புதுக்கோட்டை தடி கொண்ட அய்யனார் கோவில்
தடி கொண்ட அய்யனார் கோவில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை நகரில் சத்தியமூர்த்தி பகுதியில் உள்ள அய்யனார் கோயில் ஆகும். இக்கோவிலுக்கு சொந்தமான திடல் புதுக்கோட்டை தடி கொண்ட அய்யனார் திடல் என அழைக்கப்படுகிறது. இத்திடலில் நகருக்குள் போராட்டங்கள் நடைபெற அனுமதியளிக்கப்படுகிறது. [1]
தடி கொண்ட அய்யனார் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | புதுக்கோட்டை |
அமைவு: | புதுக்கோட்டை நகரம் |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோவில் உருவாக்கம்
தொகுபுதுக்கோட்டை சமஸ்தானத்தில் திவானாக இருந்த சேசையா சாஸ்திரிகள் என்பவர் புதுக்கோட்டை நகரை சீரமைத்தார். மார்த்தாண்ட பைரவபுரம் என்ற பெரிய தெருவை உருவாக்கும் போது ஒரு ஆலமரமும் அதனடியில் சாஸ்தா கோயிலும் தடையாக இருந்தன. அவற்றை நீக்கி புதுக்கோயிலை வேறொரு இடத்தில் கட்டியுள்ளார். [2]
முன்னொரு காலத்தில் கலசமங்களம் என்ற பெயரில் தற்போதைய புதுக்கோட்டைக்கு கிழக்கே பொற்பனைக்கோட்டை பகுதியில் புதுக்கோட்டை நகரமே இருந்ததாக பல்வேறு சான்றுகள் உள்ளன. இப்புதிய நகரின் காவல் தெய்வமாக கலசமங்களம் பகுதியிலேயே பிடிமண் எடுத்து கட்டப்பட்டுள்ள கோவிலே தடி கொண்ட அய்யனார் திருக்கோவில் ஆகும்.
சிறப்பு
தொகுபுதுக்கோட்டை மன்னர் ஒவ்வொரு ஆண்டும் இக்கோயிலின் திருவிழாவின் போது அருள்வாக்கு கேட்ட பின்னரே அவ்வாண்டின் பணிகளை திட்டமிடுவார் என்று கூறப்படுகிறது. 1960 ஆம் ஆண்டு வரை விலங்குகள் பலியிடும் வழக்கம் இக்கோயிலில் இருந்துள்ளது. அதன் பின்னர் பலியிடும்விழா நிறுத்தப்பட்டு தற்போது சைவ படையல் முறையே பின்பற்றப்படுகிறது.
பேட்டையார் சமுதாய மக்களினால் காணிக்கையாக வழங்கப்பட்ட ஒற்றைக்கல்லால் செய்யப்பட்ட யானை சிலை கோவில் முன்பு உள்ளது.
ஆதாரங்கள்
தொகு- ↑ சின்னதுரை, அருண் (14 ஜூலை, 2017). "புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி வழங்கியது நீதிமன்றம்". https://www.vikatan.com/.
{{cite web}}
: Check date values in:|date=
(help); External link in
(help)|website=
- ↑ "தடி கொண்ட ஐயனார்". Dinamalar. 30 ஜன., 2017.
{{cite web}}
: Check date values in:|date=
(help)