புதுச்சேரியின் கொம்யூன்களின் பட்டியல்
புதுச்சேரியில் (Puducherry) 10 கொம்யூன்கள் உள்ளன.[1] இவற்றுள் ஐந்து கொம்யூன்கள் புதுச்சேரி மாவட்டத்திலும் ஐந்து கொம்யூன்கள் காரைக்கால் மாவட்டத்திலும் உள்ளன.
புதுச்சேரி மூன்று கோட்டங்கள், ஐந்து நகராட்சிகள், பத்து கொம்யூன்களைக் கொண்டுள்ளது. பத்து கொம்யூன்களும் 98 கிராம ஊராட்சிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கொம்யூன்களின் நிர்வாகக்கட்டுப்பாடு புதுச்சேரி அரசின் உள்ளாட்சித்துறையின்கீழ் உள்ளது.[2] ஒரு கொம்யூனின் நிர்வாகத் தலைவர் ஆணையராவார். கொம்யூன் அலுவலங்களில் பிறப்பு/இறப்புகள் பதிவுகளுடன் குறிப்பிட்ட சில அனுமதிச்சீட்டுகளும் வழங்கப்படுகின்றன.[3][4][5]
கொம்யூன்களின் பட்டியல்
தொகுபுதுச்சேரி மாவட்டம் இரண்டு வட்டாரங்கள் (blocks), ஐந்து கொம்யூன்கள் மற்றும் 71 ஊராட்சிகள், அடங்கியது.
அரியங்குப்பம் வட்டாரம்
தொகுஅரியாங்குப்பம் வட்டாரத்தில் மூன்று கொம்யூன்கள் உள்ளன:
- அரியாங்குப்பம் கொம்யூன் - 11 ஊராட்சிகள்
- பாகூர் கொம்யூன் - 15 ஊராட்சிகள்
- நெட்டப்பாக்கம் கொம்யூன் - 11 ஊராட்சிகள்
வில்லியனூர் வட்டாரம்
தொகுவில்லியனூர் வட்டாரத்தில் இரண்டு கொம்யூன்கள் உள்ளன:
- வில்லியனூர் கொம்யூன் - 18 ஊராட்சிகள்
- மண்ணாடிப்பட்டு கொம்யூன் - 16 ஊராட்சிகள்
காரைக்கால் மாவட்டம்
தொகுகாரைக்கால் மாவட்டம் ஒரு வட்டாரம், ஐந்து கொம்யூன்கள், 27 ஊராட்சிகள் கொண்டது.
காரைக்கால் வட்டாரம்
தொகுகாரைக்கால் வட்டாரத்திலுள்ள ஐந்து கொம்யூன்கள்:
- கோட்டுச்சேரி கொம்யூன் - 5 ஊராட்சிகள்
- நெடுங்காடு கொம்யூன் - 4 ஊராட்சிகள்
- நிரவி கொம்யூன் - 4 ஊராட்சிகள்
- திருநள்ளாறு கொம்யூன் - 9 ஊராட்சிகள்
- திருமலைராயன்பட்டினம் கொம்யூன் - 5 ஊராட்சிகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2017-12-08. பார்க்கப்பட்ட நாள் 2020-04-26.
- ↑ "Lanka BBC Info Know Puducherry: Government Name Pondicherry As Puducherry". lankabbc.com. 2012-06-29. Archived from the original on 2 February 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-01-24.
- ↑ "Local Administration-Departments-Know Puducherry: Government of Puducherry". Py.gov.in. 2012-06-29. Archived from the original on 2020-05-08. பார்க்கப்பட்ட நாள் 2016-12-10.
- ↑ "Union Territory of Puducherry State Election Commission : Electoral Statistics". Sec.puducherry.gov.in. Archived from the original on 2017-02-13. பார்க்கப்பட்ட நாள் 2016-12-10.
- ↑ "District Rural Development Agency". Drda.puducherry.gov.in. Archived from the original on 2016-12-20. பார்க்கப்பட்ட நாள் 2016-12-10.