புண்டரிகபுரம் கோயில்

கேரளத்தின், கோட்டயம் மாவட்டதில் உள்ள கோயில்

புண்டரிகபுரம் கோயில் (Pundareekapuram Temple) என்பது என்பது கேரளத்தின், கோட்டயம் மாவட்டத்தின், தலயேலப்பரம்பு அருகில் உள்ள ஒரு கோயில் ஆகும். கட்டடக்கலையில் இது கேரளத்தின் பொதுவான கிராம கோவிலிலிருந்து வேறுபட்டதல்ல. ஓடு வேய்ந்த கூரையானது "சுட்டம்பலம்" என்னும் சதுரமான கருவறையை மூடியுள்ளது. இந்த கருவறையில் விஷ்ணு தனது வாகனமான கருடன்மீது பூதேவியுடன் சேர்ந்து அமர்ந்திருக்கிறார். இது ஒரு ஒரு அரிய தோற்றமாகும்.

புண்டரிகபுரம் கோயில்

இக்கோயிலானது சுவரோவியங்களுக்கு பெயர்பெற்றது. இந்த ஓவியங்களில் கற்பக மரத்தின் அடியில் சிவனும், பார்வதியும் அமர்ந்திருப்பது போன்ற ஓவியம் ஒரு சிறந்த ஓவியமாகும்; துர்க்கை மகிசாசூரனை வதம் செய்தல், ஆயர்பாடியில் கிருஷ்ணனின் குறும்புகள்; புராணங்களில் குறிப்பிடப்படும் கவர்ச்சியான யட்சினிஷியின் ஓவியம்; இராமரின் பட்டாபிசேகம்; சிவ தாண்டவ ஓவியம், சாஸ்தாவின் ஓவியம் போன்றவை குறிப்பிடத்தக்க ஓவியங்களாகும்.

இக் கோயில் உள்ள சுவரோவியங்கள் ஒப்பீட்டளவில் தெளிவற்றவையாகவே இருக்கின்றன. என்றாலும் இந்த ஓவியங்கள், பத்மனாபபுரம் மற்றும் மட்டஞ்சேரி அரண்மனைகளின் சுவர்-ஓவியங்களுக்கு சவால்விடக்கூடிய இடத்தில் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. இந்த சுவரோவியங்கள் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வரையப்பட்டிருக்க சாத்தியக்கூறுகள் உள்ளன.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புண்டரிகபுரம்_கோயில்&oldid=3221673" இலிருந்து மீள்விக்கப்பட்டது