. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22688992A93213395.en. https://www.iucnredlist.org/species/22688992/93213395. பார்த்த நாள்: 3 February 2022.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 König, C.; Weick, F. (2008). Owls of the world. London: Christopher Helm. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7136-6548-2.
- ↑ Nils Carl Gustaf Fersen Gyldenstolpe (1920). "A Nominal List of the Birds at present known to inhabit Siam". The Ibis. Eleventh 2 (4): 735–780. https://archive.org/details/ibis1121920brit/page/751.
- ↑ 4.0 4.1 Sundar, K S Gopi; Ahlawat, Rakesh; Dalal, Devender Singh; Kittur, Swati (2022). "Does the stork bring home the owl? Dusky Eagle-Owls Bubo coromandus breeding on Woolly-necked Stork Ciconia episcopus nests". Biotropica 54 (3): 561–565. doi:10.1111/btp.13086. https://onlinelibrary.wiley.com/doi/full/10.1111/btp.13086.
வெளி இணைப்புகள்
தொகு- BirdLife International (2018). "Dusky Eagle Bubo coromandus". BirdLife International. பார்க்கப்பட்ட நாள் 2013-06-15.
- "Dusky Eagle-owl (Bubo coromandus)". The Internet Bird Collection.