பொற்பனைக்கோட்டை

பொற்பனைக்கோட்டை புதுக்கோட்டைக்கு கிழக்கே சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள பழமையான முற்றிலும் சிதிலமடைந்த செங்கல் கோட்டையாகும்.[1][2]

பொற்பனைக்கோட்டை
பகுதி: தமிழ்நாடு
புதுக்கோட்டை, தமிழ்நாடு, இந்தியா
சிதிலமடைந்த பொற்பனைக்கோட்டை மதிற்சுவர்
வகை கோட்டை
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது தொல்லியல் துறை

அமைப்பு

தொகு
 
பொற்பனைக்கோட்டை பெயர்பலகை

இக்கோட்டையைச் சுற்றி இடிந்த நிலையில் மதில்சுவர் செங்கற்கள் குவிந்து காணப்படுகின்றன. கோட்டையைச் சுற்றி நான்கு நுழைவாயில்கள் இருந்ததற்கான தடயங்கள் காணப்படுகிறது. கோட்டையினுள்ளே அகழி இருந்ததற்கான அடையாளங்களும் ஒரு குளமும் காணப்படுகிறது. கோட்டையானது மையத்தில் வட்ட வடிவில் இருந்ததற்கான சுவடுகளும் காணப்படுகின்றன. இதை அரண்மனைத்திட்டு என்ற பெயரில் உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர். கோட்டையின் வட்ட வடிவ அமைப்பு செயற்கை கோள் புகைப்படத்தில் தெளிவாகத் தெரிகிறது. இக்கோட்டையில் சுரங்கம் ஒன்று இருப்பதாகவும், அது இங்கிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள திருவரங்குளம் வரை செல்வதாகவும் உள்ளூர் மக்களால் நம்பப்படுகிறது.

 
பொற்பனைக்கோட்டைக்குள் சுரங்கம் இருப்பதாக சொல்லப்படும் பகுதி

மரபுவழிக் கூற்றுகள்

தொகு

நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கார்குறிச்சி (திருக்கட்டளை), சிங்கமங்கலம் முதலான பகுதிகளில் படைகள் தங்கி இருந்ததாகக் கல்வெட்டுகள் (711,683) தெரிவிக்கின்றன. தொண்டைமான்கள் புதுக்கோட்டை நகரைப் புதிதாக அமைத்த பின்பு புதுக்கோட்டை, பொற்பனைக்கோட்டை முதலான ஊர்கள் படைகள் தங்கும் இடங்களாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் இக்கோட்டையில் இருந்த பனைமரத்தில் தங்க பனம்பழம் காய்த்ததாகவும் அதனால் பொற்பனைக்கோட்டை என அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இக்கோட்டையின் வரலாறாக உள்ளூர் மக்கள் செவிவழிச் செய்திகள் சிலவற்றையும் கூறுகின்றனர்.

தொல்பொருள் கண்டுபிடிப்புகள்

தொகு

2012 ஆம் ஆண்டு இந்தக் கோட்டையிலுள்ள குளக்கரையில் பழந்தமிழ் கல்வெட்டுகளுடன் கூடிய நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நடுகல் தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகத்தில் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் துறையில் வைத்துப் பாதுகாக்கப்பட்டுள்ளது. இக்கல் முக்கோண வடிவில் 2 அடி நீளமும் 2 அடி உயரமும் 10 செமீ பருமனுடையது. கோட்டைச் சுவருக்கு வெளியே பாறைப் பகுதியில் வட்டமாகவும், நீளமாகவும் சுடுமண் வார்ப்புக்குழாய்கள், உருக்கு கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[2]

ஆலயங்கள்

தொகு

இக்கோட்டையின் நான்கு திசைகளிலும் நான்கு கோயில்கள் உள்ளன. கோட்டையின் கிழக்குப்பகுதியில் கீழக்கோட்டை ஆதி முனீஸ்வரர் கோயில், மேற்கு பகுதியில் மேலக்கோட்டை முனீஸ்வரர் கோயில், வடக்குப் பகுதியில் காளியம்மன் கோயில், தெற்கே ஐயனார் கோயில் உள்ளது.[2]

ஒளிக்கோப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. பொற்பனைகோட்டை அகழ்வாய்வில் வெளிப்பட்ட செங்கல் கட்டுமானம்-தினமணி, நாள்: மே 26, 2023
  2. 2.0 2.1 2.2 "தமிழ் இந்து".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொற்பனைக்கோட்டை&oldid=3846571" இலிருந்து மீள்விக்கப்பட்டது